இரண்டும் பல ஒற்றுமைகளை  மட்டுமல்ல சில வேற்றுமைகளையும்  கொண்டுள்ளன    என்பதுதான்  உண்மை. தஹ்ரீர் , மெரினா இரண்டு  பகுதிகளிலும்   திரண்ட  இளையவர்  பட்டாளம்  ஜனவரி  மாதம் தான் திரண்டனர்.  

தமிழ்ப்படை ஜனவரி 2ம் வாரத்தில்  புழுதி  பறக்க  திரண்டனர் . தஹ்ரீர்   சதுக்கத்தில் எகிப்திய   வல்லாதிக்கத்தை எதிர்த்த  இளையோர்  பட்டாளம் ஜனவரி  25ம்   தேதி திரண்டனர். ஜனவரி 25ல் தொடங்கி பிப்ரவரி 11ல்  முடிவுக்கு வந்தது . 2 வாரங்கள் , இரண்டு நாட்களும்   நடந்தது. மெரினா கடல் புரட்சி  7 நாளில்   முடிந்து    ஏழரையை ஆரம்பித்து வைத்தது   

தஹ்ரீர் புரட்சி தலைநகர் கெய்ரோவில் ஒன்று கூடி 31 ஆண்டுகால சர்வாதிகாரியின்  கொடுங்கோலாட்சியை  30 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளாமல்   இரண்டே   வாரத்தில்  முடிவுக்கு கொண்டு வந்து   கொடுங்கோலன் ஹோஸ்னி   முபாரக்கை  ஓட விட்டனர். மெரினா காளைகள் தமிழ் மக்களின் நீண்ட கால    குமுறல்கள்  ஆளும்  மத்திய  அரசின்   மாற்றாந்தாய் மனபோக்கு  கண்டு களமாட துணிந்தவர்கள் . மோடி அரசுக்கு எதிராகவும் மோடி அரசுக்கு  வால்  பிடித்து  பின்னால்  அலையும் ஓ பி எஸ் அரசுக்கு   எதிராகவும் அற   சீற்றத்துடன்   வெகுண்டனர். தஹ்ரீர் புரட்சி  சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு   கட்டியது. ஆனால் மெரினா ஆட்சி மாற்றம் குறிக்கோள் அல்ல. மாற்றங்களை ஜனநாயக வழிமுறையில்   ஆள்வோர் செய்து கொள்ள  வாய்ப்பளித்த   களம்.  

தஹ்ரீரில் திரண்டவர்கள்    அடைந்த வெற்றி  ஓராண்டு  கூட  நிலைக்கவில்லை.. மெரினா புரட்சி அதனை   எதிர்த்தவர்கள் கூட  இணைய , இளைய காளைகள்  பெற்றது   சந்தேகமே இல்லை  இது வெற்றிஎன்கிறார்கள் இரு தரப்பு  இளம் குருத்துக்களும் பாரம்பரிய , பழம்பெருமை  கொண்ட  இனத்தை  சேர்ந்தவர்கள்     மெரினா காளைகள்  , தஹ்ரீர்  இளைஞர்கள்    என இருவருக்கும்   தாய் மொழி  உயர் தனி செம்மொழி கள்தான்.  ஆம்  மெரினாவில்   விண்ணதிர  எதிரொலித்தது. செந்தமிழ். தஹ்ரீரில்  வானை முட்டியது    அரபு மொழி. தஹ்ரீர் புரட்சியில் 846 பேர் கொல்லப்பட்டனர். 6000 பேர் படுகாயமடைந்தனர். 90 காவல்நிலையங்கள்  எரிக்கப்பட்டன. (இதை  யார் எரித்திருப்பார்கள் என்பது உலகம் அறிந்த ரகசியம் அல்லவா) மெரினாவில்? பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இன்னும் அவர்களின் (?)  கணக்கு முடியவில்லையாம்.


Magazine - Other articles

Who's Online

We have 73 guests and no members online