டாக்டர் மன்மோகன் சிங் அரசு மத்தியில் பதவி ஏற்றவுடன் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் நிலைமையை கண்டறிய இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று நீதிபதி ராஜேந்திர சச்சார் ஆணையம். அது பிரத்தியேகமாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைப் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. மற்றொன்று, நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம்.

அது பொதுவாக மதம், ஜாதி மற்றும் மொழி வாரி சிறுபான்மையினர்களின் கல்வி, பொருளாதார சமூக நிலைகளை கண்டறிய அமைக்கப்பட்டது. 

நீதிபதி சச்சார் ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்ட போது அது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. சுதந்திர இந்தியாவில் பெரும் சிறுபான்மை சமூகமான முஸ்-ம்களின் அவலநிலையை அது படம் பிடித்துக் காட்டியது. பத்திரிக்கைகள் அது பற்றி தலையங்கங்கள் தீட்டின. பத்தி பத்தியாய் எழுதின. ஊடகங்கள் அதை விவாதப் பொருளாக்கின. பொது அரங்குகளில் ஒ-க்கப்பட்ட குரல்களில் அது எதிரொ-த்தது. பாராளுமன்றத்திலும் அது விவாதிக்கப்பட்டது. நாட்டின் பட்டி தொட்டிகளெங்கும் கூட அது விவாதிக்கப் பட்டு விட்டது. இப்போது அதன் பரிந்துரைகள் மத்திய மந்திரி சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் நிலையில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில வாரங் களுக்கு முன் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை சமஅளவு முக்கியத்துவம் பெறாதது குறித்து நாம் சந்தேகமும், வியப்பும் கொள்ளும்படி இருக்கிறது. அது பற்றி அரசு மௌனம் சாதிப்பதோடு ஊடகங்களும் வாய்மூடிக்கிடக்கின்றன. நீதிபதி மிஸ்ரா அறிக்கையின் விபரங்கள் நமக்கு கிடைத்துள்ள நிலையில் அதிகார வர்க்கத்திடம் தொடர்பு கொண்ட தேசிய பத்திரிக்கைகளுக்கு அது தெரியாதிருக்க நியாயமில்லை! அரசும், ஊடகங்களும் சேர்ந்து மிஸ்ரா அறிக்கை இப்போதைய சூழலில் மக்களிடம் சென்றடைய வேண்டாம் என்பதற்காக, மறைக்கிறார் களோ என்று எண்ணும்படி இருக்கிறது. "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை தமது அரசுக்கு வரவேண்டாம் என்று மன்மோகன் சிங் அரசு நினைக்கிறதோ என்னவோ நமக்கு தெரியாது. ஆயினும் நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையத் தின் பரிந்துரைகளை இங்கு சுருக்கமாகத் தருகிறோம். 

மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மை யினரிடையே சமூக, பொருளாதார பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் அளவுகோல்:-

பிற்பட்டோர் நிலையை கண்டறிய ஒரு சீரான அளவுகோல் நாளடைவில் உருவாக வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அது மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்தே அமைய வேண்டும். மதம் அல்லது ஜாதியின் அடிப்படையில் அது இருக்கக் கூடாது. பிரஜைகள் எல்லோருக்கும் சமமாக அது அமலாக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கண்டறிவதே நமது அடிப்படை இலட்சியம். 

ஆனால், அந்த குறிக்கோளை நாம் எட்ட நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆகவே, இடைப்பட்ட காலத்தில் சாத்தியமான வழிமுறைகளை இங்கு பரிந்துரைக்கிறோம். இவைகள் எதிர்காலத்தில் நமது குறிக்கோளை அடைவதற்கு உதவுதோடு இன்றைய நிலையில் அரசியல் சட்ட விதிப்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சமூக, பொருளாதார, அரசியல் நீதிகளையும், சமவாய்ப்பு சம அந்தஸ்த்து போன்றவை களையும் அடைவதற்கு உதவும். 

மதச்சார்பு சிறுபான்மையினர்:-

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் அளவுகோ-ல் இங்கு பெரும்பான்மை சமூகத்தினருக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் இடையே எந்த வித்தியாசமும் காட்டப் படவில்லை. ஆகவே, பெரும்பான்மை சமூகத்தினருக்கு அமல்படுத்தப்படும் அளவுகோல் தான் அனைத்து சிறுபான்மை சமூகத்தினர் விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது. அதன் விளைவாக சிறுபான்மை சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வர்களாக அடையாளம் காணப்பட்ட வகுப்புகள், பிரிவுகள், குழுக்கள் எல்லாம் பெரும்பான்மை சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட அத்தகையோருடன் சமமாகக் கருதப்படுவார்கள்.

