பெரியாரிய கொள்கை வழி சகோதரர்களும் தமிழகத்தின் விளிம்புநிலை சமூக மக்களும் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒன்றுபட்ட நிலையில் அனைத்து மக்கள் நல போராட் டங்களிலும் களமாடி வருகின்றனர். இந்த ஒற்றுமை கூட்டை சிதைக்க பாசிச கும்பல் பல்வேறு வகைகளில்முயன்று பார்த்தது. ஆதிக்கசக்திகளுக்குஎதிரான போர்க்குரலை ஒடுக்க முடியவில்லை. பல்வேறு முனைகளிலும்தோற்றோடிய ஆதிக்க கும்பல்தந்திரவலையைவீசி கொலைக் கணக்கை தொடங்கியுள்ளது. சூட்சுமம் புரியா சூத்திரர்கள் இரு தரப்பிலும் வார்த்தைகளால்வாள் வீசிக்கொண்டனர். ஆதிக்கசக்திகள் அகமகிழ்ந்தன.


இதில் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை ஒற்றுமையை குலைக்க நினைத்தவர்களின் அடிவயிற்றில் நிச்சயம்புளியை கரைத்திருக்கும். முதிர்ச்சியான அந்தஅறிக்கை ஒருஉண்மையான பெரியாரியவாதியை உலகிற்கு மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டிக்கொண்டேஇருக்கும்.


மனித நேய மக்கள் கட்சி உடனடியாக களத்தில் இறங்கி தோழர் பாருக் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியது. கொலையாளி உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என மமக தலைவர் அறிக்கை வெளியிட்டார். சிறையில் கரண்ட் கம்பி கடித்ததால் தற்கொலை (?) செய்து கொண்ட ராம்குமார் உடலை சுமந்து சென்ற தமுமுகவின் ஆம்புலன்சுதான் பாரூக் உடலையும் சுமந்து சென்றது. மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கோவையில் பாரூக் இல்லத்திற்குச் சென்று பாரூக்கின் தந்தை மற்றும் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாரூக்கின் மகன் எங்கே என்று கேட்டப்போது அந்த சிறுவன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்குச் சென்றிருப்பதாக பாரூக்கின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பாரூக்கின் மகள் கரும்புகடை இஸ்லாமியா பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தாள். பாரூக்கை கொலை செய்த படுபாதகர்கள் அவனது நண்பர்களாகவே இருந்தவர்கள்.


Magazine - Other articles

Who's Online

We have 69 guests and no members online