தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகள் பொய்த்ததால் காவிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த வறட்சியினால் சம்பா குறுவை உள்ளிட்ட பயிர்கள் கருகி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கருகிய நிலையில் உள்ள பயிர்களைப் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், மனவேதனையில் தற்கொலை செய்தும் விவசாயிகள் உயிர் இழந்துவருகின்றனர் என்ற செய்தி பெரும் மனவேதனையை அளிக்கிறது.

திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சமீபத்தில் வீசிய வர்தா புயலாலும்  பயிர்கள் நாசமாகியுள்ளன. விவசாய சங்கங்களின் சார்பிலும், தமிழக அரசியல்கட்சிகள் சார்பிலும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து,  வறட்சியால் அதிர்ச்சியுற்று இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக  வழங்கவும்,  நெல் சாகுபடி பொய்த்துப் போன நிலையில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கவும் வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என மமக பொதுச்செயலாளர் அப்துல்சமது தெரிவித்துள்ளார்.

 


Who's Online

We have 68 guests and no members online