இஸ்லாமிய நிதியியல் குறித்து நேர் கொண்ட பார்வை.

பணமதிப்பிழப்பு  விவகாரத்தில் செல்லா நோட்டு பிரச்னையில் முஸ்லிம்கள்  சந்தித்த  நெருக்கடிகள் மிகவும்  கவலைக்குரியவை. குறிப்பாக கல்வியில் மிக குறைந்த அளவு  தேர்ச்சி  பெற்று  ஏழைகளாக வாழும் முஸ்லிம்கள்  பலருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை  . வட்டியை  அடிப்படையாகக் கொண்ட  வங்கிகளை  முஸ்லிம்களில் பலர் விரும்பாததால்  அந்த அனுபங்களை எல்லாம் சேர்த்து வட்டியில்லா வங்கியியலை நோக்கி   பார்வை திரும்ப தொடங்கியுள்ளது. 

வருவாய் குறைந்தது

இது குறித்து  அழுத்தமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இந்த ஆய்வின் மூலம் கவலைக்குரிய அறிகுறிகள்  வெளிப்பட்டன. 65  வயது  குத்தூஸ் பழைய  கோட்டைப்பகுதியில் வீடுகளில் இருந்து  பழைய பொருட்களை வாங்கி மிகச் சிறிய லாபத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது தின வருவாய் 400 ல்  இருந்து 500  வரை   இருந்த நிலை  மாறி 20 ரூபாயிலிருந்து 30  ரூபாய்  மட்டுமே  வருவாய் என்ற நிலையாகிவிட்டது.

40 வயது இர்பான் ஆற்காடு நகரின்  கஸ்தூரி  மார்க்கெட்   பகுதி யில்   காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது  இன்றைய  தின வருவாய் 50ல்   இருந்து 60 க்குள் தான். 

45 வயது   இக்பால் என்ற ராணிப்பேட்டையை சேர்ந்த   இறைச்சிக் கடைக்காரர் செல்லாக் காசு விவகாரம் அறிவிக் கப்பட்ட உடன் இவரது வருவாய்  சில நூறுகளாக சுருங்கியது . தொடர்ந்து இவரது வியாபாரம் கடனிலேயே   ஓடுகிறது. குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கே  இவர் அவதிப்பட்டு வருகிறார் 

60 வயது முஸ்லீம் பெண்மணி ஒருவர் ஓய்வூதியம்  பெறுபவர் . செல்லாக்காசு அறிவிப்புக்குப் பிறகு  முதல் வாரம் வங்கி வாசலுக்கு சென்று  இரண்டாவது  வாரம் தான்  தனது சொற்ப தொகையை   பெற்றுக்கொண்டு வரும்  நிலை. 

இந்த  சர்வே பனாரஸ் பட்டுப் புடவைகள் உருவாக்கப்படும் வாரணாசியிலும், பித்தளை தொழில்   நடக்கும் மொராதாபாத் திலும்,கண்ணாடி தொழிலுக்கு பிரசித்தி பெற்ற பெரோஷாபாத்திலும், பூட்டுக்கு பேர் போன  அலிகாரிலும்,  கைவினைப்பொருட்களுக்கு   புகழ் பெற்ற  லக்னோவிலும்   மேற் கண்ட தொழில்களில் ஈடுபட்ட முஸ்லிம்களின்   சம்பாத்தியம் மாய மானது. சேமிப்போ 500, ஆயிரம் செல்லா  நோட்டுக்கள்  நிலையை அடைந்துவிட்டது. 

வங்கிக் கணக்கும் முஸ்லிம்களும்

இது தொடர்பாக ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த சபீர் ரஹ்மான்  சொல்கிறார், வட்டி முறையை எதிர்ப்பதால் முஸ்லிம்கள் வட்டி அடிப்படையிலான  வங்கிகளில் கணக்கு வைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  63 சதவீதம் முஸ்லிம்கள் தான் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர். இது தேசிய சராசரி விகிதமான 78 சத வீதத்தை விடக்   குறைவானது. தபால் நிலைய சேமிப்பில் முஸ்லிம்கள்  9 சதவீதமே   கணக்கு வைத்துள்ளனர். இதுவும் தேசிய சராசரி அளவான 14 ஐ விட குறைவுதான். மொத்தத்தில் 37 சதவீதத்தினர் வங்கிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இது செல்லா நோட்டு பிரச்னை யில் முஸ்லிம்கள் எல்லோரையும் விட பெரும் பின்னடைவை சந்தித்தனர் என்பதற்கு சாட்சியாகும். குறைந்த வருவாய் பெறுபவர்களிலும் முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமானது.  முஸ்லிம்களில் 63 சதவீதம் பேர் 1.20  லட்சத்திற்கும் குறைவான வருவாய் பெறு கின்றனர். மாதம் 10 000 ரூபாய் கூட வருவாய் பெற முடியா அவல நிலையை என்னவென்பது?  3 லட்சமும் அதற்கு மேலும் வருவாய் உள்ளவர்கள் 6 சதவீதகித்தினர் தான்.

