நாடாளுமன்றத் தாக்குதல்   சதி  தொடர்பாக  காஷ்மீரைச் சேர்ந்த அப்ஸல் குரு,  2013 பிப்ரவரி 9  ம்  தேதி தூக்கிலிடப்பட்டார்.

அவர் பாகிஸ்தானின் பயிற்சியுடன் நாடாளுமன்றத்தின்  மீது  தாக்குதல் நடத்தியதாக  நாட்டின் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் கற்பிதம் செய்தன. இன்று வரை   பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில்  அப்சல் குரு சதி செய்த பயங்கரவாதி என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறார். இருப்பினும் அவர் மீதான சதிக் குற்றசாட்டினை நிரூபிக்க இயலாத நீதித்துறை குறிப்பாக  உச்சநீதிமன்றம்  நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை  திருப்தி செய்ய தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்து  தூக்குத்தண்டனை நிறைவேற்றியது.

 சிறைத் தோழர்

 டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை  கழகத்தில் அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தில் 2016 பிப்ரவரியில் ஒரு கருத்தரங்கை மாணவர் அமைப்பினர்  நடத்தினர்.  இதில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன எனக் கூறி மாணவர் தலைவர் கன்னையா குமார், உமர் ஹாலித்  உள்ளிட்ட ஏராளமானோர் அடைந்த துன்பங்களும்,   சந்தித்த சவால்களும் கணக்கில் அடங்காது. 

இந் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ஹைதராபாத் சிராப்பள்ளி சிறைச்சாலையில் இருந்த 69வயது ஹோபத்  காந்தி  என்பவர் உன்னிப்பாக கவனித்து வந்தார்.  அது தொடர்பாக வெளி வந்த செய்தித்  தாள்களை கவனமாக படித்தார் . அதில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் அவர் மனதை மிகவும் வேதனைப்படுத்தின.

அப்சல் குரு  பாகிஸ்தான் ஆதரவாளர் என்பதும், அப்ஸல்   தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் தேச துரோகிகள் போலவும் சித்தரிக்கப்பட்டது  அவர் மனதை அலைக்கழித்தது.  ஹொபாத் காந்தி மாவோயிஸ்ட் தீவிரவாதி (?) என  2009 ல் திகார் சிறையில்  அடைக்கப்பட்டவர். அப்சல் குருவின் கடைசி 3வருடங்களில் இருவரும் சிறைத்தோழர்களாக விளங்கினர். அவர்  தூக்கிலிடப்படும் வரை அவரை அறிந்தவராக ஹோபத்  காந்தி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து தனக்குத் தெரிந்த உண்மைகளை  அப்சலின் மீது கூறப்டும் அவதூறுகளைக் களைய அப்சலுக்கும் தனக்கும் இடையேயான  நட்பு, அவர் மீது  பரப்பப்படும் அவதூறுகளின் நம்பகத்தன்மையற்ற  நிலை குறித்து ஓர் விரிவான கடிதத்தை ஊடகவியலாளர்களுக்கு அவர் அனுப்பினார். செப்டம்பர் 17,   2016ல்  ஹோபாத்  காந்தி அனுப்பிய கடிதத்தின் முக்கிய சாராம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்

  (ஆதாரம்; பிப்ரவரி 11- 2017   மாலை  நான்கு மணி 24 நிமிடத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில  செய்தி ஏட்டின் மின்னிதழில் வெளியான  செய்திக்  கட்டுரை )

அப்சல் குரு  யாருக்கானவர் என்பது குறித்து உண்மைகளை கூறாமல் அவரை தவறாக பிரதிநித்துவப்படுத்துகின்றனர். அப்சல் தேச விரோதியாக (!)  இருப்பது குறித்து  அதிகமாக  உரையாடியுள்ளோம். திகார் சிறையில் நான் செப்டம்பர் 21,  2009 மாலை 7 மணியளவில்   முதன் முதலாக நுழைந்தேன். அபாயகரமான அதி உயர் சிறை எண்  3ல்  அங்கு இருந்த அதி உயர்   பாதுகாப்பு மிகுந்த சிறை கைதிகள் அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு கிடந்தனர்.

