மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில பொதுக்குழு கூட்டம் 18.03.2017 அன்று புதுச்சேரி கீர்த்தி மஹாலில் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.ஹமீது, புதுச்சேரி மாநில பொறுப்பாளர்எம்.எஸ்.அலாவுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் எஸ்.பி நீதி போதனை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஷாஜஹான் (காரைக்கால்), லியாக்கத் அலி (புதுச்சேரி), தமுமுக மாவட்ட செயலாளர்கள் அப்துல் ரஹீம் (காரைக்கால்), பலுலுல்லா (புதுச்சேரி), மாவட்ட பொருளாளர்கள் காஜா கமால் (புதுச்சேரி), ராஜா முஹம்மது (காரைக்கால்), தமுமுக காரைக்கால் மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், முடிவில் புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது நன்றியுரை கூறினார்.


இப்பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, அப்ஷல் பாஷா, அக்பர்ஷா, ஹாஜா மைதீன், அப்துல் ரசீது தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அலாவுதீன், சம்சுதீன், அப்துல் காசிம், யூசுப்கான், மெய்தீன், இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மத்திய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளது, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


Who's Online

We have 54 guests and no members online