டெல்லியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்முயற்சியால் மார்ச் 7 அன்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் மாநாட்டில் முஸ்ம்களின்ன் கோரிக்கைகள்ரி அடங்கிய பிரகடனம் தமுமுக சார்பாக வெüயிடப்பட்டது.

இந்த பிரகடனம் பேரணியில் பங்குக் கொண்ட தலைவர்களான ஜி.எம். பனாத்வாலா (முஸ்லிம் லீக்), டாக்டர் இல்யாஸ் (முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்), ஹாபீஸ் ரஷீத் அஹ்மத் சௌத்தரி (அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி), முஜ்தபா பாருக் (ஜமாஅத்தே இஸ்லாமி), அசத்துத்தீன் உவைசி (மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்), அதாவுர் ரஹ்மான் வாஜிதி (வஹ்தத்தே இஸ்லாமி), சையத் சஹாபுத்தீன் (மஜ்லிஸே முஷாவரத்), சி.கே. அப்துல் அஜீஸ் (மக்கள் ஜனநாயக கட்சி ) உள்ளிட்டோரின் ஒப்புதல் பெற்று வெüயிடப்பட்டது. இந்த டெல்லி பிரகடனத்தின் சுருக்கம் தான் மனுவாக பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜியிடம் அüக்கப்பட்டது. முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்திற்காக 15 அம்சங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் இங்கே முழுமையாக பிரசுரிக்கப்படுகிறது.

1. மத்திய மாநில அரசுகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் தனியார் நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்ட வாக்குறுதிகளை வழங்கியது.

காங்கிரஸ் கட்சி கேரள மற்றும் கர்நாடக முஸ்-ம்களுக்கு அவர்கüன் சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டினை வழங்கியது. அதே இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி கல்வி மற்றும் சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் உள்üட்ட பிற சிறுபான்மை சமூகத்திற்கும் அமுல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய ஆணையம் ஒன்றை அமைத்தது. அதில் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மத மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு உள்பட அவர்கüன் நலனை மேம்படுத்த தேசிய ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் ஆறு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அறிவித்தது.

முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தனி இடஒதுக்கீடு என்பது முஸ்-ம்கüன் நீண்டகால கோரிக்கையாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்ம்களின் குறைந்த பிரதிநிதித்துவம் தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 2004 ஜூலை 3 அன்று நடைபெற்ற சிறுபான்மை நலத்துறை மற்றும் கல்வி மாநாட்டின் துவக்க விழாவில் கூறிய கருத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் மிகக்குறைந்த பிரதிநிதித்துவம் குறித்து முதன்முறையாக இந்தியப் பிரதமர் பகிரங்கமாக தனது வேதனையைத் தெரிவித்தார்.

சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரத்தை வழங்கும் விதமாக நிர்வாக ரீதியான தடைகளைத் தகர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், எங்கüன் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளும் ஆவன செய்வோம் என்றும் பிரதமர் வாக்குறுதி அüத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் அமைத்த பிரதமரின் உயர்மட்டக் குழுவினை பிரதமர் அமைத்தார். முஸ்லிம் சமூகத்தின் இரங்கத்தக்க நிலையைக் காட்டும் எக்ஸ்ரேயாக சச்சார் கமிட்டி விளங்கியது.

சச்சார் கமிட்டி அறிக்கை கூறியுள்ளபடி இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதில் பொதுவாக முஸ்லிம்களின்ம் நிலை ஹிந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்களை விட முஸ்-ம்கள் குறைந்த அளவிலே பலன் பெற்றுள்ளனர். அதேவேளையில், முஸ்லிம்கள் ஹிந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பின்தங்கி யுள்ளனர் என்று சச்சார் அறிக்கை தெரிவிக்கிறது. (பக்.123, அத்.10). சச்சார் குழு அறிக்கையின் அடிப்படை யில் அரசியல் சாசனச் சட்டத்தின் 15(4) மற்றும் 16 (4) பிரிவின் படி முஸ்லிம் களை பிற்படுத்தப்பட்ட மக்களாக அறிவிக்க வேண்டுமென கோருகின்றோம்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டம் மற்றும் முஸ்-ம்கüன் குறைந்த பிரதிநிதித்துவம் குறித்து தாங்கள் வேதனையோடு தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் முஸ்-ம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கவும் அதற்கு தடையாக உள்ளவற்றை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். முஸ்ம்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத் திற்கேற்ப இடஒதுக்கீடு அüக்கப்பட வேண்டுமெனவும் கோருகின்றோம்,

