தேசப் பற்றுக்கு  ஒட்டு மொத்த குத்தகைக்காரர்கள் நாங்களே  என்று வாய்கிழிய வசனம் பேசும் கோட்ஸே கூடாரத்தினர் அண்மையில் அசிங்கப்பட்டு அம்பலப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் நிர்வாகியான துருவ்  ஸாக்ஸேனா உட்பட 11   பேர்   நாட்டின் ராணுவ ரகசியங்களை அந்நிய உளவுத்துறைக்கு  விற்று கையும், காவி  டவுசருமாக   பிடிபட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 122, 123, பிரிவுகளின் படி ஆயுத பதுக்கல், தேசத்துக்கு எதிராக போர் தொடுக்கும் முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் தகவல்கள் மத்தியப்பிரதேசத்தின் முன்னணி ஊடகங்களில் வெளியாயின. (பார்க்க   படங்கள் ). இந்திய ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் இருப்பு உள்ளிட்ட ரகசிய தகவல்களை ஐ.எஸ்.ஐ உளவு  கும்பல்களுக்கு காவிக் கும்பலின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய கும்பல் கொடுத்ததாக டிபிபி போஸ்ட் தெரிவித்துள்ளது. 

 மேலும்  ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்திற்காக நம் நாட்டில் தொலைத்  தொடர்பு நிலையத்திற்கு  இணையாக  ஒரு தொலை தொடர்பகம் நடத்தி ரகசியம் கடத்தியதாக இருவர்  கைது செய்யப்பட்டதாகவும்  அது குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட துருவ்  ஸாக்ஸேனா, மற்றும் மோஹித் அகர்வால்  என்ற இருவரின்  தேசத்துரோக வஞ்சகம் குறித்து தமது ஊடகம்  புலனாய்வு செய்து அம்பலப்படுத்தியதாக  ஆல்ட்  நியூஸ் . இன்  குறிப்பிட்டுள்ளது. துருவ்  ஸாக்ஸேனா மத்திய பிரதசேத்தில் மாவட்ட பாஜகவின் சமூக ஊடக பிரிவு நிர்வாகியாக இருப்பவர்.  இவர் பாஜக சார்பு வலைத்தளங்களின் முன்னணி  செயற்பாட்டாளராக இருந்து  பாஜகவின் புகழை(!)  பரப்பி வந்துள்ளார். அவரது  நண்பர் மோஹித் அகர்வால்  அதே போன்று பெயர்   பெற்றவராம்.

 சீனாவுடனும் கள்ளத்தொடர்பு

 கையும் களவுமாக பிடிபட்ட தேசத்துரோகிகளில்  பாஜக கவுன்சிலர் குடும்பத்தை   சேர்ந்த ஒருவரும் மத்திய பிரதேச தீவிர வாத  எதிர்ப்பு  படையினால் கைது செய்யப்பட்டுளார். ஐ.எஸ் ஐ.க்கு உளவு பார்ப்பதற்காக தனி தொலைபேசி இணைப்பகம்  ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அந்த தொடர்பகத்தை நடத்த   சீன நவீன உப கரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.    

சதியாளர்களின்  நிதியாளர்

 சாத்னாவில் பிடிபட்ட பல் ராம் என்பவன் சதியாளர்களின்  நிதியாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான வங்கிக்  கணக்குகள் மூலம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை   நடத்தியுள்ளான்.  2016 நவம்பரில் ஜம்மு மாவட்டத்தில் ஆர் எஸ்  புரா  பகுதியில் கைது செய்யப்பட்ட சத்விந்தர், மற்றும் தத்து இருவரும் ஐ.எஸ்.ஐ யின் நேரடி  உளவாளிகளாவார். இந்திய ராணுவத்தின் அதி முக்கியத்துவம் மிகுந்த ராணுவ ரகசியங்களையும்  ராணுவ முகாம்கள், ராணுவப்படைகள் நிலை நிறுத்தப்பட்ட இடங்களின் தகவல்கள் அனைத்தும்  உடனுக்குடன். இந்த  துரோகிகளால் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்கிறார் ஏடி எஸ் ஐஜி  சஞ்சீவ் ஷமி.

