கட்சிக்கு எம் ஜி ஆர்,  ஜெயலலிதா பெயரோடு உங்க பெயரையும்  சேர்த்து வையுங்கள் என்று சொல்லியிருப்பார்கள் போலும் அதை  இந்த தீபா  அப்படியே எடுத்துக்கொண்டு எம் ஜி ஆர் அம்மா தீபா என  பேரை வைத்து   விட்டார். 

தமிழக அரசியல் வரலாற்றில்  தனது பெயரை வைத்து கட்சி ஆரம்பித்தவர்  தீபா மட்டும் தான். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம் ஜி ஆர் வேறு படுத்தி  காட்டுவதற்காக  மறைந்த தனது தலைவர் அண்ணா பெயரை  தான் தொடங்கிய கட்சிக்கு வைத்தார். எம் ஜி ஆர் அம்மா  தீபா  பேரவை   நேரடி அர்த்தம் எடுத்துக்கொண்டு தீபாவோட புள்ள   தான் எம். ஜி.ஆரா?  அப்போ சத்தியாபாமாவுக்கு எம் ஜி ஆர்   தத்து பிள்ளையா என்றெல்லாம் கேட்கக்கூடாது 

தமிழ் நாட்டில்  மட்டும் தான் இது போன்ற அவலங்கள் நடக்கும். எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை என்பதை ஆங்கிலத்தில் சுருக்கி  வாசியுங்கள்    வேடிக்கையாக  இருக்கும். 

பதவி,  பேராசை, அதிகார போட்டிக்காக உறவு  சாதி என்ற   சலுகையையும் பெண் என்ற உரிமையையும்  பயன்படுத்துவதை  ஏற்றுக்கொள்ள முடியாது .

 


Magazine - Other articles

Who's Online

We have 40 guests and no members online