2. பிற்படுத்தப்பட்டிடோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் உள் ஒதுக்கீடு

சச்சார் குழு தனது அறிக்கையில், "பிற்படுத்தப்பட்ட முஸ்-ம்கள், ஹிந்து பிற்படுத்தப்பட்ட மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். ஹிந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், முஸ்-ம்களுக்கும் இடையில் வேலை வாய்ப்பு விகிதத்தில் 67 சதவீத அளவிற்கு வித்தியாசம் நிலவி வருகிறது. அரசுத் துறையில் தனியார் துறையிலும் முஸ்-ம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம், ஹிந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்களை விட மிகவும் குறைவாக வே உள்ளது. ஒவ்வொரு நூறு பணியாளர்கüல் ஹிந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பதினோரு பேர் எனில் முஸ்-ம் பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறும் மூன்று பேர்தான். முஸ்-ம்கüன் தனிநபர் மாத வருமானம் தேசிய அளவில் மிகவும் குறைந்த அளவி ளாகவே உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான பலன்கள் முஸ்லிம்களுக்கு சரியான முறையில் சென்ற டைய வேண்டும். இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதில் முஸ்லிம்களின் நிலை பொதுவாக ஹிந்து இதர பிற்படுத்தப் பட்ட மக்களை விட கீழான நிலையில் உள்ளது.

மொத்த பிற்படுத்தப்பட்டவர்கüன் முஸ்-ம்கüன் தொகை 15.7 சதவீதமாகும். இந்நிலையை கருத்தில் கொண்டு 27 சதவீத பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்-ம்களுக்கு மக்கள் தொகைக்கேற்ப தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகிறோம்.

3. இடஒதுக்கீட்டுக்கு 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு நீக்கப் பட வேண்டும் 

இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாகக் கூடாது என 1994ல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என எந்தப் பிரிவும் குறிப்பிடவில்லை. இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாகக் கூடாது என 1994ல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி இடஒதுக்கீடு 50 சதவீதத் திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என எந்தப் பிரிவும் குறிப்பிடவில்லை. கல்வி மற்றும் சமூக நிலையில் முஸ்-ம்கள் மிகவும் பின்தங்கியுள்ள அவர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் மட்டுமல்ல, அவசரமானதும் கூட. பட்டியல் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டன. சமுதாயத்தில் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட பல்வேறு சாதியினர், சமூகத்தினர் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்ற நிலையில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு என்பது சாத்தியமும் அல்ல சமமானதும் அல்ல. தமிழ்நாடு 69 சதவீத இடஒதுக்கீட்டினை மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி கüல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தின் பிரிவு 38ம், 48ம் நீதிமன்றத்தின் சவா—ருந்து பாதுகாக்கிறது. அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட 9வது அட்டவணை நீதிமன்றத்தின் அதிகார வரம்பி-ருந்தும் இடஒதுக்கீட்டினை பாதுகாக்கிறது. தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அரசியல் சாசனப் பிரிவு 31(சி) மற்றும் 9வது அட்டவணைப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் நீதி மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூக நிலையில் பின்தங்கியுள்ளோரின் பிறப்புரிமை ஆகும். பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கணக்கெடுப்பை பார்த்தோ மானால் மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதத்திற்கு மேலான மக்கள் இடம்பெற்றுள்ளனர். இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 சதவீதத்தை அதிகரிக்க கூடாது என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதியான ஒன்றாகும். இங்கே வசந்தகுமார் எதிர் கர்நாடக அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்ப ரெட்டி தெரிவித்த கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறோம். இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை அதிகரித்தால் திறமை குன்றிவிடும் என்று சொல்வதற்கு புள்üயில் ரீதியாகவோ அல்லது வேறு எந்தவொரு ரீதியாகவோ ஆதாரம் இல்லை என்று நீதிபதி சின்னப்ப ரெட்டி குறிப்பிட்டார். 