 அங்கு ஒரு அறையில் அப்சல் குரு இருந்தார்.  முகம் கொள்ளா புன்னகையுடன்  அவர்  என்னை வரவேற்றார். திகார் உங்களை வரவேற்கிறது நான் உங்களை காலையிலே எதிர்பார்த்தேன் என்றார்

 செய்தி ஏடுகளில் என்னைப்பற்றி  படித்திருக்கிறார்  என்பதை உணர முடிந்தது. காலை சந்திப்போம்  என்றார்.  மறுநாள் காலை அப்சலுடன் தேநீர் அருந்தினேன். (அந்தப் பழக்கம் அவர் தூக்கிலிடப்பட்ட பிப்ரவரி  9ம் தேதி 2013  க்கு முந்திய தினம் வரை தொடர்ந்தது. )   அப்சல் திகார் தண்ணீரில்  பால் பவுடர் சேர்த்து சிறை காண்டீனில்  வாங்கிய டீ  தூள்  போட்டு அருமையான தேநீர் தயாரித்து அதை பிளாஸ்கில் நிரப்பி கொண்டு வருவார்  சிறை நிர்வாகம் கொடுக்கும் இரண்டு பிரட் துண்டுகளுடன் எங்கள்  தேநீர் சந்திப்பும்   நடைப் பயிற்சியும்   தொடர்ந்தது.

 நான் பழகிய விதத்தில் அப்சல் மிக சிறந்த மனிதம் நிறைந்தவர். உறுதியும் எளிமையும் கொண்ட இதயத்துடன் வாழ்ந்தார். தாயாருடன் ஆழமான பாசம் கொண்டவர் ஆசிரியையான தனது மனைவியையும் மகனையும் மிகவும் நேசித்தார்.

 அன்பு சமத்துவத்தை நேசித்தவர் அப்ஸல்

 அப்சலை  அடிப்படைவாதி , மத வெறியர்  என்று ஊடகங்கள்   சித்தரித்ததற்கு நேர் மாறானவராக விளங்கினார். அவர் இஸ்லாத்தில் உண்மையானவராக விளங்கினார் . 5 நேரம் தொழுவதிலும் நோன்பு  பிடிப்பதிலும் உண்மையானவராக இருந்தார். அப்சல் மறு உலகத்தின் மீதும் சுவனத்தின் மீதும்  நம்பிக்கை வைத்து இருந்தார்.  அன்பு மற்றும் சமத்துவத்தை நேசித்தவராக விளங்கினார். புகழ்  பெற்ற  கவிஞர்கள் ரூமி, மற்றும் இக்பால்  ஆகியோரின்  ரசிகராக  விளங்கினார். உருது மொழியில் ரூமியின் 6 அத்தியாயங்களையும் அவர் வழக்கமாக வாசிப்பவராக விளங்கினார் . அதில் சிறந்த கவிதைகளின் மொழி பெயர்ப்பினை எனக்கு காலை நேர தேநீருடன் விருந்தாக வழங்குவார் .

 வறட்டு பிடிவாத அடிப்படை  வாதி என சிலரால் விமர்சிக்கப்பட்ட அப்சல் மூலமாக நான் இஸ்லாத்தின்  மனித நேய சாராம்சத்தை கற்று கொண்டேன். அவர் தீவிரவாதிகளின் செயல்களான குண்டு வைத்தல்,  அப்பாவி மக்களை  கொல்வதை  எதிர்ப்பது    மட்டுமின்றி பாகிஸ்தானையும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ  யையும் கடுமையாக எதிர்த்தார்.   

 ரா வை விட மோசமானது ஐஎஸ்ஐ  

  இந்திய ‘ரா’  உளவுத்துறையை  விட மோசமானவர்களாக பாகிஸ்தான்  உளவுத்துறை  காஷ்மீர் போராளிக்குழுக்களை ஒடுக்கியவர்கள் என்பதே அவரது கண்ணோட்டம். பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்க   மறுத்ததற்காக ஏராளமான  காஷ்மீர்  அறிவு ஜீவிகள்  படுகொலை செய்யப்பட்டதற்கு   ஐ.எஸ்.ஐ  தான் பொறுப்பேற்க  வேண்டும் என்றும் அப்சல் சொல்வார்..   1990களில்  பரபரப்பாக செயல்பட ஜே.கே.எல்.எப் என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட மறுத்ததற்காக  (இந்திய  நிர்வாகத்தால் கொ ல்லப்பட்ட அளவை விட)  அந்த அமைப்பினர் அதிகமாக வேட்டையாடப்பட்டனர்.

 ஒவ்வொரு அம்சத் திலும் காஷ்மீரிகள் வாழ்க்கை ராணுவத்தால் கண் காணிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. 

ஒட்டு மொத்த காஷ்மீர பள்ளத்தாக்கே திறந்த வெளி சிறை சாலையாக மாற்றப்பட்டு விட்டது. பாகிஸ்தானிகள் காஷ்மீரிகளுக்கு  அதிகமாக தீங்கு செய்துள்ளனர் .

