முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன்சிங் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்திருந்தார்.

டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர் சையீத் ஹாமித், டாக்டர் டி.கே. ஊமன், எம்.ஏ. பாசித், டாக்டர் ராகேஷ் பசந்த், டாக்டர் அக்தர் மஜீத் மற்றும் டாக்டர் அபூசா-ஹ் ஷரீப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு கடந்த நவம்பர் 17 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தனது அறிக்கை யை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அறிக்கையில் சிறுபான்மையினரான முஸ்-ம்கள் அரசியல் அதிகாரத்தில் பல்வேறு நிலைகளில் பிரதிநிதித்துவம் அளிப்ப தற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ராஜேந்தர் சச்சார் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளன. சச்சார் அறிக்கையின் 12வது அத்தியாயம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.

50,000 முதல் 2,00,000 வரை மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் ஷெட்யூல்ட் சாதியினர் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினரை விட முஸ்-ம்களின் தனிநபர் வருவாய் குறைவாக உள்ளது என்று சச்சார் அறிக்கை தெரிவிக்கிறது. பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முஸ்-ம்களின் மாதாந்திர செலவீனம் ஷெட்யூல்ட் சாதியினர் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினரை விடக் குறைவாக இருக்கிறது என்று சச்சார் அறிக்கை தெரிவிக் கிறது.

அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்-ம் களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவாக இருப்பதையும் சச்சார் குழு தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது. உதாரணமாக, 25.2 சதவீதம் முஸ்-ம்கள் வாழும் மேற்கு வங்காளத்தில் அரசுப் பணியாளர்களில் 4.2 சதவீதம் மட்டுமே முஸ்-ம்களாக உள்ளனர். 24.7 சதவீதம் முஸ்-ம்கள் வாழும் கேரளாவில் அரசுப் பணியாளர் களில் 10.4 சதவீதத்தினர் மட்டுமே முஸ்-ம்கள் ஆவர். இதேபோல் 30.9 சதவீதம் முஸ்-ம்கள் வாழும் அஸ்ஸாமில் அரசுப் பணியாளர்களில் 11.02 சதவீதம் மட்டுமே முஸ்-ம்கள் ஆவர்.

பாரம்பரியமாக முஸ்-ம்கள் செய்து வரும் கைவினைத் தொழில்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக சச்சார் குழு அறிக்கை கூறுகிறது. உதாரணமாக அ-கரில் பூட்டு தொழிலும், குஜராத்தில் பட்டம் (காத்தாடி) செய்யும் தொழிலும் ந-வடைந்துள்ளதாக சச்சார் அறிக்கை கூறுகிறது.

சமவாய்ப்பு ஆணையம்

அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளிலும், அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களிலும் சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சமவாய்ப்பு ஆணையம் (ஊவ்ன்ஹப் ஞல்ல்ர்ழ்ற்ன்ய்ண்ற்ஹ் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய் -ஊஞஈ) அமைக்க வேண்டும் என்று சச்சார் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசு அதிகாரத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்

சச்சார் குழு அறிக்கையின் 9வது அத்தியாயம் அரசு அதிகாரத்தில், அதாவது ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை முஸ்-ம்களின் பிரதிநிதித்துவத்தை அதிக ரிக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத் துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் அரசு அதிகாரத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அரசு அதிகாரத்தின் அனைத்து நிலைகளிலும் முஸ்-ம்களின் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பது இந்திய சமூகத்திற்கும் அரசியலுக்கும் நல்லதல்ல என்று சச்சார் குழு தெரிவிக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள் உருப்படியான பங்களிப்பு ஆற்றுவதற்குத் தேவையான வாய்ப்பு முஸ்-ம்களுக்கு இல்லை என்று சச்சார் அறிக்கை கூறுகிறது. இந்த நிலையை சீர்திருத்துவதற்காக அரசியல் அதிகார அமைப்புகளில் முஸ்-ம்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கொண்டு வந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநிலங்களில் உள்ள மேலவையிலும், நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வையிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக முஸ்-ம்களுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.

