வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக மோசடி செய்தது உண்மையா? சா. ரவீந்திரன் விழுப்புரம்

பாஜகவுக்கு வாக்குகள் விழும்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது

மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு அனுப்பப்படவிருக்கும் மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை, அம்மாநில தேர்தல் அதிகாரி சலினா சிங் ஆய்வு நடத்தி வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள நான்காம் எண்ணுள்ள பொத்தானை அழுத்தினார். பின்னர் இயந்திரத்திற்குள் இருக்கும் ரசீதை எடுத்துப் பார்த்தபோது அவரும் சுற்றி இருந்த அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். பாஜகவின் தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாயிருந்தது. அது தொழில் நுட்ப தவறாக இருக்கலாம் என நினைத்து ஒன்றாம் எண்ணுள்ள பொத்தானை அவர் மீண்டும் அழுத்தியதும் மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான் வாக்கு விழுந்திருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், அவர் சொன்னார் ஒரு சில வாக்குப் பதிவு இயந்திரங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் சரி செய்துவிடுவோம். இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினைதான் என்று கூறிவிட்டனர். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றும் செய்தியாளர்களை அவர் மிரட்டியுள்ளார்.

தேர்தல் அதிகாரி வாக்களிப்பது அனைத் தும் காணொலியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது எலெக்ட்ரானிக் இயந் திரக் கோளாறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் பாஜகவுக்குச் சாதக மாக மட்டும் எப்படி இயந்திரக் கோளாறு உள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் வலை பதிவிட் டுள்ளார். மின்னணுவாக்கு இயந்திரங் களில் மோசடி செய்துதான் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என மாயாவதி, கெஜ்ரிவால் உட்பட முக்கியமான கட்சி தலைவர் கள் சுட்டிக்காட்டி யது. இச்சம்பவத்தின் மூலம் உண்மையாகியுள்ளது.

இம்மோசடி மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் அம்பலமாகியுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டி ருந்தது. அப்போது எதிர்பாராத வகை யில் நாசிக் நகரின் மத்திய பகுதியான பஞ்சவத்தியில் பதிவான வாக்குகள் 33, 289. ஆனால் 43,324 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

அதனால் வாக்குச்சீட்டு பயன் படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டத் தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர்

மும்பை சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீ காந்த் ஸ்ரீ சத்தி சகிநாகாவில் அவரது "வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட அவருக்கு பதிவாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு நான் ஓட்டுப்போட்டேன். எனது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஓட்டுப்போட்டனர். எப்படி எனக்கு ஒரு ஓட்டுக் கூட பதிவாகாமல் போனது" என கிட்ட தட்ட கதறினார் .

இது குறித்து அவர் கூறுகையில், "மோடியும், அமித்ஷாவும் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்திருப்பதாக சந்தேகம் உள்ளது. அதற்கு ஏற்ப தற்போது பல முறை கேடுகள் வெளிவந்து கொண்டிருக் கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளேன். வாக்களித்தது யாருக்கு என அறிவிக்கும் இயந்திரங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்" என்றார்.நியாயம்தானே.


Magazine - Other articles

Who's Online

We have 55 guests and no members online