காஷ்மீரில் கடந்த ஜீலை மாதம் ஷர்கான் வாணி என்ற இளைஞர் இந்திய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து எழுந்த ஆர்பாட்டங்களை மத்திய அரசு இரும்புகரம் கொண்டு அடக்க முற்பட்டதில் முன் எனப்போதும் நிகழ்ந்திராத பாதிப்புகள், காஷ்மீர் மக்கள் உணர்ந்தனர். 

பாஜக,காஷ்மீர் அரசியல் அங்கம் வகிக்கிறது என்ற அளவிலும் அக்கட்சியானது அம்மாநில மக்களின் ரிமைகளுக்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பொறுப்புடையது. ஆனால் தனது மதவிரோத காழ்ப்புணர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு சர்வதேச நாடுகளின் கண்டனத்து ஆனாது. காஷ்மீர் மக்களின் வெறுப்புக்கும் இழக்கானது.

இந்த சூழ்நிலையில் தான் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் வடிக்கு மோடி அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.யஷ்வந்த் சின்கா, தன்னுடன் முன்னாள் தகவல் தொடர்பு ஆணையர் வஜ்ஹத் ஹபிபுல்லாஹ்.பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்துக்கான மையத்திள் தலைமை நிர்வாகி சுசோபா பர்வே விமானப்படையன் முன்னாள் துணை தளபதி கபில் கக் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் பாரத் பூஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை காஷ்மீர் சென்று சூழ்நிலையை ஆய்வு செய்து வந்திருக்கிறார்.

சூழ்நிலை சீராக இருக்கும் போது க்ஷின் பிரச்சனைக்கு தீர்வு தேடாமல் ஒழிய வேண்டும் ஸ்ன்று கேட்டிருக்கிறார். குறிப்பாக கட்சிக்குள் இருக்கும் மோடி,அமித்ஷா கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியல் போக்கைத் தான் அவர் சுட்டிக் காட்டுகிறார். அரசு சார்பாகவோ கட்சி சார்பாகவோ காஷ்மீர் பயணத்தை மேற்கொள்ளாத யழிவந்த் சின்கா குழு சொந்தமான செலவில் அனைத்தையும்  செய்து கொண்டிருக்கிறது. (சிஞிஸி) எனப்படும் பேச்சுவார்த்தை மற்றும் சமரச மையத்தின் ஆதரவை கூட கேட்கவில்லை.இந்திய குடிமக்கள் என்ற வகையில் மட்டும் தான் செயல் பட்டு வருகிறோம்’’என்றும் சின்கா கூறுகிறார்.

இப்போது காஷ்மீரில் கடும் பனி பொழிவு இருக்கிறது. புர்கானி வாணி கொல்லப்பட்டது போன்ற உணர்ச்சிகளை தூண்டும் செயல்கள் எதுவும் நடக்கவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை சுமூகமாக இருக்கிறது. பள்ளிக் கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன.ஊரடங்கு நாட்கள் கூட வாரத்துக்கு இரண்டு என்நு குறைந்திருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை தொடங்க இதுவே சரியான நேரம். பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க காஷ்மீரின் பல்வோறு பகுதியில் இருந்தும் வரவேண்டும். ஜம்முவில் உள்ள பண்புகள்,சீக்கயர்கள்,ஷிஆக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும் பேச்சுவார்த்தை யில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இக்குழு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடன் கலந்து பேசி இருக்கிறது. ‘‘இந்திய அரசு தங்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று அம்மக்கள் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மிகப் பெரிய துரோகமாக கருதுவது பெல்லெட் குண்டுகள் பயன்படுத்தப் படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்-டுகிறார்கள்’’ சின்கா.

காஷ்மீர் மக்களின் போராட்ட குணம் மாறியிருப்பதற்கான காரணத்தையும் கூறுகிறார். 1990க்கு பிறகு 2008 முதல் 2010காலக்கட்டத்திலும் இருந்ததை காட்டிலும் மக்களின் போராட்ட முறை மாறியிருக்கிறது. அந்த காலக்கட்டங்களில் மக்கள் கோபத்தின் உச்சத்துக்கு போவார்கள். முழுமையான அளவில் கோபத்தைத் தான் வெளிப்படுத்தினார்கள். ஆனால் இப்போது, அவர்களின் போராட்டம் வெறுப்பை காட்டுவதாக மாறியிருக் கிறது.

காஷ்மீரின் தெருக்கள் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹீரியத் அமைப்பினர் கூட சிறார்களை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின போக்கில் தான் போக நேர்ந்தது. இந்த சிறுவர்களின் போராட்டத்தை வழிநடத்த ஒரு தலைமை கூட இல்லை. இளைஞர்கள் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.நாங்கள் இரண்டாவது முறை சென்ற போது அவர்கள் கோபம் தணிந்திருந்ததை பார்க்க முடிந்தது.

இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிக்கிறது என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் மிக ஆழமாக இருக்கிறது. அங்கு வரலாற்று உண்மைகள் மாற்றத்துக் குள்ளாகி இருப்பதும் கூட இந்த நம்பிக்கைக்கு காரணம். காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கூட்டணிக்கும்,பாஜக&வுக்கும் இருக்கும் கூட்டை பயன்படுத்திக் கொண்டு காஷ்மீரின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமரச பேச்சை தொடங்க வேண்டும். பேச்சில் ஹீரியத் அமைப்பும் சேர்க்கப்பட வேண்-டும்.’’என்று கூறியுள்ளார்.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் காஷ்மீரில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்ப்பட்டதை சுட்டிக் காட்டிய சின்கா, காஷ்மீர் அமைதிக்கான பேச்சுவார்த்தை கட்டாய கடமை என்கிறார். இரு அரசுகளும் பேசாமர் இருப்பதற்கான காரணம் எதுமே இல்லை என்கிறார்.


Who's Online

We have 49 guests and one member online

  • Leonardrof