நரேந்திர மோதியின் மத்தியஅரசாங்கம்  நவம்பர் 2016 உடன், தனது பதவிக் காலத்தில் பாதியை முடித்துள்ளது. இந்த அரசின் முக்கியத் தன்மையாக நம்முன் நிற்பது எது? அவரை நம்பிக்கையூட்டும் தலைவராகவும்,உறுதியான நிலைபாடுகளைஎடுக்கும் துணிவு மிக்கவராகவும் சில விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

நாட்டின் போக்கையே மாற்றிஅமைக்கும் திட்டத்தோடு  அவர் செயல்படுவதாகக் கருதுவோரும் உண்டு.  இது ஒரு சிறு குழுவினரின் பார்வைதான். மிகப்பெரும்பான்மையான மக்களின்பார்வையோ இதற்கு நேர்முரணாகஉள்ளது.

தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு நல்ல காலத்தைப் பிறக்க வைப்பதாக(அச்சே தின்) வாக்களித்தது, குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15லட்ச ரூபாயை வரவுவைக்கப் போவதாகவும் அறிவித்தது, நரேந்திர மோடிக்கு மக்கள்ஆட்சியை வழங்கியதும் மேற்கண்ட வாக்குறுதிகளை நோக்கி இந்த அரசாங்கம் ஓர் எட்டு கூட எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குமோடியின் ஆட்சியில் விலைவாசிஉயர்ந்து வருகிறது. இத்தோடு மோடிஅறிவித்த செல்லாப்பண அறிவிப்பும்சேர்ந்து மக்களை சித்ரவதை செய்துவருகிறது.சாதாரண எளிய மக்கள் மீது மோடிஅரசாங்கம் தொடுத்த இந்தத்தாக்குதலால்,வங்கி வாசலிலும் பணமெடுப்புமைய (ஏ.டி.எம்)வாசலிலும் நொந்துபோய் வரிசையில் நின்ற மக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர்.  

அதிகாரக்குவிப்பு

இதற்கு முந்தைய மற்ற மத்திய அரசுகளுக்கும், மோடியின்அரசுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, அதிகாரக்குவிப்புதான்.மத்திய அமைச்சரவை என்றஜனநாயக அமைப்பு, பிரதமர்மோடியின் ஆசைகளையும்,கட்டளைகளையும்நடைமுறைப்படுத்துவதற்குமட்டுமே உள்ள ஒரு குழுவாக சுருக்கப்பட்டுள்ளது.

ஒரு தனி மனிதரைச் சுற்றியே அரசும், அதன் அனைத்து அதிகாரங்களும் செயல்படுகின்றன. செல்லாப்பண அறிவிப்பு விதமும் அவற்றில் ஒன்றே. இந்த இரண்டரைஆண்டுகளில் மோடி  எண்ணற்ற அறியப்பட்ட நாடுகளுக்கும், அறியப்படாத நாடுகளுக்கும் சுற்றிப்பறந்தார். ஆனால் பாகிஸ்தான் மற்றும் நேபாளம்  குறித்து உலகநாடுகள் இதற்கு முன்கொண்டிருந்த  நிலைப்பாடுகளில்எந்த மாற்றத்தையும்  மோடியின் பயணங்கள் ஏற்படுத்தவில்லை.

வெறுப்பு நெருப்பு

 பாஜகவின் முன்னணித் தலைவர்கள், சமூகங்களிடையே பகைமையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சுக்களை மிகத் தீவிரமாகப்பேசினர்.  மதச்சிறுபான்மையினர் மீதான வெளிப்படையான மிரட்டலாகவே  இவை  இருந்தன. மத்திய அமைச்சரவையின் கேபினட் அமைச்சர் ஒருவர், பாஜக அரசுக்கு ஆதரவாக இல்லாதவர்கள் யாவரும் தவறான வழியில் பிறந்தவர்கள்(ஹராம் ஜாதா) என்று பேசும்நிலையும் இருந்தது.

 கல்வியைச் சீரழித்தமை

 பல்கலைக்கழகச் செயல் பாடுகளிலும் மோடியின் அரசு தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்தது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் என்பதற்காகவே, தகுதியற்றவர் கள் நியமிக்கப்பட்டனர். கல்வி வளாகங்களில்ஆர்.எஸ்.எஸ்.ஸின்  துணை அமைப்பான ஏ.பி.வி.பி (அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத்) மோடி அரசின் ஆசிர்வாதங்களோடு முழுவீச்சில்  இயங்கியது. ஜவஹர்லால்நேரு மத்திய  பல்கலைக் கழகம்,ஹைதரபாத் மத்திய  பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் மாணவர்களின் ஜனநாயக அமைப்புகள் கொடுமையாக ஒடுக்கப்பட்டன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் கன்னையா குமார் மற்றும் அவரது தோழர்கள், தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். ஹைதரா பாத் பல்கலைக் கழகத்தில் இவ்வரசின் ஒடுக்கு முறை, ரோஹித் வெமுலா என்ற தலித் சமுதாய   முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவரை தற்கொலையை நோக்கித் தள்ளியது.

