இலங்கை கடற்படையினரால்  தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும் மீனவர் பாரம்பரிய உரிமையை மீட்க வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 

கடந்த மார்ச் 11 அன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தங்கச்சிமடம் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவாக உரையாற்றினார். 

போராட்டக் களத்தில் இருந்த மீனவர் பிரிட்ஜோவின் தந்தை மற்றும் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் இருந்த பிரிட்ஜோவின் உடலையும் அவர் பார்வையிட்டார்.

 மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெயினுல் ஆபிதீன்,  மாநில அமைப்புச் செயலாளர் கே. முஹம்மது கவுஸ் மற்றும் ராமநாதபுரம் அமைப்புக் குழுத் தலைவர் எம். சாதிக் பாஷா உள்ளிட்ட  பலர்  உடன் வந்தனர். முன்னதாக இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் குண்டடிபட்ட மீனவர் சரோனை நேரில் சந்தித்து பேராசிரியர் உடல் நலம் விசாரித்தார்.

படம்: அக்பர் சுல்தான் 

 


Who's Online

We have 53 guests and one member online

  • ymegywu