வெமுலாவின் சாதி கேள்விக்குறி ஆக்கப்பட்டது அஹ்லாக் வீட்டு பிரிட்ஜில்  இறைச்சி.. இவை   இரண்டும்    இந்தியாவில் செய்யப்பட்ட அவமானம் அல்லவா ? இறந்த மனிதனின் சாதி அடையாளத்தைக் கூட  சர்ச்சையாக்கி அதனை வைத்து அவனது மரணம்  கூட இழிவு   படுத்த முயற்சிக்கப்பட்டது.

ஹைதராபாத்   பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா மன  அழுத்தத்தின்  காரணமாக தன் உயிரைத் தானே மாய்த்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.   அவரது தற்கொலைக்கான தன் விளக்க குறிப்பில்தான் கார்ல் சகன் போல் ஓர் எழுத்தாளுமை  ஆகவே விரும்பி இருக்கிறார்.  வெமுலா. அவரது மரணத்திற்கு பிறகு அவர் தலித் இல்லை என்று ஆய்வு  செய்து கண்டுபிடித்திருக்கிறார்களாம்.

 அவரது ஆன்லைன் டைரியில்.. அவரது   குற்றமற்ற  போராட்டம்  குறித்து  பிரசுரிக்கப்பட்டது.  பல்கலைக்கழகத்தில்   அவரது அம்பேத்காரிய செயற்பாடுகள்  அறிவார்ந்த  விவாதங்கள் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டு பின்னர் தொடர்ந்த சொற்போரினால் அவர் மனம் நொந்து  தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆறு மாதம்  ஆராய்ச்சி கல்விக்குரிய  ஊக்கத்தொகை   மறுக்கப்பட்டு ஆதிக்க  சமூகத்தால் தற்கொலைக்கு தூண்டப்பட்டு  சுய கொலையானார்.

தலித் ஆராய்ச்சி  மாணவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதால் பிரச்னை  பூகம்பமாக வெடிப்பதை  தடுக்க  வெமுலா தலித்தே அல்ல  என்று  நிறுவ பெரும் முயற்சி  எடுக்கப்பட்டது. 

 ரோஹித் வெமுலாவின்  தாயாரான   ராதிகா வேமூலாவும் அவரது சகோதரர் ராஜா வேமூலாவும் கடைசி  எச்சரிக்கை விடுக்கப்பட்டனர் . அவர் உண்மையில்  தலித்  தானா என்ற பரிசோதனை ஒருபுறம் ...

அஹ்லாகை கொன்ற பிறகு மாட்டிறைச்சி கண்டுபிடிப்பு

 தாத்ரியில்  வாழ்ந்த 50 வயது அஹ்லாக் வாட்சப்   எனும் கட்செவி  ஊடகத்தால்  பரப்பப்பட்ட  வெறி காணொளியால் கூட்டப்பட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார்.  அருகில் உள்ள கோயிலில் பூசாரியால் அபாய மணியோசை ஒலிக்கப்பட்டு கும்பல் கூட்டப் பட்டதால்   அஹ்லாக் கொலை செய்யப்பட்டார். 

இதனை இந்த நாடு அதிர்ச்சியோடு  பார்த்தது. கையை பிசைந்துகொண்டே  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் துக்கிக்க கூட நேரம் இன்றி  அரசு  அஹ்லாக்   வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட இறைச்சி மாட்டுக்கறியா இல்லையா என்பதை கண்டறிய தடயவியல் துறைக்கு  அனுப்பியது  .  இதற்கு அரசுக்கு உரிமை இருக்கிறதா ?  ஆட்டு இறைச்சியாக  இல்லாமல் மாட்டு இறைச்சியாக   இருந்தால்   அஹ்லாகின்   மரணத்தை   இழிவு படுத்த  குரூரமான  கூட்டம்  திட்டமிட்டது. 

ஒரு  மனிதன் என்ன சாப்பிடவேண்டும்   அவன் சாப்பிடுவது என்ன என்பது குறித்து மற்றவர்கள் தீர்மானிப்பது என்ன விதமான கொடுமை.  ?

 ரோஹித்  ஒரு தலித்தாகவே  வாழ்ந்து  மறைந்தார். அவரது வாழ்வும் மரணமும்  ஒடுக்குமுறை கொடுமைகளின் ஆவணமாகவே நிலை பெற்றுவிட்டது. நாகரிக போர்வையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,  பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள்,அரசு மையங்கள் அனைத்திலும்   சாதீய ஒடுக்குமுறைகள்  உள்ளன . 

மணமகள்  மணமகன்   தேடும் விளம்பர வலைத்தளங்கள்  ,வாடகைக்கு வீடு , வேலை வாய்ப்பு என  எல்லாவற்றுக்கும்   சாதி முக்கிய  இடம் பெற்றுள்ளது. 

அஹ்லாகின் பிரிட்ஜில் மாட்டு இறைச்சி  இருந்திருந்தால்  ரோஹித் வெமுலா தலித்தாக இல்லாமல்  இருந்தால் அவர்களது மரணம் சரிதான் , நியாயம் தான் என அவர்களது மரணம்  கூட இழிவுப்பட்டிருக்க கூடும்.  இந்திய  நிர்வாக அடுக்குகள்  இவ்வாறு  நினைப்பதாகவே தோன்றுகிறது. ஆம் இந்த இழிவு 100 சதவீதம் இந்தியாவில்  உற்பத்தி செய்யப்பட்டது.

-சர்ஜுன்


Who's Online

We have 34 guests and one member online

  • Leonardrof