முஸ்லிம்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ்.

முஸ்லிம்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்து மதவாதசக்திகளை முறியடிக்க வேண்டும் எனக் கோருகிறார் மாயாவதி  தனித்து நிற்க முயன்ற காங்கிரஸ், முஸ்லிம் வாக்குகள்  பெற சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக வெளியிட்ட 304 வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இவை அனைத்தும் உபியில் முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்தியாக அமைந்துள்ளதை காட்டுகிறது. பாஜக உட்படஅனைவருமே முஸ்லிம்களை குறிவைத்து தேர்தலில் தம் வெற்றி வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தலித்களை விட அதிகமாக முஸ்லிம்கள் 

 உபியில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு முதல் கட்சியாக தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே  மாயாவதி முஸ்லிம்களின் ஆதரவை திரட்ட தொடங்கி விட்டார். தாம் இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் இல்லாத வகையில்முஸ்லிம்கள் வேட்பாளர்களை அதிகமாக நிறுத்தியுள்ளார். இவரது பகுஜன் சமாஜ் கட்சியில் தலீத்துகளை விட அதிகமானஎண்ணிக்கையில் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறைந்துள்ளனர். தற்போது, மாயாவதி கட்சியில் வேட்பாளர்களாக தலீத்துகள் 87-ம், முஸ்லிம்கள் 101-ம் உள்ளனர். 

கடைசிவேளையில் இவர் கிரிமினல் அரசியல்வாதி எனப் பெயர் எடுத்து முகம்மதுஅப்சல் அன்சாரியின் கவ்மி ஏக்தாதளம் கட்சியையும் தன்னுடன் இணைத்து கொண்டார். பல்வேறு கிரிமினல் குற்றவழக்குகளில் சிக்கிய அன்சாரி உபியின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் இந்த கட்சி சமாஜ்வாதியில்இணைக்கப்பட்டது. பிறகு இதை அகிலேஷ்சிங் ஏற்கவில்லை என்பதால் இணைப்பு ரத்து செய்யப்பட்டது இவ்வாறு தன்முக்கிய எதிரிகட்சி ஏற்க மறுத்த அன்சாரியை மாயாவதி தம்முடன் இணைத்துள்ளதன் காரணம் அவர் ஒரு முஸ்லிம்என்பதால் தான். இவரது கட்சி வலிமையாக உள்ள கிழக்கு உபி பகுதியில் சில மாவட்டங்களில் தனக்கு முஸ்லிம்கள்வாக்குகள் கிடைக்கும் என மாயாவதி நம்புகிறார்.

 முஸ்லிம் - யாதவ் சமூகத்தின் ஆதரவை நாடும் அகிலேஷ்

 ’எம்.ஒய்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் சமூகத்து ஆதரவு பெற்ற கட்சியாக சமாஜ்வாதி உள்ளது.முஸ்லிம் வாக்குகள் கிடைத்தால் தான் சமாஜ்வாதி, உபியில் ஓரிருமுறை ஆட்சி அமைக்க முடிந்தது.

 2006 தேர்தலில்இக்கட்சியில் பாஜகவின் முன்னாள் தலைவரான கல்யாண்சிங்கை முலாயமுடன் சேர்த்து வைத்தார் அமர்சிங். இதனால்,கடும் கோபம் கொண்ட முஸ்லிம்கள் சமாஜ்வாதியை புறக்கணித்து தங்கள் வாங்குகளை மாயாவதிக்கு அளித்துஆட்சியில் அமர வைத்தனர். இதன் பிறகு தன் தவறை உணர்ந்த முலாயம், கல்யாண்சிங்கை சமாஜ்வாதியில் இருந்துநீக்கியதுடன் வெளிப்படையாக முஸ்லிம்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அடுத்து 2012 தேர்தலில் மீண்டும் முஸ்லிம்கள்முலாயமிற்கு வாக்களித்து அவரது மகன் அகிலேஷை முதல்வராக அமர வைத்தனர். எனவே, இந்தமுறை அகிலேஷ்முஸ்லிம்களுக்காகவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இல்லை எனில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும்காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் வாய்புகள் நிலவின. இதை ஆதாயமாக்கி பாரதிய ஜனதாஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது என காங்கிரஸை கூட்டணியாக்கி உள்ளார் அகிலேஷ்.

 நாடு சுதந்திரம் அடைந்தது முதல் உபி முஸ்லிம்கள் காங்கிரஸுடன் இருந்தனர். ஆனால், காங்கிரஸின் பிரதமராக அமர்ந்தபி.வி.நரசிம்மராவின் ஆட்சியில் அயோத்தி பாபர் பள்ளிவாசல இடிக்கப்பட்டது. இவர், உபியின் பாஜக முதல்வராக இருந்தகல்யாண்சிங்கிடம் ரகசியமாக கைகோர்த்து வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிவாசலை அநியாயமாக இடித்தனர் எனப் புகார் கிளம்பியது. 