கைகொடுக்க வேண்டும்

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பை அளிக்க வேண்டும். அதாவது ஒரு பகுதியில் இயங்கும் கல்வி நிறுவனம் அல்லது ஓர் அரசுத் துறை அப் பகுதியில் அனைத்து மதத்தினர், அனைத்து சாதியினர் என்று அனைவருக்கும் தனது நிறுவனத்தில் சமமான வாய்ப்புகளை அளிக்க வேண்டும். இவ்வாறு செயல் படும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு கூடுதல் மானியங்கள் வழங்க வேண்டும் என்று சச்சார் குழு பரிந்துரைத்துள்ளது.

கல்வியில் முன்னேற...

ஏனைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை விட முஸ்-ம்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கி இருப்பதாக சச்சார் குழு தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வியை முடிக்கும் முஸ்-ம் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

முஸ்-ம்களின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதத்தினர் 10 வயதிற்குக் கீழ் உள்ளார்கள். ஆனால் பள்ளிக்கூட கல்வியில் முஸ்-ம்களின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. 14 வயதிற்குக் கீழ் உள்ள அனைத்து முஸ்-ம் குழந்தை களும் கல்வி கற்பதற்கும், அவர்களுக்கு இலவசமாக, தரமான கல்வி கிடைப் பதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள சச்சார் குழு, மேலும் சில திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளது.

நகர்ப்புறத்தில் வாழும் முஸ்-ம்களில் பெரும்பான்மையோர் ஒரு அறை கொண்ட வீட்டில் வாழ்கிறார் கள். எனவே இப்பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கென்று தனி கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் அரசு, அரசு சாரா அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்-ம்கள் வாழும் ஊர்கள் அல்லது அதற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற் குள் நல்ல தரமான அரசு பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

முஸ்-ம் பெண்கள் மட்டுமே படிக்கும் தனிப் பள்ளிக்கூடங்கள் குறிப்பாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அமைக்கப்பட வேண்டும்.

உருதுவை தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்-ம்கள் வாழும் பகுதிகளில் உருதுவை பயிற்றுமொழி யாகக் கொண்ட தொடக்க பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட வேண்டும்.

தொழிற்கல்வி

பெரும்பாலான முஸ்-ம் மாணவர்களும் மாணவிகளும் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைகின்றனர் அல்லது இடையில் படிப்பை நிறுத்துகிறார்கள். இவர்கள் தொழிற்கல்வி கற்பதற்கு வசதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் ஐ.டி.ஐ. மற்றும் பா-டெக்னிக் சேர முடியும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். 10ம் வகுப்பு தேராத மாணவர்களுக்கு தனி தொழிற்கல்வி வடிவமைக்க வேண்டும். மதரஸாவில் பயிலும் மாணவர்களும் இத்தகைய தொழிற்கல்வியில் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வி

சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய வகையில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் தனியார் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு ஊக்கமளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகத்தினர் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள். இது முஸ்-ம்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிவகை செய்துள்ளன. இத்தகைய நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஏழை மாணவர்களும் இதில் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் அவர்கள் செயல்படுத்துவதற்கும் அத்தகைய மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதற்கும் இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவிகளை வழங்க வேண்டும்.

மதரஸா கல்வி

மதரஸா பயிலும் முஸ்-ம்களுக்கு பலனளிக்கும் வகையில் மதரஸாக்களை பள்ளிக் கல்வியுடன் இணைக்க வேண்டும். இதன் காரணமாக மதரஸா கல்வி முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக் கல்வியையும் முடிப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வி படிப்பதற்கு தகுதி யளிக்கும் வகையில் மதரஸா கல்வி பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படை யில் மதரஸா மாணவர்களையும் தயாரிக்க வேண்டும்.

மதரஸா கல்வி பயின்று வரும் பட்டதாரிகள் அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவதற்குத் தகுதியான வகையில் அவர்களின் பட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பாடநூல்கள்

பாடநூல்கள் குழந்தைகளின் வளரும் பருவத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் திரும்பத் திரும்ப படிக்கும் பாடநூல்கள் அவர்களின் உள்ளத்தில் ஆழமான பாதிப்பு களை ஏற்படுத்தும். எனவே பாடபுத்தகங்களில் மதமாச்சரியம், சாதி பேதம் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறக் கூடாது. சமூக நல்-ணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாடங்கள் அமைய வேண்டும்.

