கேள்வி திருமாவளவன் ஒரு தேசத்துரோகி என்ற ஹெச். ராஜாவின் உளறல் குறித்து? ஜம்ஷித் அலி, கோலாலம்பூர்

திருமாவளவன் குறித்து பாஜகவின் ஹெச்.ராஜா உளறியது பாரம்பரிய பகை , வக்கிர வர்ணாசிரம வெறி மட்டும் காரணம் அல்ல. இன்றைய அரசியல் சூழலில் திருமாவின் அரசியல் நடவடிக்கைகள் ராஜா வகையறாக்களுக்கு எத்தகைய வயிற்றெரிச்சலை, விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை இரண்டு நிகழ்வுகளின் மூலம்விளங்கிக் கொள்ளலாம்.


சங்பரிவார் வளையத்திற்குள் வட இந்திய தலித் தலைவர்கள் மராட்டியத்தின் ரா ம்விலாஸ்அத்வாலே, பீகாரின் ராம் விலாஸ் பாசுவான் மற்றும் டெல்லியில் உதித்ராஜ் உள்ளிட்டவர்கள் வந்துவிட மோடி வட்டாரம்குதூகலத்தில்ஆடினர். இந்தியா முழுவதும்இந்தவகையில்தலித்ஆளுமைகளை தங்கள் ஆதிக்க கூடாரத்திற்குள் கொண்டு வந்து விடலாம் என்ற அவர்களின் பகல் கனவுக்கு திருமா இடையூறாக இருக்கிறார்என்றகடுப்பு . இதைவிடகடந்த வாரம்தமுமுகவின் கருத்தரங்கில்திருமாஆற்றியஉரைசங்பரிவார்வட்டாரத்தைஅதிரச்செய்துள்ளது என்பதை ஹெச்ராஜாவின்பிராண்டலைவைத்து புரியமுடிகிறது. தமிழக தலித்அமைப்புகளில்விடுதலைசிறுத்தைகள் மட்டுமே சங்பரிவார்தொடர்பு சிறிதுகூட இல்லாத அமைப்பு.என அவர்ஆற்றிய உரை உண்மையை தயங்காமல்வெளிப்படுத்தியவிதம்காவிமுகாமின்கதறலைஅதிகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.


தன்னைப்போலவே பிறரையும் நினைக்கும் ராஜாவின் உன்னத (!) எண்ணத்தைப் பாராட்டி தொலைப்போமே.


Magazine - Other articles

Who's Online

We have 24 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu