இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதம ரால் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டியின் பணிக் காலம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆய்வுக் கமிட்டி அமைக்கப்பட்டது.

15 மாதம் கமிட்டி தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்துடன் அதன் பணிக்காலம் முடிவடைந்தது. பின்னர் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

நீதியரசர் சச்சார் கமிட்டி பல மாதங்களாக அயராது பணிகளில் ஈடுபட்டது. தகவல்களைத் திரட்டுவதிலும், உண்மைகளை ஆய்வு செய்யும் நோக்கில் நடத்தப் பட்ட பல்வேறு சந்திப்புகளிலும் முஸ்லிம்களின் நிலை, கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் குறிப்பாக தலித் மக்களைவிட மோசமான நிலையில் இருப்பதை சச்சார் கமிட்டி படம்பிடித்துக் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சச்சார் கமிட்டியின் ஆய்வு வெளியாகும்போது தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அரசியல் கட்சிகள், நடுநிலையாளர்கள், சமூகநீதிப் போராளிகள் கடுமையாக வ-யுறுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடினமான பொறுப்பு காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.

சச்சார் கமிட்டியிடம் குஜராத் இனப்படுகொலையில் சிதைக்கப்பட்ட அப்பாவி முஸ்-ம்களின் அவல நிலை குறித்தும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

2002ல் நிகழ்ந்த குஜராத் கோர கலவரத்தால் முஸ்-ம் இளைய தலைமுறையின் கல்வி நிலை மோசமாக வதைக்கப்பட்டுவிட்டது என்பதை சச்சார் கமிட்டியிடம் சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த நிமிடம் வரை ஆயிரக்கணக்கான முஸ்-ம் குடும்பங்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத அவல நிலையை காவித் தீவிரவாதிகள் ஏற்படுத்தி யுள்ளனர். எண்ணற்ற முஸ்-ம்கள் தங்கள் குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதேயில்லை. தங்கள் கண்மணிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதால் அந்த அப்பாவி முஸ்லிம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்பவில்லை.

பொருளாதார நிலையில் குஜராத் முஸ்லிம்கள் 2002ல் நிகழ்ந்த இனப் படுகொலை க்குப் பிறகு முன்னர் இருந்ததைவிட பரிதாபகர நிலையை அடைந்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு வங்கிகளில் கடன் உதவிகள் வழங்கப்படுவதில்லை. முஸ்-ம்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் கூட அவர்களுக்கு கிரடிட் கார்டுகள் வழங்கப்படு வதில்லை.

ஜுஹாபுரா என்ற பகுதியில் இரண்டு லட்சம் முஸ்-ம்கள் வாழ்கிறார்கள். ஆனால் அங்கு ஒரு அரசு சுகாதார நிலையம் கூட இல்லாத நிலை. அந்தப் பகுதியின் வளர்ச்சித் திட்டம் குறித்து எந்தச் சுவடும் அரசிடமிருந்தோ, மாவட்ட நிர்வாகங் களிடமிருந்தோ காண முடியவில்லை.

"முஸ்லிம்கள் அற்ற பகுதியாக' குஜராத் அரசை மாற்ற முயலும் சதிச்செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆய்வுக்குழு பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய ஆய்வுகளின் முடிவு களால் தேசிய பெரும் புயலும் பூகம்பமும் ஏற்படலாம் என சமூகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சச்சார் கமிட்டி அறிக்கையின் முடிவுகள் பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பணிகளில் முஸ்-ம்கள் மிகவும் குறைவான அளவிலே உள்ளனர். இன்னும் விரிவாகக் கூறினால், இல்லாத நிலையே நிலவுகிறது. முஸ்-ம்களின் ஜனத்தொகையோடு ஒப்பிட்டால் அவர்களது வறுமை, கல்வி வாய்ப்பில்லாமை போன்ற நிலையில் முஸ்லிம்கள் வாடுவதை சுட்டிக்காட்டி முஸ்லிம்களின் நலன் குறித்த கவலையை சச்சார் குழுவின் உண்மைகள் தெரிவிக்கின்றன.

முப்பதாண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியிலிருக்கும் மேற்கு வங்காளத்தில் மொத்த ஜனத்தொகையில் முஸ்-ம்கள் 25 சதவீதத்தினர் உள்ளனர். ஆனால் அரசுப் பணிகளில் 4.2 சதவீதமே அவர்கள் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் முஸ்-ம்களின் ஜனத்தொகை யோடு ஒப்பிடும்போது கால்வாசிக்கும் குறைவாகவே அரசுப் பணிகளில் இடம் பெற்றுள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களிலும் இவ்வாறான கவலைக்குரிய நிலையே நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் முஸ்லிம்களின் பணி நிலை கேரளாவில் 9.5 என்ற நிலையிலும், மேற்கு வங்காளத்தில் ஒன்றுமேயில்லாத நிலையே காணப்படுகிறது.

