குறைந்த கல்வியறிவு, மிகுந்த ஏழ்மை நிலை கொண்ட உ பி  மாநில மக்களை செல்லா நோட்டு விவகாரம் வெகுவாக  பாதிக்கவில்லை. அவர்களுக்கும் வங்கிகளுக்கும்  பெருமளவு தொடர்பு இல்லை. அதைவிட மிக முக்கிய விஷயம் என்னவெனில் மாநிலத்தின்  கிராமப்புறங்களில்  ஏழை மக்கள் வாழும்  புற  நகரங்களில் சங்பரிவார அமைப்புகள்  பணக்காரர்களின் கொட்டத்தை அடக்க மோடிஜி கொண்டுவந்த புரட்சி திட்டமே பண மதிப்பிழப்பு அறிவிப்பு  என்று கூறி  நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினருக்கு எதிரான பகையுணர்வை  தூண்டி கொழுந்து விட்டு எரிய செய்தனர். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு  இரண்டு கண் போகவேண்டும் என்ற ஆதி காலத்து   பொறாமை   கொள்ளும்  டெக்னிக்  இங்கே  வேலை செய்திருக்கிறது. பண மதிப்பில் பாதிக்கப்பட்ட பனியாக்களிடையே மோடி சரக்கு விற்பனை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிரந்தர பலன் கிடைக்கும் என்று கூறி அவர்களும் மூளைச் சலவை செய்யப்பட்டனர். கூட்டம் சேர்ப்பதில் கவனம் செலுத்திய ராகுலும் அகிலேஷ்சும் திட்டமிட்டு மோடி ஆட்சியின் பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர். 

மேலும் பாஜகவை எதிர்த்து களம்  கண்ட  கட்சிகள்  எல்லாம்  மோடிக்குப் பதில் சொல்ல மட்டுமே காலத்தை செலவிட்டனர்.  மோடி  முகாமை நோக்கி கேள்விக்கணைகளை வீசி திணறடிக்கவில்லை. என்பது  குறிப்பிடத்தக்கது.


Magazine - Other articles

Who's Online

We have 70 guests and no members online