மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் உக்கடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திகிறது.கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாக இருக்காது, பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒருமித்து செயல்படவேண்டிய இந்தத் தருணத்தில் பதட்டம் நிறைந்த கோவையில் இதுபோன்ற படுகொலை நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டுமென கோருகிறேன். சகோதரர் ஃபாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 


Who's Online

We have 52 guests and no members online