பிரதமர் நரேந்திர மோடி 2014, மே மாதம் இந்திய பிரதமராகபொறுப்பேற்றதும் நாட்டு மக்களுக்கு நல்ல நாள் (அச்சே தின்)வந்து விட்டது என்றார்.

 ஆனால் மோடி அரசின் நல்ல நாட்கள் அவரது கட்சியினர் மற்றும் கட்சி சார்புடைய அமைப்புகளை சார்ந்திருப்பவர்களுக்கு தான் வந்திருக்கிறது என்பதைமெய்ப்பிக்கும் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது.  

வாஜ்பாய் ஆட்சியில் சங்க பரிவார் சார்பு கொள்கை கொண்ட 29 இயக்கங்களுக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததை பின்னர் வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 

சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அந்த நிலங்களை மீண்டும் அவர்களுக்கு வழங்க மோடி அரசு முன்வந்திருக்கிறது. 

மொத்தமுள்ள 26 பிளாட் நிலங்களில் பெரும்பாலானவை தீன தயாள் உபாத்யாய் சாலையில் அமைந்திருக்கிறது.  வாஜ்பாய், 1998ஸ-1999 மற்றும் செப்டம்பர் 2004 காலக்கட்டத்தில் 225 நிலம் ஒதுக்கீடுகள்  செய்தார். இவற்றில் 125 ஒதுக்கீடுகள் அரசுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. 2004ல் அடுத்து ஆட்சிக்கு வந்த மன்மோகன்சிங், தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ள வில்லை. பின்னர், மன்மோகன்சிங், இதற்காக ஒரு நபர் ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம், வாஜ்பாய் காலத்தில் மிச்சம் வைக்கப்பட்ட 100ல் 32 ஒதுக்கீடுகளை ரத்து செய்யும்படி பரிந்துரைத்தது.  அந்த 32 நிறுவனங்களும் அவர்கள் சார்புடைய அரசியல்அமைப்புகள் மூலம் பலன் அடைந்திருப்பதாக அந்த ஆணையம் கருதியது. இந்த 32ல் 22 நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் ன்  துணை நிறுவனங்கள் அல்லது அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆஷ்ரம்,பாரதிய கிஸான்சங்கம்,சமார்த் ஷிக்ஷா சமிதி, சேவாபாரதி மற்றும் சுதேசிஜக்ரன் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்தஅமைப்புகள்.

இந்த அனைத்து ஒதுக்கீடுகளும் முறையாக  வரையறை செய்து ஒதுக்கப்படவில்லை என்றும் தனி நபர் ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி இருந்தது.  நகர்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தும் இது விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் ஏற்பட்டதால், ஐக்கிய முற்போக்கு அரசு இறுதியாக 29 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. அதன்பிறகு இந்த 29ல் 3 நிறுவனங்கள் பிளாட்டுகளை திருப்பிஒப்படைத்தன. 

மீதமுள்ள 26 நிறு வனங்கள் அரசின்  முடிவைஎதிர்த்து தில்லி உயர்நிதி மன்றத்துக்குச் சென்றன. அடுத்தாக மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வரும் வரையில் (2014)இந்த பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது. பாஜக அரசு மத்தியில் மீண்டும் வந்த போது இந்த சங் அமைப்புகள் உற்சாகமும், ஊட்டமும் பெற்றன. மன்மோகன்சிங் காலத்தில் ரத்து செய்யப்பட்ட பிளாட்களை மீண்டும் பெறுவதற்காக மோடி அரசை அணுகின. அவற்றில் பெரும்பாலானவை பிளாட்டுகளை விட்டு தம்வசமே வைத்திருக்கின்றன. 

அந்த பிளாட்களில் தற்காலிகமான அலுவலகங்களை திறந்துள்ளார்கள். பாஜக அரசானது, பிளாட் ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சனை நீதிமன்றத்தில்   நிலுவையில் இருக்கும் போதும், கடந்தஆட்சியில் தனிநபர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் ரத்து செய்த பிளாட்டுகளை முறையான வரைமுறைகள் செய்யாமலும் ஆளும் கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும்ஆதரவான அமைப்புகள் என்பதற்காகவும் தலைநகரின்முக்கிய பாகங்களில் உள்ள இடங்களை தாரை வார்த்துக்கொடுப்பது நியாயமான செயல் இல்லை.

-ஜி.அத்தேஷ்


Who's Online

We have 56 guests and no members online