முஸ்லிம்ம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக டாக்டர் மன்மோகன் சிங் அரசு ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் சிறுபான்மை ஆணையத்தை அமைத்தது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம் தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் வாக்குறுதி அளித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வுச் செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் 6 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென்று மத்திய அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்டது. ஆனால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டு ஆகியும் அது தனது அறிக்கையை சமர்பிக்கவில்லை. இச்சூழ-ல் கடந்த மார்ச் 7 அன்று டெல்-யில் நாடாளுமன்றம் நோக்கித் தமுமுக பேரணி நடத்தியது. உடனடியாக முஸ்-ம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க ஆவணச் செய்ய வேண்டும். மத்திய அரசின் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் முஸ்-ம்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமுமுக கோரியது. இது தொடர்பாகத் தமுமுக தலைவர்கள் நேரடியாகப் பிரதமரிடம் நேரில் மனு அளித்தனர். நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணையம் கடந்த நவம்பர் 22, 2005ல் சென்னை வந்த போது தமுமுக சார்பாக நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் முஸ்-ம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா தலைமையிலான ஆணையத்தின் காலம் கடந்த மே15 உடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ரங்கநாதன் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 21 அன்று பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது தான் உண்மைகள் வெளிவரும். ஆனால் இந்த அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இப்பரிந்துரைகளில் டெல்- பேரணியின் போது தமுமுக எழுப்பிய கோரிக்கைகள் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளில் வெளியாகியுள்ள பரிந்துரைகளில் சில: 

1. மத்திய அரசின் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகச் சதவிகித இடஒதுக்கீட்டில் (மண்டல் பரிந்துரை) சிறுபான்மையினருக்கு 8.4 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்தச் சதவிகிதத்தில் 6 சதவிகிதம் முஸ்-ம்களுக்கு அளிக்கப்பட வேண்டும். (டெல்-ப் பேரணியின் இறுதியில் பிரதமரிடம் தமுமுக சமர்பித்த மனுவில் இந்தக் கோரிக்கை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்) 

2. மத்திய மாநில அரசு பணிகளில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதில் 10 சதவிகிதம் முஸ்லிம்களுக்கும் 5 சதவிகிதம் இதர சிறுபான்மையினருக்கும் அளிக்கப்பட வேண்டும். 

3. சிறுபான்மை அல்லாதவர் நடத்தும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இடங்களில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதில் 10 சதவிகிதம் முஸ்-ம்களுக்கும் 5 சதவிகிதம் ஏனைய சிறுபான்மையினருக்கும் அளிக்க வேண்டும். 

4. முஸ்லிம் நடத்தும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் கூடுதல் மானியமும் இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். (மார்ச் 7 பேரணியின் முடிவில் பிரதமரிடம் சமர்பித்த மனுவில் இந்தக் கோரிக்கையும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கது. 

நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணையத்தின் இந்தப் பரிந்துரைகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமுமுக தலைவர் பிரதமர் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமுமுக நடத்தி வந்த இடஒதுக்கீடு போராட்டம் வெற்றிக் கனியைப் பறிக்கும் நுழைவாயிலை அடைந்துள்ளது. வெற்றி விரைவில் கிடைக்க இறைவன் துணை புரிவானாக.

 


Who's Online

We have 51 guests and one member online

  • ymegywu