கமல் தற்போது ஓவராக சவுண்டு விடுகிறாரே?  அவருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதா?. 

அ. அப்துல்ரஹீம்,  மணப்பாறை. 

வந்து விட்டது. அண்மையில் அவருக்கு காலில் அடிப்பட்டு  ஓய்வில்  இருந்தார்.  உண்மையில் அவருக்கு அடிபட்டது  காலிலா அல்லது மண்டையிலா என்ற ஐயம் சில அரசியல்   பார்வையாளர்களால்  தற்போது எழுப்பப்படுகிறது. 

 பாஜகவை தமிழகத்தில் நம்பர் ஒன்  கட்சியாக கொண்டு வந்து விடவேண்டும் என  ஒரே குறிக்கோளுடன்   ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று மோடி தேநீர்  அருந்தி  ஸ்டண்ட்  அடித்து பார்த்தார் .   மாநில  தலைமை உங்களுக்காக காத்திருக்கிறது என்றார். 

பிழைப்புக்காக ஸ்டண்ட்  அடிக்கும் மோடியின் பாச்சா பிறவியிலே ஸ்டண்ட்  அடிக்கும்  ரஜினியிடம் பலிக்கவில்லை . விஜயகாந்திடம் கட்சியை இணையுங்கள் தலைமை உங்களுக்கு தான் என ஆசை காட்டினார்கள். போயும் போயும்  தமிழிசை நாற்காலிக்கு விஜயகாந்த் ஆசைப்படுவாரா என்ன?  கட்சிப் பெயரில் திராவிட என இருப்பதினாலோ என்னவோ அவரும்  சாமர்த்தியமாக நழுவினார். 

பாஜகவினர் எந்த அளவிற்கு நொந்து போயுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணமாக  கமலுக்கு தூண்டில் போடப்படும் முயற்சியை கூறுகிறார்கள்  அரசியல் விமர்சகர்கள். சுருக்கமாக கூறினால் கமல் பாஜகவுக்கு சென்றால் தமிழ்நாடு தப்பிக்கும்,  பாஜக சிக்கிக்கும்.  உங்களின் கேள்விக்கு கவிஞர் அறிவுமதியின் இந்தக் கவிதையும் பதிலை அளிக்கின்றது:

அவர் பிறந்த

இனத்திற்கு

அவர் உண்மையாக

உழைக்கிறார்.

அதைத்

தீக்குச்சி

நெருப்பாக ஏற்று

நம் இன அரசியல் 

அகல்களில்

நம்பிக்கைச் சுடர்களை

ஏற்றுவோம்

அவருக்கு

நன்றி சொல்லி!

கையலாகாதவர்களா

தமிழர்கள்?

நாகரிகத்தோடு

இரண்டாயிரம்

ஆண்டுகால

வலிகளோடு

உங்களோடு

உங்கள் இனக் கொடுமைகளை

விவாதிக்க நாங்கள் தயார்.

நீங்கள் தயாரா கமல் அய்யா?

அழைப்பது

மாடு மேய்க்கும் 

புலையன் நந்தன்

ஓமந்தூரார் மகன்

மூதறிஞரால் சுட்டுக்

கொல்லப்பட்ட

அப்பாவி விவசாயத் தமிழன்... 


Magazine - Other articles

Who's Online

We have 42 guests and no members online