எனவே மிக அவசரமாக செயல்பட்டு சமூக நீதியை காக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த மாநில அரசுகளே இடஒதுக்கீட்டின் அதிகபட்ச அளவை நிர்ணயித்துக் கொள்ள சட்டபூர்வமான உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த அளவை நிர்ணயிக்கும் தகுந்த இடம் மக்கள் பிரதிநிதிகள் அமைந்துள்ள சட்டமன்றமும் நாடாளுமன்றமும் தான் என்பதையும் இதில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்பது சட்டபடியாக பாதுகாக்கப்பட தகுந்த நடவடிக்கை எடுக்க கோருகின்றோம்.

4) ஊராளும் அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை முறையான பிரதிநிதித்துவம் முஸ்-ம்களுக்கு வழங்கப்படல் வேண்டும்

அரசு வேலை வாய்ப்பு மற்றும் அதன் திட்டங்கள் குறித்த அத்தியாயத்தில் சச்சார் குழு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

அரசுத் திட்டங்கüல் அதிகமாகப் பயனடையாதவர்களாக முஸ்-ம்கள் உள்ளனர். இதற்கு மிக முக்கியக் காரணம் அரசியல் செல்வாக்கில், மாற்றங்கüல் முஸ்-ம்கüன் பங்கüப்பு இல்லாத நிலை தான். அரசு அமைப்புகளிலும் அதிலும் குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகüலும் முஸ்லிம்களின் மிகக்குறைந்த பிரதிநிதித் துவமே முக்கியக் காரணமாகும். மக்களாட்சி பிரதிநிதித்துவத்தில் அவர்களது பங்கினை வலுப்படுத்துவதற் கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். தேர்தல் அமைப்புகüலும் முஸ்-ம்கüன் பங்கெடுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 543 உறுப்பினர் கள் பங்கேற்றும் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 36 முஸ்-ம் உறுப்பினர்களே உள்ளனர். (பக்கம் 187)

சட்டமியற்றும் அவைகüல் முஸ்-ம் கüன் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்ற ஜாமியா ஹம்தார் பல்கலைக்கழக நடத்திய ஆய்வு முடிவை தான் சச்சார் குழுவும் பிரதிபலித்துள்ளது. ஐ.நா. மன்றத்தின் சிறுபான்மை உரிமைகளுக்கான பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் மற்றும் உரிமைகளுக்கான சர்வதேச நெறிமுறை போன்றவை சட்டமியற்றும் அவைகüல் முஸ்-ம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அüக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. எனவே ஊராளுமன்றம் முதல் நாடாளுமன்றம் வரை முஸ்-ம்கüன் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோருகின்றோம்.

5) சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீட்டில் பலவீன நிலை கவனிக்கப் பட வேண்டும்.

முஸ்லிம்கள் பட்டியல் சமூகத்தினர், ஹிந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினரை விட பின்தங்கியுள்ளதாக சச்சார் குழு அறிக்கையின் 12வது அத்தியாயம் குறிப்பிடுகிறது. பிரதமரின் 15 அம்ச சதித்திட்டத்தில் சிறுபான்மை நலத்துறை நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு சிறுபான்மை சமூக மக்களுக்கு அவர்களது பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு நிதிகள் பிரித்தüக்கப்பட வேண்டுமென கோருகின்றோம்.

