மனிதநேய மக்கள் கட்சி தொடக்க நாள்! சமூக நல எழுச்சி நாளாக கொண்டாடுவோம்!!

 மனிதநேய மக்கள் கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்கம்  பிப்ரவரி 7 அன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொடி மரங்களும் நிழல் மரங்களும் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்  சேவை அரசியல் களத்தை கூர்த்தீட்டுவோம் எதிரிகளும்... துரோகிகளும்.. கதிகலங்க  எத்திசையிலும் நம் கொடி பறக்க களமாடுவோம்.

 அரசியல் களத்தை தூய்மையும், நேர்மையும், வாய்மையும் கொண்ட தியாகம் மற்றும் சேவை அரசியல் களமாக உருவாக்கிட நாம் பாடுபட்டு வருகிறோம். வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம் குறித்து கவலைக் கொள்ளாமல் நம் இலக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

 மனிதநேய மக்கள் கட்சி 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘பிப்ரவரி 7’ஐ கட்சியின் எழுச்சியையும், சமூக நலனைக் கொண்டாடும் தினமாக ஆக்கிட வேண்டும்.  

புதிய கொடி மரங்களில் கொடியேற்றுவதும், பெயர்ப் பலகைகள் திறப்பது, பழைய கொடிகளைப் புதுப்பிப்பது என்று மனிதநேய மக்கள் கட்சியின் கொடிகள் எத்திசையிலும் பட்டொளி வீசிப் பறந்திட செய்திட வேண்டும்.அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட நம்முடைய அனைத்துக் கிளைகளிலும் மக்களுக்கு நிழல் தரும் மரக் கன்றுகளை  நட வேண்டும்.


Who's Online

We have 9 guests and no members online