தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழுகூட்டம் திருச்சியில் நவ.2, 2014 அன்று மாநில தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் தலைமையிலும், மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, எஸ். ஹைதர் அலி மற்றும் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, குணங்குடி. ஹனீபா மற்றும்  உமர் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

Read more ...

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் பரிந்துரையை வழங்கிய ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத்தில் 18 டிசம்பர் 2009 அன்று  செய்யப்பட்டது.

 

டாக்டர் மன்மோகன் சிங் அரசு மத்தியில் பதவி ஏற்றவுடன் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் நிலைமையை கண்டறிய இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று நீதிபதி ராஜேந்திர சச்சார் ஆணையம். அது பிரத்தியேகமாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைப் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. மற்றொன்று, நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம்.

 

முஸ்லிம்ம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக டாக்டர் மன்மோகன் சிங் அரசு ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் சிறுபான்மை ஆணையத்தை அமைத்தது.

Who's Online

We have 108 guests and one member online

  • ZeettReuck