உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் சட்டமன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை பாஜகவினர் செய்து வருகிறார்கள்.

 ஆனால் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்கவில்லை என்று மக்களிடத்தில் செல்வாக்குள்ள அயோத்தி சாதுக்கள் கூறியுள்ளார்கள்.  ராம ஜென்ம பூமியில் எந்த அரசும் கோயில் கட்டப்போவதில்லை என்கிறார் சுரேஷ்தாஸ்.  இவருக்கு முன்னர் தலைவராக இருந்த ராம் சந்திரதாஸ் பரம்ஹன்ஸ் ராமர் கோயில் இயக்கத்தின் முக்கிய தளபதி. 

‘‘ஓட்டுக்காக அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்கிறார் சுரேஷ்தாஸ். 2014 தேர்தலின் போது, மக்களைவையில் பெரும்பான்மை கிடைத்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்றார்கள். இப்போது மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்கிறார்கள்’’என்கிறார் சுரேஷ் தாஸ்.

 ராமர்... பாஜகவின் தேர்தல் முகவர்

 ராமர் கோயில் கட்டுவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் பாஜகவை கடுமையாக சாடுகிறார் கியான் தாஸ் என்ற மற்றுமொரு சாமியார். அயோத்தில் உள்ள பிரபலமான ஹனுமன்கிரி கோயிலின் தலைமை பூசாரி இவர் ‘‘ராமர் இப்போது பாஜகவின் தேர்தல் முகவராகி விட்டார்’’என்று கிண்டலடித்திக்கிறார் கியான் தாஸ்.

 மோடிக்கு துணிச்சல் இருக்கிறது. அவரை மதிக்கிறோம். அவர் விரும்பினால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளை கூட்டி, கோயில் கட்டும் சட்டத்தை நிறைவேற்றலாம். அதே நேரம், ராமருக்கான கோயில் ரத்தத்தால் கட்டப்படக் கூடாது. சமயங்கள் இடையே மோதல் இல்லாமல் அனைவரின் சம்மதம் பெற்றுதான் கட்டப்பட வேண்டும்’’என்று கியான் தாஸ் கூறுகிறார்.

 பாபர் மஸ்ஜித் இருந்த  இடத்திற்கு உரிமை கேட்டு வழக்குப் போட்ட நிர்மோகி அகாரா அமைப்பின் தலைவரான ராம்தாஸ் என்ற சாமியாரும் கூட, இந்த தேர்தலில் ராமர் கோயில் பிரச்சனை இடம் பெறவில்லை என்கிறார். இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் முடிவுக்கே விட்டு விடுவோம்.ராமர் கோயில் பிரச்சனையை அரசியலில் இழுக்கக் கூடாது. பாஜக தான் 1989ல் இருந்து இந்த பிரச்சனையை பெரிய தாக்கியது. ராமர் கோயிலை வைத்து தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களால் ராமர் கோயில் கட்ட முடிந்திருக்கிறதா? என்று கேட்கிறார் ராம்தாஸ்.

 உ.பி.யில் 7கட்டமாக நடக்கும் பொதுத் தேர்தலில் 5வது கட்டத்தில் அயோத்தியை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலைப் போன்று இந்த தேர்தலிலும் சாமியார்கள் பங்கெடுத்துள்ளனர். பலரும் சாதி சார்ந்து தான் ஆதரித்தார்கள். நிர்வாணி அகாரா வைச் சேர்ந்த பாவ்னாத் தாஸ் என்ற சாமியார் சமாஜ்வாதி கட்சிக்கு பிரச்சாரம் செய்தார். 

கியான் தாஸ் கூட அகிலேஷ் யாதவுக்குத் தான் பிரச்சாரம் செய்தார். அயோத்தி மக்கள் எப்போதையும் போன்று இந்த தேர்தலிலும் அரசியலை அரசியலாக மட்டும் பார்த்திருக்கிறார்கள். அயோத்தி நகரத்தை வைத்துக் கொண்டு வெறும் அரசியல் மட்டும் தான் செய்கிறார்கள். அயோத்தி நகரில் எந்த வளர்ச்சியும் உண்டாக்க வில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார் பாவ்னாத் தாஸ்.

 அயோத்திக்கு தேவை கழிப்பிடங்கள்

 அயோத்தியில் கேவாத் என்ற தலித் சமுகத்தினர் 12,000பேர் வசிக்கிறார்கள். கடந்த 30ஆண்டுகளில் பாஜகவோ, சமாஜ்வாதியோ தங்களுக்கு இந்த தொகுதியில் இடம் கொடுத்ததில்லை என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். 

இங்குள்ள மிகப் பெரிய பிரச்சனை கரைபுரண்டு ஓடும் மது. ஆயிரக்கணக்கானோர் அயோத்தியில் மதுவுக்கு பலியாகி இருக்கிறார்கள். பல குடும்பங்கள் சீரழிந்து இருக்கின்றன. அயோத்தில் போதுமான கழிப்பிடங்கள் இல்லை. ராத்தியா பகுதியில் பத்தாயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு மொத்தமே மூன்று தொகுதிகள் கொண்ட கழிப்பிடம் தான் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகையில் 30% மக்கள் தான் தனி கழிப்பிடம் வைத்துள்ளார்கள்.  அயோத்தி நகராட்சிக்கு பலமுறை வேண்டுகோள் வைத்தும் தேவையான அளவு கழிப்பிடம் கட்டவில்லை. மாலையானால் பெண்களும்,ஆண்களும் கழிப்பிடம் தேடி வெளிப் புறங்களுக்குதான் செல்ல வேண்டிருக்கிறது என்கிறார் அயோத்தியின் பிரபல எழுத்தாளர் சோனு நிசாத்.  அயோத்திக்கு தற்போது தேவை கழிப்பிடங்களே என்கிறார்கள் அயோத்தி வாசிகள். 


Who's Online

We have 29 guests and one member online

  • Leonardrof