முஸ்-ம்கள் தாஜா செய்யப்படுகிறார்கள் என்பது வரம்பு மீறிய கற்பனையே. முஸ்-ம்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதுகாப்புக்கு கூட உத்தரவாதம் பெற முடியாத நிலையிலே உள்ளனர் என சச்சார் கமிட்டியின் மூத்த உறுப்பினர் தெரிவிக்கிறார்.

மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சிகூட முஸ்-ம்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மேம்பாடு காண உதவ வில்லை.

கர்நாடகா மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 12.2 சதவீதம் உள்ளனர். அரசாங்க வேலை வாய்ப்புகளில் 8.5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர்.

குஜராத் முஸ்லிம்கள் மொத்த ஜனத்தொகையில் 9.1 சதவீதம் பேர் உள்ளனர். வேலை வாய்ப்புகளில் 5.4 சதவீதமாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5.6 சதவீதம் உள்ளனர். வேலை வாய்ப்புகளில் 3.2 சதவீதம் பேர் உள்ளதாக சச்சார் கமிட்டி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இம்மூன்று மாநிலங்களைவிட ஆந்திரம் சற்றுப் பரவாயில்லை, எனினும் முஸ்லிம் களின் அரசு வேலை வாய்ப்புகள் அங்கும் கவலைக்குரிய நிலையிலேயே உள்ளது.

அஸ்ஸாம் ஜனத்தொகையில் முஸ்லிம்கள் 30.9 சதவீதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசு வேலை வாய்ப்புகளில் 11.2 சதவீதமே இடம்பெற்றுள்ளனர். இது முஸ்லிம்களின் ஜனத்தொகையில் பாதிக்கும் குறைவாகும்.

கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதலிடத்தில் திகழும் கேரளாவில் மாநில அரசுப் பணிகளில் 10.4 சதவீத முஸ்லிம்களே இடம்பெற்றுள்ளனர். கேரள முஸ்-ம்களின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால் இது மிகவும் குறைவானதாகும்.

மகாராஷ்ட்ராவில் நல்ல நிலையில் 1.9 சதவீத முஸ்லிம்களே உள்ளனர். பிஹாரி லும் கர்நாடகாவிலும் 8.6 சதவீதம் பேரே ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர்.

சச்சார் கமிட்டி, இதயத்தில் இரத்தம் கசியச் செய்யும் வண்ணம் முஸ்-ம்களின் இன்றைய நிலையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

கிராமங்களில், நகரங்களில் பெண்களின் நிலை ஆண்களின் நிலை போன்றவை குறித்து 1965-ருந்து 2001 வரை உள்ள காலக்கட்டத்தை முழுதாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, இன்னும் சலுகை காட்டப்பட வேண்டி, கருணை காட்டப்பட வேண்டிய சூழ்நிலையில் த-த் மக்களை விடவும் மிகவும் மோச மான நிலையில் முஸ்-ம்கள் இருப்பதே பிரதமரின் உயர்மட்டக் குழுவான ராஜேந்திர சச்சார் குழு சுட்டிக் காட்டுகிறது. நகர்ப்புறங்களில் வாழும் பெண்களின் கல்வி யறிவு விகிதம் 1965ல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் சமூகங்களில் 40 சதவீதமாக இருந்தது.

அதே காலக்கட்டத்தில் நகர்ப்புற முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு விகிதாச் சாரப்படி 52 சதவீதமாக 1965ல் இருந்தது. ஆனால் 2001ல் நகர்ப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் முஸ்-ம் பெண் களைவிட த-த் பெண்கள் 3 சதவீதம் முன்னேறிய நிலையில் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகால ஆய்வின்படி கிராமப்புறங்களி-ருந்து நகர்ப்புறங்களு க்கு முஸ்-ம்கள் இடம்பெயர்ந்தது கூட பெரிய அளவுக்கு அந்த சமூகம் முன்னேற உதவவில்லை என்பது கண்கூடு.

பாதுகாப்புத் துறையிலும் கிட்டத்தட்ட பிரதிநிதித்துவமே இல்லாத நிலை. இந்தியா வின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் தனது உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாதது சோகம்தான்.

சுகாதார வசதிகள் கூட போதுமான அளவில் இல்லாத நிலையில் பழங்குடியினரை விட பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர்.

1983ல் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட கோபால் சிங் கமிட்டி முஸ்-ம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்தது. 500 மாவட்டங்களில் 80 மாவட்டங்களை மட்டும் கோபால்சிங் கமிட்டி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

சச்சார் கமிட்டி ராணுவத் துறையிலும் நீதித்துறையிலும் முஸ்லிம்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே வழங்கப்பட்டிருப்பதையும் விவரிக்கத் தவறவில்லை.

எதிர்வரும் மாதம் சச்சார் கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழ-ல் சச்சார் கமிட்டி இன்றைய முஸ்-ம்களின் பரிதாபகர நிலையை முழுமையாக வெளிப்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபட்டு வருவதாகக் கூறும் மிதவாத கட்சிகளும், முஸ்லிம் கள் தாஜா செய்யப்படுகிறார்கள் என கருணையில்லாமல் கத்தித் தீர்க்கும் மதவாத சக்திகளும் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?


Who's Online

We have 49 guests and one member online

  • ymegywu