பண்டாரப் பரதேசிகளின் கட்சி பா.ஜ.க. இவ்வாறு அன்றொரு நாளில் விமர்சித்தார் தி.மு.க. தலைவர்  கருணநிதி.  அதேபோல, இன்று வரையிலும் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்பரேட் சாமியார்களின் காலில் நெடுஞ்சான் கிடையாக தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்து கிடக்கிறது  பா.ஜ.க.,வின் கார்பரேட் அரசு. 

மலையை முழுங்கி அடர்ந்த வனத்தை அழித்து, தண்ணீரை பறித்து, அதில் தொன்றுதொட்டு வாழ்ந்த உயிரினங்களை நகரத்திற்குள் துரத்திய  ஜக்கி வாசுதேவுக்கு, பிரதமர் மோடி குற்ற ஏவல் புரிவது போல , பாபா ராம்தேவின் பாதார விந்தங்களில் பணிவிடை செய்ய என்றும் மறப்பதில்லை அவர்

இந்தியா விற்பனைக்கு

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பாபா ராம்தேவ் உருவாக்கிய  உணவுப் பூங்காவிற்கு, அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு கிட்டத்தட்ட இலவசத்திற்கு நிகராக  அள்ளித் தந்துள்ளது பா.ஜ.க.வின் தேவேந்திர பட்நாவிஸ் அரசு. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில தகவல்களை நியாயவான்கள் பெற்றுள்ளனர். இதில், பா.ஜ.க. அரசின் முடிவுக்கு மராட்டிய அரசின் நிதிச் சீர்திருத்த முதன்மை அதிகாரி பிஜய்குமார்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வெளிவந்துள்ளது. இதனையடுத்து, ராம்தேவுக்கு அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட மறுவாரமே,  அவர் வேறு ஒரு துறைக்கு தூக்கியடிக்கப்பட்டு உள்ளார்.  பொறுப்பு மிகுந்த அந்தப் பதவியை, அவர் 6 மாதம் கூட தொடர்ந்து வகிக்க முடியாத நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்டது மரபுகளுக்கு எதிரானது.

சாமியார்களுக்கு சிறப்பு தள்ளுபடி

 அரசு நடப்பு சந்தை நிலவரப்படி1 ஏக்கர் அளவு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என உள்ள நிலையில், அந்த நிலத்தை  வெறுமென ரூ. 25 லட்சத்திற்கு  குறைத்து, 230 ஏக்கர் அளவு நிலத்தை ராம்தேவுக்கு தாரை வார்த்துள்ளது பா.ஜ.க அரசு. மொத்ததில், ரூ. 230 கோடிக்கு பதிலாக ரூ. 58.63 கோடி என வழங்கியுள்ளது .  இந்நிலையில், இதுபோன்ற தாரை வார்ப்புகளை இஸ்லாமிய, கிறிஸ்தவ  நிறுவனங்களுக்கும் பா.ஜ.க.அரசு  வழங்குமா? இவர்கள் முழு இந்தியாவையும் விற்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார்கள் என்ற நிதர்சனம் நம் கண் முன் விரிகிறது.

 


Who's Online

We have 43 guests and one member online

  • Leonardrof