மத வேற்றுமையை ஏற்படுத்தி  மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாசிச சக்திகளின் வயிற்றில் புளியை கரைக்கும்  விதமாகவும்,  நல்லிணக்கம்  நாடுவோர் மனதில்  பால்  வார்க்கும் விதமாகவும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்  ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது.

 கேரள கர்நாடக எல்லையில், படனே கிராமத்தில் முஸ்லிம்களின் தொழுகைக்காக தமது வழிபாட்டுக் கூடத்தின்  சுற்றுச் சுவரை இடித்து நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர் இந்து மக்கள்.  

 சிவபுரம் கோவில் சுற்றுச்சுவரால், கூட்டத்தை நடத்துவதற்கான இடம் குறைவதைக் குறிப்பிட்டு  பிப்ரவரி 18 மற்றும் 19-ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டத்திற்காக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் உள்ளூர் தலைவர் பஷீர், எழுத்துப்பூர்வமான கடிதத்தை கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகக் குழுவினர் சுற்றுச்சுவரை இடித்து, இஸ்லாமிய அமைப்பின் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை அளித்துள்ளனர்.  இதுகுறித்து பஷீர் பேசுகையில், ”இரு சமூகத்தினர் இடையிலான அன்பையும், சகோதரத்துவத்தையும் இந்த செயல்பாடு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

 கோவில் கமிட்டி செயலர் சுரேஷ் மம்படி கூறியபோது, ”ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் கோரியபோது, எங்களுக்கும், கிராம மக்களுக்கும் எந்தவித அமைப்பும் இருக்கவில்லை. கிராமத்தில் மத ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை காப்பதற்காக நாங்கள் இதை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று கூறினார் 

சில நாட்களுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் தவறான செய்திகளில் இந்த கிராமம்  அடிபட்டது.  படனே கிராமம்  பகுதியை .சேர்ந்த12 பேர்  ஐ.எஸ் முகாமில்  சேர்ந்தனர்   என்னும் செய்தி வெளியானது.  அது  பொய்யான தகவல் என்பதும்   தாங்கள் எந்த  தீவிரவாதத்திற்கும் இரையாகவில்லை, பொதுநலனுடன் கூடிய  சமூக நல்லிணக்க சிந்தனை    எந்த விதத்திலும்   பாதிக்கப்படவில்லை  என்பதை நிரூபிக்கும்  விதமாக செயல்பட்டுள்ளனர்.


Who's Online

We have 42 guests and one member online

  • Leonardrof