வேலை வாய்ப்பு

வேலைக்கு தேர்வு செய்வதற் காக அமைக்கப்படும் பணியாளர் தேர்வுக் குழுக்களில் முஸ்-ம்களும் இடம்பெற வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரதிநிதிகளை தேர்வுக் குழுக்களில் இடம்பெறும் நடைமுறை உள்ளது. இதே அடிப்படையில் முஸ்-ம்களும் பணியாளர் தேர்வுக் குழுக்களில் இடம்பெற வேண்டும்.

அரசு அதிகாரிகள், காவல்துறையினர் போன்ற அனைவருக்கும் சிறுபான்மை யினர் நலனைப் பேணுவதில் அவர்கள் காட்ட வேண்டிய அக்கறை குறித்து புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தங்கள் பரிந்துரைகள் அனைத்தையும் தவணை முறையில் நிறைவேற்றாமல் முழுமையாக நிறைவேற்றினால்தான் முஸ்-ம்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அது உதவி செய்யும் என்று சச்சார் குழு பரிந்துரைத் துள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் முஸ்-ம்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக சச்சார் குழு கூறுகிறது. சிறுபான்மையினர் களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது பற்றி பரிந்துரை செய்ய மத்திய அரசு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையில் ஒரு ஆணையம் அமைத்துள்ளது. எனவே சச்சார் குழு இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பாக சொல்லவில்லை. ஆனால் சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் முஸ்-ம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதை பரிசீ-ப்போம் என்று மிஸ்ரா ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் தாஹிர் மஹ்மூத் கூறியுள்ளார்.

முஸ்-ம்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

முஸ்-ம்கள் பின்தங்கியவர்களிலும் பின்தங்கியவர்களாக உள்ளனர் நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்டக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இடஒதுக்கீடு குறித்து மவுனம் சாதிக்கும் சச்சார் அறிக்கை சட்டப்பூர்வ சமவாய்ப்பை முஸ்-ம்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இடஒதுக்கீடு போன்ற முக்கியக் கோரிக்கைகளை எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதன் அறிக்கை, மிக ஏழைகளாக, கல்வியறிவு குறைந்தவர்களாக, கல்வி பெறும் வாய்ப்பு இல்லாதவர்களாக, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மிகக்குறைந்த பிரதிநிதித்துவம் உடையவர்களாக, சுய வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான வங்கிக்கடன் கிடைக்கப் பெறாத நிலையுடன் முஸ்-ம் சமூகம் இருப்பதாக சச்சார் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டி ருக்கிறது.

நகர்ப்புறங்களில் வாழும் பெரும்பான்மையான முஸ்-ம்கள் அடிப்படை வசதியற்ற சேரி போன்ற பகுதிகளில் வாழ்கிறார்கள் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது நேர்மையான, முழுமையான அறிக்கை என்பதில் தாம் திருப்தியடைவதாக ராஜேந்தர் சச்சார் குறிப்பிட்டார்.

மதரஸாக்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும், உருது ஆசிரியர் பயிற்சி திட்டத் திற்கும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் முஸ்-ம்களுக்கு 15 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சச்சார் குழு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முழுமையான சிறந்த செயல் என்றும், இதைப் போன்ற ஒரு அறிக்கை இதுவரை வந்ததில்லை என சச்சார் கமிட்டியின் அறிக்கை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் புகழாரம் சூட்டினார்.

நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பல மாநிலங்கள் சென்று பல்வேறு மக்களையும் சந்தித்து பல சர்வேக்களையும், நிபுணர்களின் ஆய்வகளையும், பல்வேறு துறைகளின் பட்டியல்களையும் மத்திய மாநில அரசுகளின் புள்ளி விவரங்கள் போன்றவை அனைத்திலும் ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயாரித்ததாக நீதியரசர் சச்சார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஜக வழக்கம்போல் எதிர்க்கிறது. அரசு வழக்கம்போல் பாஜக போன்ற மக்கள் விரோத சக்திகளுக்கு அஞ்சாமல் முஸ்-ம்கள் நலன் குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

 


Who's Online

We have 48 guests and one member online

  • ymegywu