இதை நன்கு உணர்ந்த உபி முஸ்லிம்கள் 1992-க்கு பின் முற்றிலுமாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரானமுலாயம்சிங்கிற்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும், காங்கிரஸ் தன் பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களைநிறுத்துவதால், வாக்குகள் பிரியும் நிலை ஏற்படுவது உண்டு. இதை தடுப்பதற்காகவே காங்கிரஸின் துணைத்தலைவரானராகுல் காந்தி, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ளார். இதன் மூலம் காங்கிராஸின் தேர்தல் திட்டத்தில் முஸ்லிம்கள்முதல் இடம் பிடித்திருப்பதை உணர முடியும். தனித்து போட்டியிட்டு உபியில் விட்ட ஆட்சியை பிடிப்பதாகக் கூறி வந்தகாங்கிரஸ், முஸ்லிம. வாக்குகளுக்காகவே தன் முடிவை மாற்றியுள்ளது.

 பாஜகவும் முஸ்லிம்களை 'குறி' வைக்கிறது

 இறுதியாக, பாஜகவிற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது இல்லை என்பதால் அக்கட்சி அவர்களை கண்டுகொள்வதில்லை எனசட்டெனக் கூறி விட முடியும். ஆனால், அதன் பின்னணியில் சற்று ஆழமாக பார்த்தால் பாஜகவும் முஸ்லிம்களை குறிவைப்பது எளிதாக உணர முடியும். பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் பல மதவாத தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 2013-ல் நடைபெற்ற முசாபர்நகர் மதக்கலவரத்தில் சிக்கியிருந்தவர்களான சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ராணாவிற்குமீண்டும் போட்டியிட சீட் தரப்பட்டுள்ளது. இவர்களில் சங்கீத் சோம் தன் பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே வாகனத்தில்தொலைக்காட்சி பெட்டியை அமைத்து தடைசெய்யப்பட்ட மதக்கலவரக் காட்சிகளை காட்டியுள்ளார். இதன் மீது மத்தியதேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. பாபர் பள்ளிவாசல் இடிபடக் காரணமானவர் எனப்பெருமை கொள்ளும் கல்யாண்சிங்கிற்காக அவரது பேரனுக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. உபியின் மேற்குபகுதியில் பாஜகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு மதக்கலவரப் பின்னணியில் இருந்தவர்கள் என்ற புகாரைதாங்கியுள்ளனர். இதன்மூலம், பாஜகவும் மற்ற மூன்று கட்சிகளை போல் வெளிப்படையாக இல்லாவிட்டாலும்,மறைமுகமாக முஸ்லிம்களை குறி வைத்திருப்பது புரியும்.

 முஸ்லிம்கள் நிலைப்பாடு

 உபியில் அதிகமான சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஒவ்வொரு சமூகமும் ஒரு அரசியல் கட்சிக்கு நிரந்தர ஆதரவைதந்து வருகின்றன. ஆனால், முஸ்லிம்கள் மட்டுமே தன் வாக்குகளை முலாயம் அல்லது மாயாவிற்கு என மாற்றி, மாற்றிஅளித்து ஆட்சியில் அமரச் செய்து வருகின்றனர். இத்தனை தேர்தல்களிலும் இந்த உண்மையை அனைத்து அரசியல்கட்சிகளும் மறைத்தே வந்துள்ளன. ஆனால், இந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர்களால் முஸ்லிம்கள் தான் ஆட்சியின்சாவி என்பதை ஏற்க வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது. 

இம்மாநிலத்தில் சுமார் 24 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள்முற்றிலுமாக ஒன்றிணைந்தால் அவர்கள் சமுதாயத்தில் இருந்து முதல் அமைச்சரை அமர வைக்கலாம். இவர்களில்சிலருக்கு இடையே உள்ள சமுதாயம் மீதான கருத்து வேறுபாடுகளால் முஸ்லிம்களால் அந்தப் பதவியில் அமர முடியாமல்உள்ளது. இந்த மாநிலம் தான் மத்தியில் ஆட்சியையும் நிர்ணயிக்கும் திறன் படைத்தது எனக் கூறப்படுவது உண்டு. இந்தநிலையை உபி முஸ்லிம்கள் மட்டும் இன்னும் உணராமல் இருப்பது ஏன் என்பது அவசியமாக கேள்வி ஆகும். 

-அனீஸ் அஹ்மது


Who's Online

We have 44 guests and one member online

  • Leonardrof