முஸ்லீம் லீகின் 60 ஆண்டுகால வரலாற்றில்  மத்திய அமைச்சராக வலம் வந்தவர் இ .அஹ்மது மட்டுமே.  ஆனால் அந்தப் பதவியை வைத்து தனது   நாட்டுக்கு, தனது மாநிலத்திற்கு,  தமது சமுகத்திற்கு,   தமது கட்சிக்கு  உரிய மரியாதையும் அங்கிகாரமும்  கிடைக்க  நாளும் பாடுபட்டார் இ அஹ்மது .

 1938  ஏப்ரல்  29ம் தேதி அப்துல்காதர் ஹாஜி  நபீஸா பீவியின் மகனாக வடகேராளாவில் கண்ணூர் மாவட்டம் தானாவில் பிறந்தார் இ.அஹமது.  பிரெனேன்  அரசு கல்லூரியில்   பட்டப்படிப்பை முடித்த அவர் திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில்  சட்டப்படிப்பை முடித்தார். 

 மாணவர் தலைவர்

1967ல் முதல்முறையாக சட்டமன்றம் சென்றார். அவரது முதல் கன்னிப்பேச்சு  அனைவரையும் கவர்ந்தது. மாணவர் சமூகத்தில்  இருந்து உருவான சக்தி மிகுந்த அரசியல்வாதிகளில்  ஏகே அந்தோணிக்கு அடுத்தபடியாக இ. அஹ்மது  கேரள வரலாற்றில் இடம் பெற்றார்.

 லீக்  மாணவர் அமைப்பான எம். எஸ். எப். அமைப்பில்  சாதாரண உறுப்பினராக இருந்து அதன் மாநில பெறுப்பேற்று  அதன்பிறகு தீவிர அரசியலில்   தடம் பதித்தார்.  இவர் 1967 முதல் 1991 வரை 5 முறை கொடு வெள்ளி  தானுர், மற்றும் கண்ணூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்.  1981--- -1982 கண்ணூர்  நகர் மன்றத் தலைவர்.  1982 முதல் 1987 வரை மாநில தொழில்துறை அமைச்சர். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கேரளா தொழில்துறையில்   சிறந்து விளங்கியது.

 1991ம் ஆண்டு அவருக்கு தேசிய அரசியலுக்கான கதவு திறந்தது. 10வது மக்களவை தேர்தலில் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.     நாடு விடுதலை அடைந்த காலக்கட்டத்தில்  தேசப்பிரிவினைக்கு வித்திட்ட கட்சி   என விஷமிகள் பரப்பிய போதும்,  முஸ்லிம் லீக் வரலாற்றில் நெருக்கடியான  காலக்கட்டத்தில் கட்சியின்  தலைமைப் பொறுப்பினை துணிவுடன் ஏற்று சமுதாயத்தின் வாழ்வாதார உரிமைகளுக்கு   தீரத்துடன் குரல் கொடுத்தார்.  கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில், அதன்பின் சமுதாயம்  சந்தித்த நெருக்கடிகளை கண்டு  அஞ்சாது நாடாளுமன்றத்தில் குலாம் மஹ்மூது பனாத் வாலாவும் , இப்ராஹிம் சுலைமான் சேட்டும் உரிமைக்கு குரல் கொடுத்தனர்.

 2004ல் மத்திய அமைச்சர்

 இ.அஹ்மதுவின் காலக்கட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தமானார்.  தனது கூட்டணி   மாநிலத்தில்      படுதோல்வியை சந்தித்த போது ஒற்றை  மனிதனாக கேரளாவின் காங்கிரஸ் முஸ்லீம் லீக்  மக்களவை பிரநிதியாக இருந்து சமுதாய நலன் , மாநில நலன் இரண்டிற்கும்  வாதாடினார். ஆங்கிலம் உருது என இரண்டு மொழிகளிலும்  தேர்ச்சி பெற்ற அவர் தனது பேச்சாற்றலால் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின்   இதயங்களை வென்றார்.  

 ரயில்வேத்துறை இணை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சராகவும் மனித  வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று  சிறப்புற பணியாற்றினார். சர்வதேச முஸ்லிம் தளங்களில்  நன்கு  அறிமுகமான   முகமாக தன்னை வளர்த்துக்கொண்ட    இ. அஹ்மது, அரபு  உலகத்திற்கும்  இந்தியாவுக்கும்  உறவுப்   பாலமாக   விளங்கினார். புனித   கபத்துல்லாஹ் வை   கழுவும்  நிகழ்வுக்காக   பல  தடவை  சவூதி   அரசின்  சார்பில்  அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

 எந்த  மத்திய  அமைச்சரும்  நாடாளுமன்ற   உறுப்பினரும் சாதிக்காத  அளவு   தனிப்பட்ட   சாதனைகளுக்கு   சொந்தக்காரர்   அவர்.

