ரக்பி ((Rugby) நம்மில் பலரும் அறிந்திறாத விளையாட்டு. உடல் வலிமையும், மனவலிமையும் ஒருங்கிணைத்து ஆடப்படுவதுதான் இவ்விளை யாட்டின் சிறப்பு. தன் வாழ்வில் வறுமை மற்றும் தோல்வி இருந்தும் விளையாட்டுகளிலிருந்து துவண்டு போகாமல் தொடர்ந்து விளையாடி சாதனை நாயகனாக மாறியிருக்கிறார் 24 வயது இளைஞர் ரஹ்முத்தீன் ஷேக். 

பூர்வீகம் 

கர்நாடகத்தின் குல்பர்காவை பூர்வீகமாய்க் கொண்ட, இவரது குடும்பம் பிழைப்புத் தேடி மும்பையை நாடி, அங்கு மேல்தட்டு சீமாட்டிகள் அதிகம் வாழும் காஃபா பாரேட் (Caffa Parade)இடத்திற்குப் பின்புறமாய் அமைந்திருக்கும் கொலொபாவில் அம்பேத்கர் நகரில் குடியேறினார்கள்.  இவரது பெற்றோர் மும்பையின் பழமையான சஸ்ஸன்ஸ் துறைமுகத்தின் சந்தையில் ஒரு மீன் விற்பனைக் கடையில் வேலை செய்து வந்தனர். ரஹ்முத்தீனும் அவரது சகோதரரும் விளையாடும் பருவத்திலேயே பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்கள். 

இளமையில் வறுமை 

ரஹ்முத்தீன், மும்பையில் செயல்பட்டு வரும் ‘Door Step School’ (வாசல் படி பள்ளி) என்ற கல்வியியல் தொண்டு நிறுவனத்தின் உதவியால் 1993-ல் தொண்டு நிறுவன பள்ளியில் சேர்ந்தார். அங்கே அறிமுகமான ரக்பி விளையாட்டை, வெற்றித் திசையாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து விளையாடி வந்த ரஹ்முத்தீன் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கொலொபா நகராட்சி பள்ளி கல்வியைத் தொடர்ந்தார். ஏழைகளை காலம் அடிக்கடி சோதித்துப்பதுண்டு. அவ்வாறு தான் ரஹ்முத்தீனின் குடும்பம் தன் தலைவனை இழந்தது. இவரது தாயாரும் பிள்ளைகளை வளர்க்க வீட்டு வேலைக்குச் செல்ல நேர்ந்தது. 

ரக்பி மீது தீராத நேசம் 

2004-ம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வை எழுதினார். ஆனால், அதில் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை. இதனையடுத்து, இரண்டு முறை அவர் முயற்சித்தும்,  வெற்றி இவரிடமிருந்து நழுவியது. ஆனாலும், இழப்புகளுக்கு மத்தியிலும் ரக்பி விளையாடுவதை நிறுத்தவே இல்லை. தந்தையின் மரணம், தேர்வில் தோல்வி, வறுமையின் பிடி, குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு என சோதனைப் படலம் இவரின் வாழ்க்கையில் விளையாடினாலும் ரக்பி விளையாடுவதை மட்டும் இவர் விடவில்லை. 

சாதனை 

1999-இல் ரஹ்முத்தீன் தன் திறமையான விளையாட்டை அடுத்த கட்டதை நோக்கி நகர்த்த தொடங்கினார். மேஜிக் பஸ் என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்திற்காக அதன் அணியில் விளையாடினார். பின்னர், 2011-ம் ஆண்டில், ராஞ்சியில் நடைபெற்ற தேசிய விளையாட்டில் மஹாராஷ்டிர மாநில அணியில் விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார். 

மேலும், 2015-ல் கேரளாவில் நடந்த தேசிய விளையாட்டிலும் திறமையை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்று, தொடர்ந்து சமீபத்தில் ‘பெடரேஷன் கப்’ போட்டியில் வெற்றி பெற்று 2017 இல் ஜனவரியில் வெள்ளிப் பதக்கத்தை உரித்தாக்கிக் கொண்டார். இவர் சாதனைப் பட்டியல் நீள்கிறது. 

பயிற்சியாளர் 

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில அரசின் விளையாட்டுத் துறை சார்பில், ரக்பி பெண்கள் அணியினருக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போராடி, தன் கை விட்டுப் போன கல்வியை கைப் பிடித்தார். 

கணக்குப் பாடத்தை ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எழுதி 87 சதவீத மதிப்பெண் எடுத்து வெற்றிக் பெற்றார்.. தற்போது மும்பையில் உள்ள சித்தார்த் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துக்கொண்டே அதே வளாகத்தில் ரக்பி பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

மறக்கவில்லை 

முன்னேறிய பிறகும் பழையதை மறக்காமல் தனக்கு அடையாளத்தை ஏற்படுத்தித்தந்த அம்பேத்கர் நகரிலேயே வசித்து வருகிறார். ஞிஷீஷீக்ஷீ ஷிtமீஜீ ஷிநீலீஷீஷீறீ தொண்டு நிறுவனமும், அப்பகுதி மக்களும் இவர் வசித்து வருகின்ற தெருவிற்கு இவரின் பெயரையே வைத்திருக்கிறார்கள். ‘ரஹ்முத்தீன் லேன்’ என காட்சியளிக்கிறது அந்தப் பலகை. 

வாழ்த்துகள் 

இவரது சாதனையை அறிந்த நாம் உடனடியாக தொடர்புகொண்டு, சமூக நீதி மாணவர் இயக்கம் மற்றும் மக்கள் உரிமை சார்பாக வாழ்த்தினோம். 

தன் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் தனது தாயார் தான் என்றும், தன் தந்தை ரஹ்முத்தீன் சிந்தா சாஹிப் ஷேக் இல்லாதது குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். 


Who's Online

We have 43 guests and one member online

  • Leonardrof