 பல்ராம் கும்பல் ரகசியங்களை எதிரிகளுக்கு பரிமாற்ற வசதியாக மத்தியப்பிரதேசத்தின்   பல்வேறு  நகரங்களில் அரசு தொலைபேசி இணைப்பகங்கள் போன்றே இணையான நிலையங்களை நிறுவி   தேச பக்த (!)  சேவைகளை செய்துள்ளனர். போபால் , குவாலியர், ஜபல்பூர். மாறும் சத்னா   ஆகிய நகரங்களில் நிறுவியுள்ளனர். இந்த தேச பக்தாள்கள்  (!)  பாகிஸ்தானில் இருந்து வரும்   தொலைபேசி அழைப்புகளை   வேறு நாடுகளில் இருந்து வரும் கால்கள் போல்  மாற்றி இந்திய தொலை  துரையின் கண்காணிப்பு வளையத்தின் கண்களில்   மண்ணை  தூவியுள்ளனர். முக்கிய இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த ரகசியங்கள் குறிப்பாக எல்லைக்கட்டுப்பாட்டு  கோட்டில்   கண் துஞ்சாது  நாட்டை காவல் காக்கும் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகள் குறித்த ரகசியங்களை கூட தெளிவாக பாகிஸ்தான் ஐ எஸ் ஐ  நாசகார சக்திகளிடம் போட்டு கொடுத்துள்ளதாக ம. பி   மாநில  ஏ டி எஸ் திகில் தகவலை வெளியிடுகிறது. 

பாஜகவினரின் உறவினர்

 உ பி  மாநில ஏடிஎஸ் மற்றொரு உளவு கும்பலை கையும் களவுமாக பிடித்தது. இந்தக் கும்பலின் சூத்ர  தாரி  டெல்லி மெஹ்ராவ்லி  பகுதியை சேர்ந்த குல்ஷன் சென் என்பவனாவான். இவன் உபி   மபி  மாநில  உளவாளிகளை ஒருங்கிணைப்பவன்  என ஏ டி எஸ்  சொல்கிறது.  கையும் காவி டவுசருமாய் பிடிபட்ட ஜிதேந்திரா வந்தனா பகுதியின் 58ம்வார்டு  பாஜக   கவுன்சிலர்  சதீஷ்  யாதவ்    வின்  நெருங்கிய உறவினர்  என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால்  குவாலியர் மாவட்ட   பாஜக தலைவர் தேவேஷ் ஷர்மா  பிடிபட்ட கயவன் ஜிதேந்திரா சதிஷ் யாதவ் உடைய நெருங்கிய உறவினன் அல்ல. தூரத்து உறவினர்  தான் என்கிறார். என்ன செய்ய,   காவிகள் எல்லோரும்   தேசத்துரோகத்தின் நெருங்கிய  உறவினர்களாக இருக்கிறார்களே ?  கைது படலங்கள் தொடரும் என்கிறது மத்திய பிரதேச மாநில தீவிரவாத  தடுப்பு படை . சந்தி சிரிக்கிறது பாஜக வகையறாக்களின்   தேசப்பற்று நாடகம்.

-சத்தியவேந்தன்

பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐக்கு உளவு  பார்த்ததாக பாஜக நிர்வாகி உட்பட 11 துரோகிகள் கைது  செய்யப்பட்டது குறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான திக் விஜய் சிங் தனது ட்விட்டர் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "போபாலில் கைது  செய்யப்பட்ட 11 ஐஎஸ்ஐ உளவாளிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. அவர்களில் ஒருவர் பாஜக உறுப்பினர். மோடி பக்தர்களே சற்று சிந்தியுங்கள்’’.

Who's Online

We have 41 guests and one member online

  • Leonardrof