நடந்து முடிந்த  5 மாநில தேர்தல் முடிவுகளை  வைத்து  மோடி மீண்டும் 2019 ல் பிரதமராக  வந்து விடுவார் என்று கூறி பாஜகவினர் கடுமையாக அலப்பறை  செய்கிறார்களே?  

 அ கலீலூர் ரஹ்மான், திருவாரூர். (மின்னஞ்சல் வழியாக)

மோடி ஆட்சி மீண்டும் வரும் என்று பாஜகவினர் மட்டுமா கூறுகிறார்கள்?  மோடி வகையறாக்களிடம்  அன்பளிப்பு பெறும்   பல ஊடகங்களும் தான்  கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன? மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் டெல்லி, பிகார், மகாராஷ்டிரா,  ஹரியானா, உ.பி., உத்தரகண்ட், கோவா,  மணிப்பூர்,  பஞ்சாப்,  என  9  மாநிலங்களில் நடந்த தேர்தல்களில்  மகாராஷ்டிரா,  உ பி, உத்தரகண்ட், ஹரியானா என 4  மாநிலங்களில் மட்டுமே அவர்கள் வென்றுள்ளனர். அதுவும் உ பி மற்றும்  மஹாராஷ்டிராவில் கடந்த 15  ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இல்லை. இரண்டு முறையாக உத்தர்காண்ட்டிலும்  ஆட்சியை இழந்து இருந்தார்கள் ஹரியானாவில் ஆட்சியிலேயே இல்லை தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் பெற்ற அதிருப்தி விளைவால் பாஜக கூடாரம்   பலனடைந்தது.  ஆனால்  கூட்டணியாக பஞ்சாப்பிலும் தனியாக கோவாவிலும் ஆட்சியில் இருந்த இவர்கள் ஆட்சியை பறிகொடுத்தார்கள்.  இம்மாதம் முடிந்த  5  மாநில தேர்தல்களில் 3ல் தோற்றவீ  இவர்கள்  குறிப்பாக காங்கிரஸிடம் படுதோல்வியடைந்து இருக்கிறார்கள். கோவாவிலும்  மணிப்பூரிலும் குதிரை பேரத்தின் மூலம்  ஆட்சியைப் பிடிக்க குறுக்குவழியில்  முயல்வதாக தகவல்கள் வருகின்றன.  பாஜக முகாம் மீண்டும்  மோடி  ஆட்சிக்கு  வருவார் என மார்தட்டலாம். 

ஆனால் இந்திய மக்கள்  அய்யயோ   மோடி மீண்டும்  வந்து விடுவாரோ என்று கடுப்படைகின்றனர் என்பதே  இந்திய வாக்காளர்களின்  மன  நிலை. அதைத்தான் மோடி ஆட்சிக்கு வந்தபின் நடந்த 9 மாநில தேர்தல்களில் 5ல்  அடைந்த   தோல்விகள்  காட்டுகின்றன


Magazine - Other articles

Who's Online

We have 71 guests and no members online