 வங்கி வாசல் மரணங்கள்

 55 பேரை காவு வாங்கிய வங்கி வாசல்  மரணங்களில்   முஸ்லிம்கள் மட்டுமே  12 பேர் என்று அந்த சர்வே சொல்கிறது.  முஸ்லிம்கள் சிறுதொழில் களிலும்  குறிப்பாக  முறை  சாரா தொழில்களிலும்  ஈடுபட்டுள் ளார்கள்.  அவர்களது தொழில் வருவாய்க்கான கணக்கோ தணிக்கையோ கிடையாது. எனவே இழப்பை சந்திக்கின்றனர்

 இந்திய இஸ்லாமிய நிதி யியல் செயலாளர் மற்றும் இஸ்லாமிய வங்கியியலின் ஒருங் கிணைப்பாளருமான  அப்துல் ரகீப்,  பிரதமர் மோடி இஸ்லாமிய வங்கி  குறித்து மீண்டும் யோசிக்க வேண்டிய தருணம் இது. என் கிறார். மோடிக்கு டிஜிட்டல் இந்தியாவை கட்டமைப்பதில்   நிஜமான அக்கறை இருக்கு மானால் பணமற்ற பொருளாதாரத்தில்  மனம் இருக்குமானால் இந்நாட்டை   ஊழலில் இருந்து விடுவிக்கும் எண்ணம்  இருக்குமானால் ஷரியா வங்கியியலில்  கவனம் செலுத்தி கொண்டுவரும் நடவடிக்கைகளை   முன்னெடுக்கவேண்டும். 

இஸ்லாமிய வங்கிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு முற்றிலும் முஸ்லிம் களுக்கானது  என்று பரப்பப்பட்டதால்  அது   சிலரால் எதிர்க்கப்படுகிறது. ஆனால் இதில் நெறிப்படுத்தப்பட்ட முதலீடுகளால் வட்டியின்றி  பன்னாட்டு அளவில் அது செயப்படுத்தப்படுகிறது.

 பிரிட்டன், ஹாங்காங், சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வங்கி   வழக்கமாக செயல்படும்  முறைகளோடு இஸ் லாமிய  வங்கியும் செயல்பட்டு வருகிறது  அந்நிலையில் இந்தியாவால் ஏன் முடியாது என்றும் கேட்கிறார். ஷரிஆ வங்கி  என்பது  வட்டியில்லா முதலீடுகளால்  செயல்படுவது ஆகும். புகையிலை, மது , சூதாட்டம் போன்றவற்றில் இவை முதலீடு  செய்யப்படாது   என்பதைத்தவிர  வேறு எவ்வித மத கோணமும் இதில் இல்லை என்கிறார் அப்துல்ரக்கீப்.  உண்மையில்  இவரது அமைப்பின் வலியுறுத்தலின்   காரணமாக ரிசர்வ்  வங்கி  ஒரு கமிட்டியை அமைத்தது. ஜூலை 2015ல் அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரை நடைமுறையில் செயல்படுத்தப்படும்   வங்கி முறை களில்   வட்டியில்லா வங்கிப் பிரிவை  தொடங் கலாம்  என   பரிந் துரைத்தது. அது மட்டுமின்றி 2014ல் மோடி தலைமை யிலான ஆட்சி நவம்பர் 2014 ஷரிஆ  பரஸ்பர நிதி  ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியாவுடன் இணைந்து தொடங்கப்பட்டது. பின்னர் சு சாமி  போன்றோரின் சட்ட பூர்வ இடையூறுகளால் முடக்கப்பட்டது. வட்டியில்லா வங்கியை பிரதமர் நேரடியாக கொண்டு வரவேண்டும் என்கிறார் அப்துல்ரக்கீப். வளைகுடா நாடுகளில் ரிலையன்ஸ் , டாடா, ஐ சி ஐ சி ஐ  மற்றும் கோடக் வங்கிகள் வளைகுடா நாடுகளுடன் வட்டியில்லா வங்கி பரிவர்த்தனைகளை    செய்யும்போது இந்தியாவில் ஏன் முடியாது என்றும் கேட்கிறார் அப்துல்ரக்கீப்.

 மும்பை பங்கு   சந்தையில் பட்டிய லிடப்பட்டுள்ள 6000 நிறுவனங்களில்  4, 200 நிறுவனங் கள் இஸ்லாமிய  வங்கி இயலில்  பரிவர்த்தனை செய்கின்றன. இந்நிலையில்   அது ஏன் சாத்திய மாக்கக்கூடாது ?  என்கிறார்.

 இஸ்லாமிய வங்கியியலை நாடு முழுவதும்   அறிமுகப்படுத்தும்  சிந்தனை அலைபோல பரவுகிறது.  

(பிரண்ட்லைன் (பிப்ரவரி 3 2017) இதழில் பூர்ணிமா திரிபாதி எழுதிய கட்டுரையை தழுவியது.)

- அபூஸாலிஹ் 

 


Who's Online

We have 28 guests and one member online

  • Leonardrof