6) கல்வித்துறையில் முஸ்லிம் களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும்

குறைந்த அளவு கல்வி, குறைந்த தர கல்வி என்ற இருவித பாதக அம்சங்களைக் அனுபவிப்பவர்களாக முஸ்-ம்கள் உள்ளனர் என சச்சார் குழு அறிக்கை குறிப்பிடுகிறது. முஸ்-ம்கüன் கல்வி முன்னேற்றத்திற்காக கீழ்காணும் கோரிக்கை களை முன்வைக்கிறோம்.

முஸ்லிம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை மாற்ற 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும். 1000 கல்வி நிறுவனங்கள் முஸ்லிம்களுக்க அமைக்கப்பட்டு 3.1 கோடி முஸ்-ம்கள் இனிவரும் 31 ஆண்டுகளக்குள் பலன்பெறும் விதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

தொழில் முயல்வோர் மற்றும் தொழில் திறமையாளர் ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

தேவையான வசதிகள் ஐ.சி.டி.எஸ். மற்றும் எஸ்.எஸ்.ஏ. திட்டங்கள் 

மூலம் முஸ்-ம்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

சச்சார் குழு பரிந்துரைப்படி மாநில அரசுகள் சமூக கல்வி மையங்கள், பெண்களுக்கான கல்வி நிலையங்கள், ஐ.டிஐ.க்கள் போன்றவைகüல் மதரஸாக் கüல் கற்றவர்கள் கல்வி பெற அனு மதிக்க மனிதவளத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உர்தூ மொழிக்குத் தேவையான முக்கியத்துவம் வழங்க வேண்டும். 

ஹிந்தி பேசும் பகுதிகüல் மும்மொழி திட்டத்தின் அடிப்படையில் 

உர்து மொழியும் இடம்பெற வேண்டும். 

தரமான உர்து பள்üகள் அமைக் கப்பட வேண்டும். அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் உர்து விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 

சச்சார் குழு பரிந்துரைப்படி முஸ்-ம் கல்வி நிலையங்களுக்கு நிதிஉதவி வழங்க வேண்டும். 

7) முஸ்-ம் கல்வி நிறுவனங் கüன் உரிமை பேணப்பட வேண்டும்

அ-கார் முஸ்-ம் பல்கலைக் கழகம், ஜாமியா மில்-யா இஸ்லாமியா, ஜாமியா ஹம்தார்த் போன்ற பிரபல முஸ்-ம் கல்வி நிறுவனங்கள் உட்பட பல கல்வி நிறுவனங்கüன் அந்தஸ்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. இக்கல்வி நிறுவனங்கüன் சிறுபான்மை அந்தஸ்தை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தேசிய சிறுபான்மை கல்வி ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென கோருகின்றோம்.

8) முஸ்-ம்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்குதல், மற்றும் வட்டி இல்லா வங்கிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்

மத்திய மற்றும் மாநில சிறுபான்மை பொருளாதார நிறுவனம் நஒஉஇஒ, சஆஇஆதஉ மற்றும் வர்த்தக வங்கிகள் மூலமாக வழங்குகிற எல்லாவிதமான கடன்களும் முஸ்-ம்களுக்கு வட்டியின்றி வழங்கப்பட வேண்டும். ஆவணம் மற்றும் வேவைக்காள செலவுகளை வேண்டுமானால் தங்கள் பயனாüகüட மிருந்து மேற்கண்ட நிதி நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வட்டியில்லா வங்கிகளை உருவாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி களைப் பாராட்டுகிறோம். வட்டியில்லா வங்கி முஸ்-ம் நாடுகüல் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகüல் வெற்றி பெற்றுள்ளன. அதற்குத் தேவையான வங்கி முறைமைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து விரைவில் வட்டியில்லா வங்கிகள் அமைக்கப்பட அனுமதிக்கப் பட ஆவன செய்ய வேண்டும்.

9) உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க நிதி ஒதுக்கீடு

கல்விக் கூடங்கள், சுகாதாரம், அடிப்படை வசதிகள், குடிதண்ணீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முஸ்-ம்களுக்கு முஸ்-ம் பகுதிகளுக்கு கிடைக்காத நிலையை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் தரமான அரசுப் பள்üகள், சுகாதார வசதிகள், சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.

10) முஸ்-ம்களுக்கு சிறப்பு நிதி உள் ஒதுக்கீடு 

எதிர்வரும் வரும் 11ஆம் ஐந்தாம் அம்சம் திட்டத்தில் முஸ்-ம்களுக்கு என்று பட்டியல் இன மக்களுக்கு இருப்பது போல் தனி திட்ட உள் ஓதுக்கீடு அüக்கப்பட வேண்டும். மத்திய அரசு திட்டங்கüல் முஸ்-ம்களுக்கான தனி நிதி ஒதுக்கீடு ரூ.1800 கோடியும், மாநில திட்டங்களுக்காக 5400 கோடியும் மத்திய சிறப்பு உதவித் திட்டத்தில் 2000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முஸ்-ம்களுக்கான தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

11) பாரம்பரிய தொழில்களுக்கான சிறப்பு பாதுகாப்பு

உலகமயக் கொள்கையால் பாரம்பரிய முஸ்-ம்கள் உள்üட்ட பலவீன சமூகத் தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதின் மூலம் அவர்களது பாரம்பரிய தொழில் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

12) வக்ஃபு வாரியத்திற்கு அதிக அதிகாரம்

வக்ஃபு சட்டம் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் திருத்தப்பட வேண்டும். வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த கீழ்க்கண்ட செயல்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம்.

அ) குறிப்பிட்ட கால வக்ஃப் சொத்துக்கள் அனைத்தும் கணக்கெடுப்புகள் செய்யப்பட வேண்டும்

ஆ) வக்ஃப் சொத்து கணக்கெடுப்பு குறித்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப் பட வேண்டும்

இ) வக்ஃப் சொத்துக்கள் குறித்த முழு விவரங்களையும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளும் ஏற்பாடு.

ஈ) கிராமப்புற, ஊரக உச்சவரம்பு சட்டங்களி-ருந்து வக்ஃப் சொத்துகளுக்கு விலக்களித்தல்

உ) வக்ஃப் விவகாரங்களை கவனிக்க இஸ்லாமிய அறிவுடன் கூடிய புதிய அதிகாரிகளை நியமனம் செய்தல்

13) சமவாய்ப்பு ஆணையம் மற்றும் வேறுபாட்டுக் குறியீடு உருவாக்க வேண்டும்

சச்சார் குழு பரிந்துரைத்துள்ள தனிப்பட்ட சமவாய்ப்பு ஆணையத்திற்கு பதிலாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணை யம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து அவற்றையே சமவாய்ப்பு ஆணையங்களாக செயல்பட செய்யக் கோருகிறோம்.

14) தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதில் முஸ்லிம்கள் சிதறடிக்கப்படக் கூடாது

தொகுதி மறுசீரமைப்பின்போது முஸ்-ம்கள் செறிவாக வாழும் தொகுதி பல்வேறு தொகுதிகளாக சிதறடிக்கப்படுவதையும், முஸ்-ம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளை தனித்தொகுதிகளாக அறிவிக்கப்படுவதையும் நீதிபதி ராஜேந்திர சச்சார் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பின் போது மீண்டும் இத்தவறுகள் நிகழாதிருக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

15) மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக்குழு

நீதிபதி ராஜேந்திர சச்சார் பரிந்துரைத்துள்ள மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக் குழுவினை சுயசார்புடையதாக உருவாக்கி, அதிலும் முஸ்-ம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இந்தக்குழு மாநில மற்றும் மாவட்ட மட்டங் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அவற்றிலும், முஸ்-ம்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.


Who's Online

We have 47 guests and one member online

  • ymegywu