கதிர்வீச்சு சிகிச்சை மருத்துவ மனை   கோரி  கல்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கல்பாக்கம் அணு உலையில் விபத்து எற்பட்டாலோ அல்லது கதிர் வீச்சு பாதிப்புக்கு மக்கள் ஆளானாலோ உடனடியாக சிகிச்சை வழங்கும் வகையில் சிறப்பு மருத்துவமனைகள் இருக்க வேண்டும் என ‘‘தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்’’ சட்டம் வரையறை செய்துள்ளது. 

ஆனால் கல்பாக்கத்தில் 1983 முதல் இயங்கத் துவங்கி 33 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அதுபோன்ற எந்த மருத்துவமனையும் இங்கு இல்லை. 

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வருடம் ‘‘பூவுலகின் நண்பர்கள்’’ சார்பில் வழக்கறிஞர் வெற்றி செல்வன் தொடர்ந்த வழக்கில் கடந்த வருடம் பிப்ரவரி -16 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.அதில் சரியாக ஒரு மாதத்திற்குள் ‘‘கதிர் வீச்சு சிக்கிச்சைக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’’(மத்திய உள்துறை செயலாளர், அணுவாற்றல் துணை இயக்குனர், தமிழக தலைமை செயலாளர்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வரை உத்தரவு நகல்கள் அணுப்பியும் ) 1 மாத காலக்கெடு விதித்து தந்த உத்தரவை ஒரு வருட காலமாகியும் இதுவரை எந்த முயற்சியும் நடைபெறவில்லை. மீண்டும் ‘‘பூவுலகின் நண்பர்கள்’’ வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். 

இந்நிலையில் கல்பாக்கம் சுற்றுவட்டார மக்களின் உயிர் ஆதார பிரச்சனையில் கண்டுகொள்ளாமல் இருக்கும்  கல்பாக்கம் அணுஉலை நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து   புதுப்பட்டினத்தில்’’ சுற்றுவட்டார கிராம மக்கள் ஒருங்கிணைப்பு குழு’’வின் சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் வழகறிஞர் வெற்றிச் செல்வன், தமிழ் தேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தமிழ் குமரன், மருத்துவர் புகழேந்தி ஆகியோர் கலந்து  கொண்டு கண்டன உரையாற்றினார். 

பேரிடர் மேலாண்மையில் படுதோல்வியடைந்துள்ள மத்திய அரசை கண்டித்து வாளிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர். 


Who's Online

We have 10 guests and no members online