மேலும், சிறுபான்மை சமூகத்துக்குள் ளேயே தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் பிரிவுகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே 

கருதப்படவேண்டும். உதாரணமாக அவர்களுக்கு மாற்று மத அடையாளம் இல்லாது இருந்திருப்பின் அவர்கள் அட்டவணை ஜாதி பிரிவு பட்டிய-ல் இடம் பெற்றிருப்பார்கள். ஆகவே, அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி பிரிவை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்கா விட்டாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். 

பெரும்பான்மை சமூகத்தி-ருந்து பழங்குடியினர் அட்டவணை பட்டிய-ல் சேர்க்கப்பட்டிருக்கும் குழுவினர் சிறுபான்மை சமூகத்தில் இருந்தால் அவர்களும் அந்தப் பட்டிய-ல் இணைக்கப் படவேண்டும். குறிப்பாக சொல்வதென்றால் பழங்குடியினர் வாழும் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் பழங்குடியினர் இனமாகவே கருதப்பட வேண்டும். 

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு உள்ளடக்கிய நலத்திட்டங்கள்:-

ஜனநாயகம் என்பது எண்ணிக்கையில் அடங்கிய ஒரு விளையாட்டு. ஆகவே, எண்ணிக்கையில் குறைந்த பிரிவினர் சமூக அமைப்பில் பெரும்பான்மையினரால் ஓரங்கட்டப்படுவது இயல்பு. அதுவும் மத உணர்வும் நம்பிக்கையும் மேலோங்கியுள்ள இந்தியா போன்ற நாட்டில் அப்படி நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கத்தி-ருந்து சிறுபான்மை சமூகத்தினர் சட்டரீதியாக காப்பாற்றப் படவேண்டும். அத்தகைய பாதுகாப்புக்கு அரசியல் சாசனம் பிரிவு 46 வழிகாட்டுகிறது. அதனை மனதில் கொண்டே மதசார்பு சிறுபான்மை சமூகத்தினருக்கு சில நலத்திட்டங்களை இங்கு பரிந்துரைக்கிறோம். 

சமூக, பொருளாதார பின்னடைவு என்பது கல்வி பின்னடைவால் தான் ஏற்படுகிறது என்பது எங்களின் தீர்க்கமான அபிப்ராயமாகும். ஆகவே, மதசார்பு சிறுபான்மை சமூகத்தினரின்-குறிப்பாக முஸ்-ம்கள், பௌத்தர்கள், இவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சில அமலாக்க திட்டங்களையும் பொருளாதார வளர்ச்சிக்குரிய வழிகளையும் பரிந்துரைக்கிறோம். 

அரசியல் சாசன பிரிவு 30 சட்ட சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் காலதாமதமின்றி புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு சிறுபான்மை சமூகத்தின் கல்வி உரிமை தெளிவாக்கப் படவேண்டும். தேசிய சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் ஆணையத்தின் சட்டப்படியான நிலையை மேம்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படவேண்டும். 

தேசிய ஒற்றுமையை கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் சிறுபான்மை சமூக கல்விக் கூடங்களில் அவர்களுக்கு 50 சதமும் மீதி 50 சதம் பெரும்பான்மை சமூகத்தினருக்கும் ஒதுக்கியுள்ளது. அந்த தார்மீக அடிப்படையில் சிறுபான்மையினர் அல்லாதவர்கள் நடத்தும் கல்விக் கூடங்களில் சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதில் முஸ்-ம்களுக்கு 10% மற்ற சிறபான்மை யினருக்கு 5% உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுவில் நடக்கும் தேர்வுகளில் வென்று தகுதியின் அடிப்படையில் சேரும் சிறுபான்மை சமூகத்து மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படக்கூடாது. கீழ்மட்ட தகுதி, கட்டண குறைப்பு போன்ற சலுகைகள் குறிப்பாக முஸ்-ம் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் கல்விக்கூடம் ஒன்றை தேர்வு செய்து சட்டரீதியான அந்தஸ்த்தும் அவைகளுக்கு அளித்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கும் படி செய்ய வேண்டும். 

