மாட்டை அறுத்து உண்கின்ற முஸ்லிம்கள் எப்படி ஜல்லிக்கட்டை ஆதரிக்கலாம்  என்கிறாரே பா.ஜ.க.,வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா?

ஆர்.சதாசிவம், சென்னை-4.

முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த நினைத்த சங்பரிவார கும்பலின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர் தமிழக  மக்கள். அதனால் ஆரிய ஆணவம் தலைக்கேரி வீரியமாக விஷம் கக்கியுள்ளார் எச். ராஜா. இஸ்லாமிய வழிமுறைப்படி உணவுக்காக அறுக்கப்படும் ஆடு,மாடு,ஒட்டகம், கோழி,சேவல், உள்ளிட்டவை அறவே  வலியை உணர்வதில்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

உணவுப் பழக்கத்தின் மூலம் இன இழிவைச் சுமத்துவது எச்.ராஜா வகையராக்களுக்கு,பரம்பரையான வழிமுறை. தாவரங்களை கால்நடைகளும்,கால்நடைகளை மனிதர்களும் உண்பதுதான் உணவுச் சங்கிலியின் சுழற்சி. அறிவியலுக்கு எதிரான வர்ணாசிரமத்தை, வருங்காலத்திலும் வாழ வைத்து, வஞ்சிக்கப்பட்ட மக்களை மேலும் வதைக்க விரும்பும் சாதி ஆணவம் பிடித்த ராஜாவுக்கு உரிய பாடத்தைத் தமிழர்கள் புகட்டு வார்கள்.

இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள்,இன்னபிற மதத்தினர் எம்மதமும் சாராதவர்கள் என எல்லோருமே மொழியால் தமிழர்களே. இவர்களை சாதியின் பெயரால் வர்ணாசிரமம் கூறுபோட்டது, மதத்தின் பேரால் சங்பரிவாரம் கூறுபோட முயல்கிறது.  தமிழ்நாட்டில் இவர்கள் சந்தித்த படுதோல்வி இவர்களைப் பதற வைக்கிறது. கதற வைக்கிறது...

மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வோரில் ஜைன சமூகத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் உள்ளனர் என்று நரேந்திர மோடி 2014 தேர்தலின் போது ஏபிபி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.உ.பி. மாநிலம் சார்தானா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

மாட்டிறைச்சி ஏற்றுமதி  செய்யும் நிறுவனங்களிலிருந்து ரூ2.5 கோடி நன்கொடையைப் பெற்றதாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. இப்படியாக மாட்டிறைச்சியால் கொளுத்து வாழும் பாஜகவின் ராஜாவிற்கு பாரம்பரிய உரிமையை மீட்க தமிழராய் களத்தில் நிற்கும் முஸ்லிம்களை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை. 


Magazine - Other articles

Who's Online

We have 77 guests and no members online