கமல் ஹாசன் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆணவ கொலை குறித்து தன் கருத்தை தெரிவித்தார் . ஆணவக்கொலையை கண்டித்த கமல் “மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தில் இருந்து நாம் மீண்டதாகவே தெரியவில்லை. பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம். பெண்களை கவுரவத்தின் அங்கமாக வைத்து, அவர்களை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறோம்” என்று மகாபாரதத்தை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.


அதற்கு பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில ஏடு கமல் ஹிந்துக்களின் இதிகாசத்தை இழிவு படுத்துவதா ? என்று கமல் மீது பாய்ந்தது நியாயம் தான் கண்டிக்க வேண்டியதுதான் . கமல் ஒரு ஆன்டி ஹிந்து . ஹிந்துக்களுக்கு எதிரானவர் என்றும் சாடியது தவறே இல்லை . அது கமல் பாடு பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு பாடு தொலையட்டும் .

அடுத்து சில வரிகளை பார்த்தால் உம்முன்னா மூஞ்சிகளுக்கு கூட சிரிப்பு வந்துவிடும் . கமல்அவருடைய சொந்த மதத்தில் நிலவும் முத்தலாக் போன்ற பிரச்சனைகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்தலாமே என்றும் அந்த பத்திரிகை அறிவுரை கூறி உள்ளது. கமல் யார் எந்த மதத்தை சேர்ந்தவர் அவர் விஸ்வரூபம் படத்தில் ஏன் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார் என்பது கூட தெரியாமல் ஒரு ஆங்கில ஏடு அதுவும் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் ஒரு ஊடகத்தில் ?

நினைவுகளை கொஞ்சம் பின் நகர்த்தி பாருங்கள் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒரு அதி பயங்கர அமைப்பை இவர்கள் தான் கண்டுபிடித்தது போல் எவ்வளவு புளுகுகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

கமல் ஹாசன் பிறந்து 60 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது . கடந்த 7, 8 வருடங்களாக அவரிடம் உள்ள முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்காகவே அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார் என்பது கூட தெரியாமல் என்ன ஒரு விளக்கெண்ணெய் ஆய்வு , ஈர வெங்காய கட்டுரை.

 


Magazine - Other articles

Who's Online

We have 53 guests and no members online