உத்திரப் பிரதேச தேர்தலில் மெகா கூட்டணி இல்லை! காங்கிரஸ் அறிவிப்பு

2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேசத்துக்கு சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி. அவரது மூத்த மனைவிக்கு பிறந்த  மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருக்கிறார். முலாயம் சிங் குடும்பத்துக்குள் நடந்த வாரிசு சண்டைகள் காரணமாக உ.பி.யில் சமாஜ்வாதி தனிப் பெரும் செல்வாக்குடனும் மிருக பலத்துடனும் இருக்கும் போதே, பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 80க்கும் 72 தொகுதிகளை கைப்பற்றி அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்தது. காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் படுதோல்வி அடைய நேர்ந்தது.

 

பீகார் நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜகவே கைப்பற்றியதால் மாநில கட்சிகளாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் சட்டமன்ற தேர்தலில் சுதாரித்துக் கொண்டார்கள். பாஜக&வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைத்தார்கள். அது மகாபந்தன் கூட்டணி எனப்பட்டது. அதுவரையில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத் யாதவும்,நிதிஷ் குமாரும் கைகோர்த்தார்கள். இதன் காரணமாகவே பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைய நேர்ந்தது. பீகாரில் மெகா பந்தன் கூட்டணிக்கு ஏற்பட்ட வெற்றியை பாத்த பின்னர் உ.பி. சட்டமன்ற தேர்தலிலும் அதுமாதிரியானதொரு கூட்டணி அமைத்தால் பாஜக வை தோற்கடிக்க முடியும் என்று கருதப்பட்டது.

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி,பகுஜ,ன&இரண்டு மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக&இரண்டு தேசிய கட்சிகளும் முக்கயிமான போட்டியாளர்கள். இதில் 5தாவதாக நுழைந்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்வி மதசார்பற்ற வாக்குகளை கணிசமாக பிரித்ததால் தான் பாஜக அதிக இடங்களை பிடிக்க முடிந்தது. இம்முறையும் அதே சூழல் ஏற்படவும் வாய்ப்புண்டு. அப்படி நடக்க நேடுமானால் மொத்தமுள்ள 400 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 300 இடங்களை ஆவழ பாஜக கைப்பற்ற கூடும். பாஜக உ.பி.யில் ஆட்சி அமைப்பதை தடுக்க முடியாமல் போகலாம். அதனால் மதவாத கட்சியான பாஜகவை தேற்கடித்த மதச்சார்பற்ற கட்சிகள் பீகாரை போன்று மெகாத் பந்தன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ஆனால், ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரான குலாம் நபி ஆசாத்,உ.பி.யில் மெகா கூட்டணி அமைய வாய்ப்பு இல்லையென்று டிசம்பர் 24ஆம் நாள் மீரட்டி வைத்து தெரிவிந்திருக்கிறார்.தேர்தலுக்கு முன்பாக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த வெரு திட்ட-மும் காங்கிரசிடம் இல்லை என்றார். காங்கிரஸ்,சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டீரிய லோக்கள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய முடிவை எட்டி விட்டது என்ற தகவல்கள் வெளியான நேரத்தில் தான் ஆசாத் அதிர்ச்சி அளிக்கும் படியான செய்தியை கூறியிருக்கிறார்.

 

காங்கிரஸ் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்களால் கூட்டணி  ஏற்பட்டிருப்பதாக வதந்திகளை துண்டி விடுகிறார்கள். நாங்கள் தனித்தே தேர்தல் களத்தில் நிற்போம் கடினமாக வேலை செய்து வெற்றியை பெறுவோம் என்றும் கூறியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் வதந்திகளை  நம்பாமல் 2017&ல் ஆட்சி அமைக்க கடினமாக உழைக்க வேண்டும் என்றுள்ளார். முக்கிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இடங்களையும் பங்கிட்டு கொள்ளும் தூரத்துக்கு வந்துவிட்டதாக நம்பமாக தகவல்கள் ஏற்கெனவே வெளிவந்திருக்கும் சூழ்நிலையில் ஆசாத்தின் பேச்சு மற்றவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்கலாமோ என்ற அச்சகளும் நமக்கு ஏற்படுகிறது.


Who's Online

We have 31 guests and one member online

  • Leonardrof