மதக் கல்வி கற்பிற்கும் மதரசாக்கள் நவீன கல்வியையும் கற்பிக்கும் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அல்லது மதரசா மாணவர் அருகி-ருக்கும் கல்வி கூடங்களுக்குச் சென்று ஒரே நேரத்தில் நவீன கல்வியையும் கற்கும்படி ஏற்பாடு செய்து தரவேண்டும். மதரசா நவீனபடுத்தும் திட்டம் "மத்திய வக்ஃபு கவுன்சில்' அல்லது "மத்திய மதரசா கல்வி போர்டு' மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். 

மத்திய வக்ஃபு கவுன்சில் சட்ட வழிமுறைகள் திருத்தப்பட்டு முஸ்-ம்களின் கல்வி மேம்பாட்டு பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப் படவேண்டும். அதற்கு விஷேசமாக 5% கல்வி வரி ஒவ்வொரு வக்ஃபு நிர்வாகத்திடமிருந்தும் வசூ-க்கப்படவேண்டும். 

"மௌலான ஆஸாத் கல்வி நிறுவன நிதியி-ருந்து முஸ்-ம்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். அந்த நிதியி-ருந்து இப்போது இருக்கும் முஸ்-ம் கல்வி நிலையங்கள் வளர்ச்சிகாக மட்டுமின்றி, முஸ்-ம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதுகல்வி நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் செலவு செய்ய வேண்டும். "அங்வாரிஸ்' நவேதே வித்யாலயா' போன்ற கல்வி நிலையங்கள் முஸ்-ம்கள் வாழும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு, முஸ்-ம் குடும்பங்கள் அவர்களின் குழந்தைகளை அங்கு அனுப்பி வைப்பதற்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும்.

பொருளாதார நலத்திட்டங்கள் 

அநேக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் குறிப்பிட்ட கைத்தொழில்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த துறையில் உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும். முஸ்-ம்கள் பொதுவாக பயிர்வளத்துறையில் குறைவாகவே காணப்படுகிறார்கள். அந்ததுறையில் அவர்களை ஊக்கப்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படவேண்டும். சொந்தத் தொழில் செய்து ஊதியம் சம்பாதிக்கும் படியாகவும் வழிமுறைகள் காணப்பட வேண்டும். தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் தாராளமாக மேற்கண்ட திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய ஆவன செய்ய வேண்டும். அனைத்து அரசு வளர்ச்சித் திட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு 15% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதில் 10% முஸ்-ம்களுக்கும் ஏனைய 5% மற்றவர்களுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

இடஒதுக்கீடு

சிறுபான்மையினர்-குறிப்பாக முஸ்-ம்கள் அநேக அரசுத்துறைகளில் பிரதிநிதித்துவம் இல்லாது இருப்பதால் எல்லா மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் 15% சிறுபான்மை சமூகத்துக்கு ஒதுக்க வேண்டும். அதில் 10% முஸ்-ம்களுக்கும், மீதி 5% மற்ற சிறுபான்மை சமூகத்தின ருக்கும் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலே கண்ட பரிந்துரைகள் அனைத்தும் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 16(4)க்கு உட்பட்டது என்றே நாங்கள் நம்புகிறோம். இருப்பினும் அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் ஏதும் சட்ட சிக்கல் ஏற்படுமானால் மாற்று ஏற்பாடாக கீழ்கண்ட பரிந்துரைகளை செய்கிறோம். 

மண்டல் கமிஷன் அறிவிப்பில் "ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகம்' (ஞஇஈ) 8.4% என்று காணப்படுகிறது. ஆகவே 27% ஞஇஈ குறியீட்டில் 8.4% துணை குறியீட்டாக சிறுபான்மை சமூகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் 6% முஸ்-ம்களுக்கும் 2.4% ஏனைய சிறபான்மையினருக்கும் உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

அட்டவணைப் பட்டியல் பழங்குடி யினர் மதசார்பாற்ற வகுப்பினராக கருதப்படுகிறார்கள். ஆகவே, பழங்குடி யினர் வாழும் பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரும் அந்த அட்டவணை பட்டிய-ல் சேர்க்கப்பட வேண்டும். மேலும் அட்டவணைப் பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடி வகுப்பினரிடையே மேம்பட்டவர் கள் (ஈழ்ங்ஹம்ஹ் கஹஹ்ங்ழ்) நீதிமன்ற தடைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனை மாநில கொள்கையாக ஆக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

(குறிப்பு:- மொழிவாரி சிறுபான்மை யினருக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய பரிந்துரைகள் ஏதும் இல்லை என்பதால் அது இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)


Who's Online

We have 47 guests and one member online

  • ymegywu