நீங்கள்  குறிப்பிட்ட ஒவ்வொரு  சொற்களும்  மோடி முகாமில் இருந்து  புறப்பட்டு வந்தன. பெரிய வித்தகர்கள் போல்  வார்த்தை விளையாட்டு விளையாடி மாட்டிக்கொண்டு திருதிருவென முழிக்கிறார்கள். 

கப்ருஸ்தான்   மற்றும்  சுடுகாடு  என்ற இரண்டை வைத்தும் பிரி வினை  விஷம  விளையாட்டை  உத்திர பிரதேச வாக்காளர் களிடையே விவாதமாக வைத்தார் மோடி.  கப்ருஸ்தான் இருப்பதைப்போல சுடுகாடும்  இருக்கவேண்டும்  என   ஹிந்து முஸ்லிம்  மக்களிடையே பிளவினை உண்டாக்கி ரத்தம் ஒட  வைத்து வாக்கு அறுவடை செய்ய மோடி  பாதேப்பூரில்  தனது  தேர்தல் பரப்புரையில் கொளுத்தி போட்டார். 

அதோடு விட்டாரா?  ரமலானில் இருப்பதைப்போல் தீபாவளியில் மின்சாரம்  விநியோகிக்கப்படவேண்டும்.  அதாவது அகிலேஷ் யாதவ் ஆட்சியில் கப்ருஸ்தான் பெருமளவில்  முஸ்லிம்களுக்கு  ஏற்படுத்தப்பட்டது. ஹிந்துக்களுக்கு சுடுகாடு அந்தளவு வழங்கப்படவில்லை  ரமலான் காலத்தில் மின்சாரம் வழங்கப்படும் அளவு தீபாவளியில் வழங்கப்படுவதில்லை என்ற பச்சைப்பொய்யை பரப்பி வாக்குகளை குவித்து விடலாம் என மனப்பால் குடித்து இந்த வசனங்களை  மேடையில் வாசித்து இருந்தார்.

அதற்கு எம்.ஐ.எம்  தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைஸி கொடுத்த பதிலடியில்  மோடி முகாம்  கொஞ்சம்  ஆடித்தான் போனது. ஒவைசி  தனது கட்சி வேட்பாளரை  ஆதரித்து தெற்கு அலகாபாத்தில் பேசும்போது மோடி முதல் அமைச்சராக இருந்தபோது 2002ல்  நடந்த குஜராத் இனப்படுகொலையின் போது  தீபாவளியையோ ரம்ஜானையோ  மக்கள்  கொண்டாடினார்களா?  நீங்கள் கொண்டு வந்த செல்லா நோட்டு விவகாரத்தால் 150க்கும்  மேற்பட்ட மக்கள் வங்கி  வாசலில் இறந்தனரே  அவர்கள்  கப்ருஸ்தான் அல்லது  சுடுகாட்டுக்கு  சென்றதை  நீங்கள்  உணர்ந்து  இருக்கிறீர்களா?  என ஒவைசி  ஆவேச கேட்டார்.  மோடியின் மத உணர்வு பரப்புரை அண்மையில்  உச்சநீதிமன்றம்  வெளியிட்ட கருத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்துக்கு செல்வோம்  என காங்கிரசும் முண்டாதட்டுகின்றன. இந்நிலையில் அகிலேஷும் மாயாவதியும்  மோடியை   பிளந்து கட்டுகிறார்கள்  .  

அமிதாப்பச்சனை  நோக்கி அகிலேஷ் கீழ்கண்டவாறு வேண்டுகோள் வைக்கிறார். குஜராத் கழுதைகளுக்காக   நீங்கள் பேசவேண்டாம் என்கிறார் .  மேலோட்டமாக பார்த்தால் குஜராத்தை  சேர்ந்த பாஜக தேசிய தலைவர் மற்றும்  நாட்டின் தலைமை அமைச்சரை  கடுமையான வார்த்தையால்   விமரிசிப்பது  போல் தோன்றும்  ஆனால் அகிலேஷ் பெயர் குறிப்பிடவில்லை.  அகமதாபாத்தில்   காட்டுக்கழுதைகளுக்கான சரணாலயம் ஒன்று உண்டு. குஜராத் மாநில சுற்றுலாத்துறை அந்த காட்டுக்கழுதை சரணாலயத்தை  பிரபலப்படுத்த அமிதாப்பச்சனை விளம்பர தூதுவராக நியமித்துள்ளது. அதனை குறிப்பிடுவது போல அகிலேஷ் அமிதாப்பின் பாஜக ஆதரவு கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார். உத்திர பிரதேச வாக்காளர்களில்  பெரும்பான்மையோருக்கு அஹ்மதாபாத்தில் இப்படி ஒரு காட்டுக்கழுதை சரணாலயம் இருப்பதோ அதற்கு அமிதாப் பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதையோ அறியமாட்டார்கள்.   குஜராத் கழுதைகள் என்று  அகிலேஷ் குறிப்பிடுவது  யாரை?  மோடியையா?  அமித்ஷாவையா? ரிசர்வ்  வங்கி  ஆளுநர் உர்ஜித்  பட்டேலையா? அதானியையா? ஜியோ சிம் புகழ்  அம்பானியையா?  என்று உத்திர பிரதேச  சந்து பொந்துகள் வரை விவாதம் நடக்கிறதாம்.

 வாய்வீச்சில்  வல்லவர்  என பெரியளவில் பேசப்படும் பிரதமர் மோடியை 43  வயது அகிலேஷ் வாயடைக்க செய்து விட்டார். அமித்ஷா செல்வி  மாயாவதியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார்.க=காங்கிரஸ்,  சா=சமாஜ்வாடி,  ப்=பகுஜன் சமாஜ்  என புதிய  எழுத்து விளையாட்டை அமித்ஷா  தேர்தல் பரப்புரை மேடைகளில் சொல்லிக்கொண்டே வந்தார்.  இநிலையில் அமித்ஷா நாட்டின் மிகப்பெரிய  பயங்கரவாதி என ஒரே போடு  போட்டுள்ளார்  மாயாவதி.  சொற்போர்  விளையாட்டில்  பாஜக வெலவெலத்து போய்  கிடக்கிறது.


Magazine - Other articles

Who's Online

We have 52 guests and no members online