மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த தமிழக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்னேற்றமற்ற, வெறும் நிதிச்சுமையை அதிகரிக்கும் நிதிநிலை அறிக்கையாகவே அமைந்துள்ளது.


ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ள நிலையில் தற்போது மீண்டும் புதிய அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது வினோதமானது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2012ஆம் ஆண்டு அறிவித்த தொலைநோக்கு திட்டம் (விஷன் 2023) தற்போதைய நிலை என்ன? அதனால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்பதை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.


அதேபோல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, அதற்குப் பின்பு தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கும், அதற்கான உள்கட்டமைப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கோடைகாலத்தில் தேவைப்படும் மின்சாரத் தேவைக்கென எந்த அறிவிப்பும் இல்லை, மின்சார உற்பத்தியை அதிகரிக்க எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வரும் நிலையில் அதனை சமாளிக்க உருப்படியான செயல் திட்டம் எதுவும் குறிப்பிடப்படவில்லை, குறிப்பாக கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கான திட்டங்களும் தெரிவிக்கப்படவில்லை. சிறு பான்மையினர் முன்னேற் றத்திற்கான எந்த ஒரு புதிய திட்டத்தையும் நிதிநிலையில் அறிவிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதே தவிர தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல எவ்விதத்திலும் உதவாது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.


Who's Online

We have 51 guests and no members online