பாஜகவின்  பாகிஸ்தான் எதிர்ப்பு,  முனை மழுங்கிப்   போய்விட்டதே...    கவனித்தீர்களா ?  கி.பா.ஹமீதுதீன் துபாய்  (மின்னஞ்சல் வழியாக)

பாகிஸ்தானை எதிர்த்துதான் இந்தியா தனது அரசு  நிர்வாகத்தையும் செல்வாக்கையும்    நிலை நிறுத்த வேண்டும் என்ற  அவசியமில்லை.   மக்கள் தொகையிலும்  தொழில் நுட்பம் , ராணுவம் ,  பொருளாதாரம் மற்றும் இன்னபிற   அம்சங்களிலும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு    இணையான   நாடே அல்ல.  

அண்டை நாடு என்றால்  சண்டை  நாடாகத்தான் இருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை.  அமெரிக்க  ஐக்கிய நாடுகளும்,கனடாவும் போல , பிரிட்டனும் பிரான்சும் போல,  (இவ்வளவுக்கும்  பிரிட்டனும்  பிரான்சும்  நூற்றாண்டு கால  பகை நாடுகளாக முதலாம் உலகப்போருக்கு முன்பு  இருந்தவை தான் )

 சவூதி அரேபியாவும், குவைத்தும்  போல  நலன் பேணும்  நட்பு  நாடுகளாக  இந்தியாவும்  பாகிஸ்தானும் நிச்சயம் விளங்கிட முடியும். ஆனால் இருதரப்பிலும்  உள்ள  குறுகிய  மனம் படைத்தோர் சிறு  பிணக்கையும் பெரிதாக்கி நெருங்கவே  முடியாதவாறு  செய்துவிட்டார்கள். நம் நாட்டு  தரப்பில் சங் பரிவார் கொள்கைக்  குன்றுகள் (?) இந்த  வேலையை தீவிரமாக செய்தார்கள்.

 மத்தியில்  யார்  ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை  பாகிஸ்தான் விஷயத்தில் மிகவும் மென்மை போக்கை  கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி  அவமானப்படுத்துவார்கள். இவர்களின்  அரசியல் நிர்பந்தத்திற்கு  வளைந்து இரு நாட்டு நட்பை  வலுப்படுத்தும் வாய்ப்பு  வந்தாலும் கூட அதனை  மேம்படுத்தும் முயற்சியில்   அந் தந்த கால  கட்டத்தில்  ஆள் வோர் இறங்காதற்கு இவர்களே காரணம். ஆனால்  வாஜ்பாய் ஆட்சியில்  பாகிஸ் தானுக்கு   பஸ் விட்டார்கள் ,  மோடி  ஆட்சி  வந்த  போது தனது பதவியேற்பு  விழாவுக்கு பாகிஸ்தான்  பிரதமர்  சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்பட்டார். இதனை  தவறாக  கூறிவிட  முடியாது. என்றாலும் காங்கிரஸ் ஆட்சியில்  ஐநாவில் நவாஸ் ஷரீ பை மன்மோகன் சிங் சந்தித்த போது பாஜகவினர்  செய்த  ரகளைகள், ஆர்ப்பாட்டங்கள் கொஞ்ச  நஞ்சமல்ல.

 பாஜகவினர் தமது  ஆட்சியில் வரலாறு  காணாத அளவில் பாகிஸ்தானோடு இணங்கிப் போனார்கள் என்பதற்கு  ஏராளமான  சான்றுகள்  வரலாறு நெடுகிலும்   காணக்கிடக்கின்றன . 

1971  ல்  நிகழ்ந்த இந்திய  பாகிஸ்தான் போர்க்குப்பிறகு  நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜனதா ஆட்சியில்  பாகிஸ்தானுக்கு  சென்ற முதல்  இந்திய  வெளியுறவு  அமைச்சர் பாஜகவின்  மூத்த தலைவரான  அடல்  பிஹாரி வாஜ்பாய்,  1999ல் இந்திய  விமானம் கடத்தப்பட்டபோது கடத்தல் கார தீவிரவாதிகளின் மிரட்டலுக்குப்  பயந்து மசூத் அசார்  உள்ளிட்டோரை  விடு தலை செய்து  அவர்களை  அன்றைய  வெளி யுறவுத்துறை  அமைச்சர் ஜஸ்வந்த்  சிங்கே  நேரிடையாக ஒப்படைத்த சம்பவம்  மறக்க  கூடியதா என்ன?.

 ஜின்னாவை புகழ்ந்து சின்னாபின்னமானார்   அத்வானி  . ஆர்  எஸ் எஸ்ஸின்   அப்போதைய  தலைவர் சுதர்சனம்  ஜின்னாவுக்கு  புகழாரம்  சூட்டினார். ஜஸ்வந்த்  சிங் தனது  நூலில் ஜின்னாவை வானளாவப்   பாராட்டித்  தள்ளி-யுள்ளார். ஏன்  இவர்களுக்கு  இந்த  இரட்டை வேடம்  என்று  கேட்க  தோன்றுகிறதல்லவா? பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர்   பாகிஸ்தானிலிருந்து  வந்தேறிகளாக இந்தியாவுக்குள்  புகுந்தவர்கள் என்பதால் அவர் களுக்கு அந்த பாசம்  கூடுதலாக   இருக்கிறதோ  என்னவோ?    கடந்த கால  அரசியல் வரலாறு மட்டுமல்ல. 

தற்போது பிரதமர் நரேந்திர  மோடியும்,  மக்கள் பிரதமர்(!) அதானியும்  பாகிஸ்தானுடன் கன்னா பின்னாவென  நெருக்கம் பாராட்டுவதாக சர்வ தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.    நவாஸ் ஷரீப்  பாகிஸ்தானின்  அரசு  நிறுவனங்களை திவாலானவை  என  பட்டியலிட்டு வாங்கி  குவிக்கிறாராம். அதேபோல்  அந்நாட்டில்  எந்த  முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி  வைக்கப்பட்ட மின்  திட்டங்கள்  பல  உண்டாம். 

அந்த  இடங்களில் நம்ம மக்கள் பிரதமர்(!)  அதானியின்  நிறுவனங்கள்  உள்ளே  குதிக்கின்றன.  இவர்களின்  பாகிஸ்தான்  பாசம்  புரிந்து விட்டதா.


Magazine - Other articles

Who's Online

We have 71 guests and no members online