 கேரளாவை   சேர்ந்த வெளிநாடு  வாழ்  இந்தியர்களை    நாட்டின்   மீதுள்ள   அக்கறையை  அதிகரிக்க செய்யும் விதமாக   பல்வேறு  முன்  முயற்சிகளை  மேற்கொண்டார். அதனைத்  தொடர்ந்து  கேரளா   வெளிநாடு  வாழ் இந்தியர்களின் வங்கி  டெபாசிட்  ஒரு லட்சத்து  30 ஆயிரம்   கோடிகளாக உயர்ந்தது.   இது  அஹ்மது  வின் ஆர்வம்   நிறைந்த  ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 

 ஐ.எஸ்.எஸ். கடத்தியவர்களை மீட்பதில் பங்களிப்பு

 2004ல்  இராக்கில்  மூன்று   இந்தியர்கள்  ஐ. எஸ். ஐ. எஸ்.  தீவிரவாதிகளால்  கடத்தப்பட்டு  நாடே  பதறியபோது  இ .அஹ்மது  உடனடியாக  செயலில் இறங்கினார். 

 பணய கைதிகளை  மீட்குமாறு      தொலைக்காட்சியில்  தோன்றி  வேண்டுகோள்   விடுத்தார். அந்த  வேண்டுகோள்  இராக் , குவைத், ஓமான்  நாடுகளின்   தொலைக்காட்சிகளில்   வெளி யானது.  தொடர்ந்து   ராஜதந்திர  பேச்சு   வார்த்தைகளுக்குப்பிறகு   மூன்று இந்தியர்களும்   விடுவிக்கப் பட்டனர்.டிபி  ஸ்ரீனிவாசன்  என்ற வெளியுறவுத்துறை  முன்னாள்  அதிகாரி  சொல்கிறார், அஹ்மத்  சவூதியோடு    கொண்டிருந்த நட்புறவு   இந்தியாவுக்கு  பெரும் உதவியாக  அமைந்தது  என்றும்,  மத்திய கிழக்கு  நாடுகளின்  பல தலைவர்களுடன் அவர்   சிறந்த  நட்புறவு பேணினார் என்கிறார். 

 இ.அஹ்மது  மறைந்த அன்று   நாடாளுமன்ற  அவையை  ஒத்தி வைக்காமல்   இரங்கல்  தீர்மானம்    வாசிக்காமல்   பட்ஜெட் அறிக்கை  வாசிக்கப்பட்டது.  இது  குறித்து    கேரளா   முதல்வர் தோழர்  பினராய்    விஜயன்,   கேரளாவின்    மூத்த அரசியல்    தலைவரின்   மரணத்திற்கு   இரங்கல்  தீர்மானம் இயற்றாமல்   அவையை   ஒத்திவைக்காமல்  மத்திய   அரசு பட்ஜெட்   கூட்டத்தொடரை  நடத்திக்கொண்டு   இருந்தது.  இதனை கேரளா  மக்கள்  மறக்கவும்  மாட்டார்கள்   மன்னிக்கவும்  மாட்டார்கள்  என்றார்.

-அபுசாலிஹ்

மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹ்மது அவர்களின் சொந்த ஊரான கண்ணூரில் நடைபெற்ற  ஜனாஸா (இறுதி) தொழுகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பங்கு கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் இறுதித் தொழுகையில் பங்குக் கொண்டார்கள். முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெற்றது. இதன் பிறகு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவர் தனது உரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இ. அஹ்மது சாஹிப் அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு இக்கட்டான நேரத்தில் இ.அஹ்மது அவர்களை இழந்துள்ளோம். 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 18 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் அஹ்மது சாஹிப். முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் இவரை தனது சிறப்பு தூதராக ஜிசிசி என்னும் வளைகுடா நாட்டிற்கு அனுப்பிவைத்தார். 10க்கும் மேற்பட்ட முறை அவர் இந்தியா சார்பாக ஐ.நா. மன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவருக்கு இறைவன் மறுமையின் உயர் பதவியை வழங்க பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

Who's Online

We have 36 guests and one member online

  • Leonardrof