 இந்தியாவுக்கும் காஷ் மீருக்குமான சச்சரவில் காஷ்மீர் வெறும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. என அவர் கருதினார். இந்திய பாகிஸ்தான் பிரச்னையில்  காஷ்மீரிகள்  பலியாடுகளாக மாற்றப்பட்டதாக அப்சல் குரு வேதனையை வெளியிட்டுள்ளார்.  அப்சல் அடிப்படை வாதத்தை வெறுத்தார்.  பொதுவுடமை தத்துவத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார். 

கவிஞர் இக்பால் கூறியது போன்று பொதுவுடைமை + இறைவன்=இஸ்லாம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார்

அப்சல் உருது,ஆங்கிலம் இரண்டிலும் நூல்களை வாசிப்பதில் திறன் படைத்தவராக விளங்கினார். மேற்குலகின் முன்னணி சிந்தனையாளர்களின்  கருத்துக்களை  குறிப்பாக நோம் சோம்ஸ்கி உள்ளிட்டவர்களின்  எழுத்துக்களை  வாசிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர். சிறைத்துறையினர் தரப்பில் இருந்து அவர் மீது எந்த புகார்களும் வந்ததில்லை.

அவர் தூக்கிலிடப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு எங்களை நாங்கள் தங்கியுள்ள கட்டிடத்தின் பின் பகுதிக்கு மாற்றினார்கள் வெள்ளையடிப்பதற்காகத்   தான்  இடம் மாற்றியதாக சொன்னார்கள். அங்கு பணியாளர்களால் வதந்திகள் பரவின. மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  பஞ்சாப்பின் புல்லார் தூக்கில்  போடப்படலாம்  என்று  தகவல்கள் பரவின. அதனை அப்சல்  கடுமையாக  எதிர்த்தார் யாரை வேண்டுமானாலும் தூக்கில் போடட்டும்.  புல்லாரை  தூக்கில் போடக்கூடாது என்றார். அன்று மாலை ஒவ்வொருவர் மனதிலும் அச்சம் குடி கொண்டு இருந்தது. ஆனால் அப்சலின் முகம் மலர்ச்சியுடன்  காணப்பட்டது.

 அப்ஸலின் கடைசி நிமிடங்கள்

மறுநாள் காலை 6 மணிக்கு அவர் செல் திறக்கப்பட்டது.  சட்டத்துறை அதிகாரிகள் அவரை சந்தித்தனர். 8 மணிக்கு  தூக்கில்  போட உள்ளதாக தெரிவித்தனர் தனது மனைவியிடமும் மகனிடமும் தொலைபேசியில் பேச விரும்புவதாக அப்சல் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் உடனடியாக  மறுக்கப்பட்டது.

அனைத்து   சட்ட நெறிகளும் அரசால் தூக்கியெறியப்பட்டது   நாம் அறிந்தது  தானே?  தொழுகையை முடித்தார். டீ பிஸ்கட் கொடுக்கப்பட்டது. குளிக்கச் சென்றார் கடைசியாக ஒரு தடவை  தொழுதார். 

8 மணியாக 5 நிமிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி செய்த மைதானம் வழியாக நடந்தார். அங்கு இருந்த சிறைத் துறை அலுவலர்களுக்கு வாழ்த்து  தெரிவித்தார். தன்னை நல்லபடியாக நடத்தியதற்கு  நன்றி தெரிவித்தார்.

 அப்சல்  தங்களுக்கு  நன்றி கூறியதையும் தூக்கு  மேடை நோக்கி அச்சமின்றி நிமிர்ந்த  பார்வையுடன் நடந்து சென்றதையும் கண்களில் வழியும்  கண்ணீருடன்  சிறைப் பணியாளர்கள் அடிக்கடி கூறுவதை கேட்போம்.  சிறைத்துறை  அரசு உத்தரவின்படி அப்சலின் உடமைகளை , அவரது உடலை, ஏன் அவர் எழுதிய டைரியைக் கூட கொடுக்க மறுத்தது.

 அவரது உடல் பிரபல காஷ்மீர் தலைவர் மகபூல் பட் அடக்கம் செய்யப்பட இடத்தில் இருந்து 2 அடி  தூரத்தில்  அடக்கம் செய்யப்பட்டது. மகபூல் பட்டும் பாகிஸ்தானின் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.  அவரது நூல்கள் பாகிஸ்தான்  அரசால் அண்மையில் தடை செய்யப்பட்டுள்ளது  என்ன ஒரு முரண்பாடு?  நிறைந்த மனித நேயமும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட எனது   திகார் சிறை  நட்பு முடிவுற்றது.  அப்சல் குருவின் வாழ்வும் வழக்கும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும்.


Who's Online

We have 26 guests and one member online

  • Leonardrof