வாணியம்பாடி இஸ்லாமிய கல்விச் சங்கம் 28-01-2007 அன்று தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சச்சார் கமிஷனின் அறிக்கை மீதான ஒருநாள் கருத்தரங் கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பயனுள்ள இக்கருத்தரங்கத்திற்கு மண்டி முகம்மது பாருக் சாகிப் தலைமை வகித்தார். இஸ்லாமியா கல்லூரி செயலாளர் சூ. கைஸர் அனைவரையும் வரவேற்றார். தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வஃப் வாரியத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வாணியம்பாடி இஸ்லா மியா கல்லூரியின் முதல்வர் மேஜர். சையது சகாப்தீன், துணை முதல்வர் நஸருல்லாஹ் பாஷா, கர்நாடக மாநில வஃப் வாரியத் தலைவர் காலித் ஷா ஆலம் அஹ்மத், உம்ராபாத் ஜாமியா தாருல் சலாம் கல்லூரியின் பேராசிரியர் ஹபீசுர் ரஹ்மான் மதனி, மதுரா கல்லூரி பேராசிரியர் ஷாஆலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் பேசுகையில் "சச்சர் கமிஷன் தனது அறிக்கை யில் இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையை படம்பிடித்துக் காட்டியுள்ளது. பி.ஜே.பி போன்ற மதவெறி கும்பல்கள் சென்ற ஆட்சியில் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் பாடப் புத்தகங்களில் போதித்தார்கள். இத்தகைய வரலாற்று மோசடிகள் வலுவான ஜனநாயக இயக்கங்கள் மூலம் முறியடிக்கப்பட்டது. பல இடங்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் விட முஸ்லிம்களின் நிலை மோசமாக இருப்பதை சச்சார் குழு வருத்தத்துடன் குறிப்பிடுகிறது. மேலும் சம வாய்ப்பு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அவ்வாணையத்தின் மூலம் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் சச்சார் கமிஷனில் கோரப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, சிறுபான்மை சமூகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல, சச்சார் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் உரையில் உறுதியளித்துள்ளார்'' என்றார்.

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முதல்வர் மேஜர்.சையது சகாப்தீன் பேசியபொழுது "நமது சமுதாயத்தின் பிரச்சனை என்ன? என்று கேட்டால், நமது சமுதாய மக்களுக்கே தெரியாது என்பது தான் உண்மை. சச்சார் கமிஷன் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்ற என்ன பரிந்துரைகளை சொல்லியுள்ளது என்பதைவிட, சமுதாயத்தை முன்னேற்ற சமுதாய மக்கள் என்ன செய்ய வேண்டும், அரசிடம் இந்த சமுதாயம் கோரி பெற வேண்டிய நமது உரிமைகள் என்ன என்பதைப் பற்றியே நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை விட சிறுபான்மையான சமூகம். ஆயினும் அந்த சமுதாயம் கல்வியில் முஸ்-ம் களை விட பலமடங்கு முன்னேறியுள் ளனர். நான் களப் பணிக்காக வாணியம்பாடிக்கு அருகிலுள்ள கிங்ஸ்லி கம்யூனிட்டி என்ற நிறுவனத்திற்கு சென்றேன். அங்கு 150 ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் அனைவரும் டாக்டர் களாகவோ, இன்ஜினியர்களாகவோ படிக்கும் வரையிலும் ஆகும் செலவை ஏற்க ஒவ்வொரு மாணவருக்கும் "ஒரு ஸ்பான்சர்' உள்ளது. இதுபோன்று நாமும் நமது சமுதாயத்தில் உள்ள திறமையான ஏழை மாணவர்களுக்கும், ஒவ்வொரு வசதி படைத்த முஸ்லிமும் "ஸ்பான்சர்' செய்ய வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.

மதுரையைச் சேர்ந்த பேரா. ஆலம்ஷா தனது உரையில், "சச்சார் கமிஷனின் அறிக்கை முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் பாரபட்சமாக நடத்தப் படுவதை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2,832 பெரிய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் விப்ரோ உள்ளிட்ட வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றது. இதனாலேயே தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு என்பது நமக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை வலிமையான சமுதாயமாக ஆக்க வேண்டுமானால் ஒவ்வொரு ஜமாத்தார்களும் ஒரு தொடக்கப் பள்ளியையாவது தொடங்க வேண்டும். அது போல மதரஸாக் கல்வியில் உலகக் கல்வியையும் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்வது தான் நமது சமுதாயத்தின் வருங்காலத்திற்கு சிறந்ததொரு முதலீடாக இருக்கும்'' என்றார்.

தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தமது உரையில், 

"இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு அரசின் பயனுள்ள திட்டங் கள் எதுவுமே போய்ச் சேரவில்லை என்று சச்சார் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. தேர்தல் வரும்பொழுது அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு வாக்குறுதிகளைத் தந்துவிட்டு வாக்குகளை பெற்றுவிட்டுச் சென்று விடுகிறார்கள். ஆட்சி கட்டி-ல் அமர்ந்து பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியதும் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விடுகின்றனர். 

சமீபத்தில் டெல்லியில் சச்சார் கமிட்டி மீதான கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட எஸ்.சி, எஸ்.டி மக்களின் வளர்ந்து வரும் அரசியல் தலைவரும், நீதிக் கட்சியின் தலைவருமான உதித்ராஜ் கூறுகிறார்: "முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கி றார்கள் என்றால் ஒரு காரணம் அரசு, மறு காரணம் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களே'' என்கிறார். மேலும், "முஸ்லிம்கள் தங்களது கோரிக்கை களுக்காக போராடுவது கூட கிடையாது'' என அவர் வருத்தப் படுகிறார். 

உத்தரப்பிரதேசத்தில் பெருன்பான்மை யாக முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். உருதுவே அவர்களுக்கு தாய்மொழியாக இருந்தாலும் கூட அங்கு உருதுவிற்கு மாற்றாக சமஸ்கிருதம் போதிக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் அங்கே முலாயம்சிங் யாதவின் ஆட்சி தான் இருந்து வருகிறது. அடுத்து பீகார் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம் பீகாரில் சங்பரிவாரங் களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த லல்லு பிரசாத் யாதவின் ஆட்சி இருந்தும் கூட அங்கேயும் முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் பின்தங்கியே இருக்கிறார்கள்.

சச்சார் கமிஷனில், பள்ளிகளில் சராசரியாக ஒரு மாணவன் கழித்த காலத்தை வெளியிட்டுள்ளது. ஒரு மாணவன் சராசரியாக 4 வருடம் பள்ளிகளில் கழிக்கி றான் என்றால், ஒரு முஸ்லிம் மாணவன் கழிக்கும் காலம் வெறும் 3-4 மாதங்கள் தான்.

25 பட்டதாரி மாணவர்களில் ஒரே ஒரு பட்டதாரி மாணவரும், 50 முதுநிலை பட்டதாரி மாணவர்களில் ஒரே ஒரு முதுநிலை பட்டதாரி மாணவரும் தான் முஸ்லிமாக இருக்கிறார். இப்படியே புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒருபுறம் நாம் அரசிடம் நமது உரிமைகளுக்காகப் போராடுவோம். அதே வேளை யில் நமது பொறுப்புகளையும் நாம் உணர வேண்டும். ஒவ்வொரு மஹல்லாவிலும் நாம் ஒரு தொடக்கப் பள்ளியை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு ஜமாத்தும் தனது ஜமாத்தை நிர்வகிக்க நிதி ஒதுக்குகின்றதோ அதை போன்று ஒவ்வொரு ஜமாத்திலும் கல்வி நிதி ஒன்றை ஏற்படுத்தி அதனை முறைப்படி செலவழிக்க வேண்டும். இவற்றை எல்லாம் நாம் செய்தால் தான் இன்ஷா அல்லாஹ் நமது சமுதாயத்தில் படிக்காதவர்களே இல்லாத நிலை என்கிற நிலைமை ஏற்படும்.

21ம் நூற்றாண்டில் நமது இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருந்து வருகின்றது. இந்தக் கனவு நனவாக வேண்டுமானால் எல்லா சமூகத்தினரும் சங்கிலிகளாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் சங்கிலி மட்டும் மிகவும் பலகீனமாக உள்ளது. இந்த பலகீனமான சங்கிலியை பலப்படுத்தினால் மட்டுமே இந்தியா வல்லரசாகும்'' என்றார்.

இந்தக் கருத்தரங்கில் முஸ்-ம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் வேலூர், திருவண்ணா மலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தவல்-கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஏராள மான எண்ணிக்கையில் பங்கு கொண்டனர்.

 


Who's Online

We have 46 guests and one member online

  • ymegywu