மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

“மாட்டை அறுத்து சாப்பிடும் முஸ்லிம்களும், தலித்துகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். 

பண்பாட்டு உரிமை மீட்கப் போராடி வரும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை ‘பொறுக்கிகள்’ என்று பாஜக எம்.பி. சு.சாமி குறிப்பிட்டு வருகிறார்.“இலவச உடலுறவு’ என்று அறி வித்தாலும் இவ்வளவு இளைஞர்கள் கூடுவார் கள்” என்று எண்ணிப் பார்க்க முடியாத ஆபாச தொனியில் பீட்டா ஆதரவாளரும், ஆர்எஸ்எஸ் பிரமுகரு மான ராதாராஜன் பேசியுள்ளார். தமிழினத்தின் உரி மைக்காக லட்சக் கணக் கான இளைஞர்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும், கடமை உணர்வோடும் அகிம்சை வழியில் போராடிவரும் வேளையில், அவர்களது மன உறுதியைக் குலைக்கும் வகையிலும், ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலும், வன்முறைக்குத் தூண்டும் வகையிலும், ஒருவகையான சாதீய ஆணவத்தோடு மேற்கண்ட நபர்கள் தமிழக மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.


Who's Online

We have 72 guests and no members online