தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளாவிற்குள் சிறிய தூரம் சென்று மீண்டும் தமிழ்நாட்டிற்குள் பவானியாகவும் சிறுவானியாகவும் திரும்பும் ஆறு பவானி ஆறு. பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் கேரளா அரசு ஆறு அணைகள் கட்ட திட்டமிட்டு ஒரு அணையை கட்டி முடித்துவிட்டது.

காவிரி நடுவர் ஆணையத்தின் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கேரளா அரசின் போக்கு கொங்கு மண்டலத்தை பாலைவனமாக்கிவிடும். இந்த அநீதியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர்களை உள்ளடக்கிய நடவடிக்கை குழுவின் சார்பாக கேரளா எல்லையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பெருந்திரளாக போராட்டத்தில் பங்குக் கொண்டனர். இப்போராட்டத்தின் போது பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லா, பவானி நமது உயிர் உரிமை. அந்த உரிமையை மீட்க இன்று நடைபெறுவது ஒரு முன்னோட்ட போராட்டம் தான். தமிழக மக்களின் உரிமையை மீட்க மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் ஜல்லிக்கட்டுக்காக மெரினா புரட்சி ஏற்பட்டது போல் பவானிக்காக கொங்கு புரட்சி ஏற்படும் என்று எச்சரித்தார். இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் கோவை உமர், கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மாவட்டச் செயலாளர் இப்ராஹீம் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்குக் கொண்டு கைதாகினர்

 


Who's Online

We have 15 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu