ஈழ தமிழர்களுக்கு லைகா நிறுவனம் வீடு கட்டிக் கொடுப்பதில் என்ன தவறு? ரஜினி இலங்கை செல்வதை ஏன் தடுக்கவேண்டும்?

மூர்த்தி, ஆழ்வார் திருநகரி. (மின்னஞ்சல் வழியாக )

லைக்கா நிறுவனம் ஈழத் தமிழருக்கு 150 வீடுகள் கட்டிக் கொடுக்கிறது. லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில்ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. . வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை.


லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து. பக்கா அரசியல் ஆகும். தொண்டு நிறுவனம் வீடு கட்டி கொடுப்பது போன்றதல்ல இது. இவர்களுக்கு முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து அந்நாட்டை மீண்டும் கட்டமைக்க பகாசுர முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முதலீடு செய்யலாம் என்று நாட்டாமை செய்தது.


ஆனால் அங்கு சென்று முதலீடு போடும் அளவிற்கு லைக்காவிடம் பொருளாதார பலம் கிடையாது. . ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. "இலவச" வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் உள் நோக்கத்துடன் லைக்கா நகர்த்தும் காய்களுக்கு ரஜினி போன்றோர் ஏன் பலியாகவேண்டும் .


லைக்காவின் மொத்த வருடாந்தர வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுண்ட்ஸ் .பிரிட்டனில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், ஐரோப்பாவில் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைக்கப்படுகிறது. . பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவது, அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இவைகளின் கடமை ஆகும் ஈழத் தமிழர்களுக்கு வெறும் 150 வீடுகளை மட்டுமே கட்டிக்கொடுத்து இவர் மலிவு விளம்பரம் செய்ய ரஜினியை பயன்படுத்திடுவாராம். அதனை தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கவேண்டுமாம்.


லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர நிறவெறி வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எதிரிகளின் தரப்பில் குறிப்பாக ராஜபக்சே தரப்பினருடன் தோளோடு தோள் நின்றவர். அது மட்டுமா இவரது வலது கரம் போன்றவர் , இஸ்ரேலிய அரசுடன் பங்குதாரராக யூத நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். வெளிப்படையாகவே ஈழப்போரை எதிர்க்காத சிங்களவர்களுடன் கைகோர்த்து திரிந்த லைக்கா நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என மறுத்த ரஜினியின் உணர்வு பாராட்டுக்குரியது . இலங்கைப் பயணத்தை புறக்கணிக்கு மாறு வேண்டுகோள் விடுத்த அரசியல் தலைவர்களின் செயல் வரவேற்புக்குரியது.


Magazine - Other articles

Who's Online

We have 23 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu