சிறுபான்மையினர் மற் றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டு அதிகரித்ததாகவும் பசுவை காப்பற்றவேண்டும்  என்பதற்காகவும், மாட்டு இறைச்சி சாப்பிட்டவர்கள்  மீதும் பாஜக ஆதரவுடன்  சங்பரிவார் (ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்பு) பயங்கரவாதிகள்   நடத்தும் வன்முறைகள் 2016ம் ஆண்டு அதிகரித்ததாகவும் பிuனீணீஸீ ஸிவீரீலீts கீணீtநீலீ (மனிதஉரிமை கண்காணிப்பகம்) என்னும்  சர்வதேச மனித உரிமை  அமைப்பின்  வருடாந்திர அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

சங் பரிவாரத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள, மற்றும்   வெறுப்பூட்டும் பேச்சுக்களை  பேசி வரும் பாஜக முக்கிய புள்ளிகளை தடுக்காமல்     மோடி அரசு தோல்வியை தழுவியுள்ளது.

 2016 மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டு வியாபாரி 35வயதான முஹம்மத் மஸ்ஹலும்  அன்சாரி  12 வயதேயான முஹம்மத் இம்தியாஸ் கான் என்ற இருவரையும் மதவெறி வன்முறையாளர்கள் கைகளை பின்புறமாக கட்டி கொன்று மரத்தில் தொங்க   விட்ட காட்சி  பாசிச பயங்கரவாதிகளின்   ஆணவ எழுச்சிக்கு முக்கிய சாட்சியமாக வழங்கியது.

 பசுவை கொண்டு சென்ற தாக கர்நாடகாவில் ஓர் இளை ஞரை மதவெறி கும்பல் கொலை செய்துவிட்டது. 

பசுவை கொன்றதாக கூறி   குஜராத் மாநிலம் உணாவில்  ஜூலை மாதம் 4 தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி நான்கு சக்கர வாகனத்தில் கட்டி வைத்து பொது இடத்தில் தடிகளாலும் பெல்ட்டுகளாலும்  தாக்கியதை அறிக்கை குறிப்பிட்டது. 

 பேச்சு சுதந்திரம் என்ற பெயரில்  எல்லை மீறி  மதவழி சிறுபான்மையினரை சீண்டும்  குழுக்களுக்கு   ஆளும் கட்சியின் ஆதரவு வலுவாக  இருப்பதால்  இது தொடர்கிறது என்று ஹீயுமென் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை வெளி நாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு  அனுப்பப்படும் நிதியை முடக்கியதையும்  குறிப்பிட்டுள்ளது.

 மேலும் அரசை எதிர்த்து கருத்து தெரிவித்தால் தேச துரோக வழக்கு சரமாரியாக போடப்பட்டதை  குறிப்பிட்ட அவ்வறிக்கை  காஷ்மீர் தொடர்பான  விவகாரங்களை விளக்கமாக குறிப்பிட்டுள்ளது. 

பாதுகாப்புப்படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி படுத்தும் இவ்வறிக்கை  சிவில் சமூகத்தின்  மீது ஏவப்பட்ட சித்திரவதைகள் மற்றும் நீதிக்கு   புறம்பான படுகொலைகள் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் அது   வடமுனை மாநிலமான காஷ்மீரில் மட்டுமல்ல மத்திய  இந்திய  மாநிலமான சத்தீஸ்கரில், கூட நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. 

2016ல்  அதற்கு முந்தைய ஆண்டை  விட மோடி ஆட்சியில் வன்முறை அதிகரித்ததாக   ஹீயுமென் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை அறைந்து சொல்லியுள்ளது.

- சத்தியவேந்தன் 


Who's Online

We have 41 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu