ரூ500,ரூ 1000 மதிப்புடைய பணங்களை நவம்பர் 08ஆம் நாள் மோடி அரசு தடைசெய்தது. பணம் அச்சடிக்கம் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உரியது என்பதால் பணமதிப்பை தடை செய்யும் உரிமையும் ரிசர்வ் வங்கிக்கே உண்டு. ரிசர்வ் வங்கியும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குவதால் மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் பொறுப்பு அதற்கும் உண்டு.

இந்த நிலையில் தான் வெங்கடேஷ் நாயர் எனும் சமூக ஆர்வலர் ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து கேட்டிருந்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(ஏ)பிரிவின் படி சிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்து விட்டது. 8(1)(ஏ) சட்டப்பிரிவானது, நாட்டின் இறையாண்மை,ஒற்றுமை, பாதுகாப்பு ஆகிய விவகாரங்களுக்கும், அறிவியல் அல்லது பொருளாதார நலன்கள் மற்றும் வெளிநாடுகளுடனான உறவல் பாதிப்பு ஏற்படுத்தும் விபரங்களை வெளியிடத் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுடடிக் காட்டியே ரிசர்வ் வங்கி தகவல் தர மறுத்து விட்டது. இப்போது மேல் முறையீடு போடப்போவதாக தெரிவித்துள்ளார்.


Who's Online

We have 48 guests and one member online

  • Leonardrof