 மிரட்டும் அரசியல் பாணி

 ‘லவ் ஜிஹாத்’ என்ற பிரச்சினையைக்  கிளப்பியதும், தாய்மதம் திரும் புதல் (கர்வாபசி)செயல்பாடுகள் முகாம் ஆர்.எஸ்.எஸ் பாசறையில்தயாரானவர்கள் சமூகத்தில் பிளவுகளையும், வெறுப்புகளையும் வளர்த் தனர். பசு மற்றும்மாட்டிறைச்சி  அரசியல் மூலம் வெறுப்பு பரப்புரையை, கலவர வன்முறையாகவும் பரிணமிக்கவைத்தனர் சங்பரிவாரங்கள்.மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி சங்பரிவார குண்டர்களால் தாத்ரி என்ற ஊரில்அடித்துக் கொல்லப்பட்ட முஹம்மதுஅஹ்லாக்  சம்பவமே இதற்கு போதிய சான்று. ‘உனா’என்ற இடத்தில் மாட்டுத் தோலை வைத்திருந்த தலித்கள் கட்டிவைத்து  அடிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர். இந்த அரசின் கண்டு கொள்ளாமை மூலம் சங்பரிவார  வெறியர்கள் பெரும்துணிச்சல் பெற்றனர்.

  அறிவு ஜீவிகள் படுகொலை

 சங்பரிவாரக் கருத்தியலுக்கு எதிராக சமுதாயத்தில் உண்மையையும், பகுத்தறிவையும் முன்வைத்த சான்றோர்களான எம்.எம். கல்புர்கி,நரேந்திர தபோல்கர்,கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். மனசாட்சி மிகுந்த மாமேதைகளும், இலக்கிய வாதிகளும், கலைஞர்களும் இதற்கு மாபெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, தாங்கள் பெற் றிருந்த அரசின் விருதுகளையும் திருப்பிக் கொடுத்தனர். ஆர்.எஸ்.எஸ். அனுதாபியான அருண் ஷோரி போன்றவர்களே, பரவலாக்கப்பட்ட அவசர  நிலை என்றும்,கட்டமைக்கப்பட்ட மாஃபியா நிலை என்றும் மோடி அரசை விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

 விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோதம்:

 மோடி அரசு கொண்டு வந்த நில அபகரிப்புச் சட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த அரசு கொண்டு வந்த திட்டங்கள்,தொழிலாளர்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கொள்ளை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருந்ததன. சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் தொழில்களும், கார்ப்பரேட்களுக்காக இந்த அரசால் நசுக்கப்பட்டன.

 கார்ப்பரேட் கொள்ளை

நிறுவனங்களுக்கு, கடன்கள்  வாரி வழங் கப்பட்டு, வராக் கடனாக்கப்பட்டு, தள்ளுபடியும் செய்யப்பட்டன. பலநூறு கோடிகள் கடனோடு விஜய் மல்லையா போன்றோர் தப்பிச் சென்றனர். எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, மக்கள் நலனுக்காகப்  போராடி வந்த அரசு சாரா நிறுவனங்கள் மத்திய அரசால் மிரட்டப்பட்டன. அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அவற்றிற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது. மக்கள் திரளின் எதிர்ப்புக் குரல்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டன.

 தேச விரோத முத்திரை

 கருத்துச் சுதந்திரமே ஜனநாயகத்தின் தரமுத்திரை ஆகும். ஆனால், மோடி அரசை  விமர்சிப்பவர்கள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்படுகின்றன. ‘பாரத் மாதா கீ ஜே’என்று முழங்குவதன் மூலமும் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவதன் மூலமும் மத்திய அரசு அடையாள அரசியலைக் கட்டமைக்க முயல்கிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பால் மதவெறி  சங்பரிவார சக்திகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல்,சகல வன்முறைகளையும்     நிகழ்த்தினர். சங்பரிவாரங்கள் வளர்க்கும் வன்முறையின் வளர்ச்சி வீதம்,பழைய அரசின் தவறுகளையும் சரிகாண வைத்து விட்டது. மத்திய அரசிள் செல்லாப்பண அறிவிப்பு கறுப்புப் பண பரிவர்த்தனையின் புதிய முறைகள் நடைமுறையில் உள்ளதைப் பறை சாற்றின.கறுப்புப்பணம் என்பது பணத்தாள் வடிவத்தில் மட்டும் இருப்பதில்லை. 

பரிவர்த்தனை என்ற வடிவிலும், வெளிநாட்டு முதலீட்டு வடிவிலும்,நிலங்கள் மற்றும் நகைகளின் வடிவிலும் இருப்பதையும் அறியாமல் இருந்தது இவ்வரசின் அறியாமை வெளிப்பட்டது.  மோடியின் ஆட்சி பரிபாலனத்தில், நாட்டின் மாபெரும் தொகை கொண்ட மக்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். பல்கலைக் கழகங்களில் மோடி அரசு செய்த தவறான தலையீடுகளால், கன்னையாகுமார் போன்ற மாணவத் தலைவர்களின் பின்னால் இலட்சக்கணக்கான மாணவர்கள் அணிதிரண்டனர். ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்களின் தலைமையால் தலித்துகள் பெரும் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.  இந்த எதிர்ப்புகளே ஜனநாயகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கையை விதைக்கின்றன. 

 ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மாபெரும் அணியை உருவாக்க வேண்டிய அவசியத்தை மற்ற கட்சிகள் உணர்ந்துவிட்டன. மதச்சார்பற்ற கட்சிகளின் மாபெரும் கூட்டணி மோடியின் அரசை வீழ்த்தும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

-ராம்புன்யானி (தமிழில் ஹாஜாகனி)


Who's Online

We have 44 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu