அத்வானி கும்பல் மீதான சதி உடந்தை குறித்து மீண்டும் விசாரணை

 1992-ஆம் வருடம் டிசம்பர் 6- இல், உத்தரப்பிரதேசம் அயோத்தி  நகரில் சுமார் 400ஆண்டுகள் பழமைவாய்ந்த, சரித்திர புகழ் பெற்ற பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டது.  

இந்த குற்ற வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அன்று முதல்-அமைச்சராக இருந்த கல்யாண் சிங் உள்ளிட்ட  பா.ஜ.க. தலைவர்கள் 13-பேர் மீதும், இந்துத்துவா அமைப்புகள் மீதும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றம் இவர்கள் மீதான சதி குற்றச்சாட்டை ரத்து செய்தது.

சதி குற்றவாளிகள்

2001-இல் பிறப்பிக்கப்பட்ட  இந்த உத்தரவை எதிர்த்து,  அத்வானி,   முரளி மனோகர்  ஜோஷி,  உமாபாரதி  உள்ளிட்டோரை முக்கிய குற்றவாளிகளாக  சேர்க்கவேண்டும்   என தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக்கழகம் 2004 டிசம்பர் 6ல், தலைநகர் டெல்லியில்  மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியது.

தமுமுக டெல்லியில் போராட்டம்

போராட்டத்தின்  முடிவில், அன்றைய  பிரதமர் மன்மோகன் சிங்கை  தமுமுக தலைவர் .பேரா. எம். எச்.  ஜவாஹிருல்லாஹ்  தலைமையில், நிர்வாகிகள் சிலர் நேரில் சந்தித்து, பாப்ரி வழக்கில் சதி குற்றச்சாட்டில்  இருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை,   மீண்டும் இணைக்கவேண்டும் என  கோரிக்கை வைத்தனர்.

சட்ட நடவடிக்கைகள் வேகம்

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் சட்ட நடவடிக்கைகள்  வேகம் பெற்றன. இந்திய மக்கள் குறிப்பாக, சிறுபான்மை மக்களின்  உரிமை காக்கும்   சாதனையாக  தேசிய அளவில்  இது அப்போது  பேசப்பட்டது.

சதி குற்ற தொடர்பில் அத்வானி வகையறாக்களை சேர்க்கக் கோரி  சி.பி.ஐ. உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது.  ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தக் கோரிக்கை மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.சி.கோஷ்,  நாரிமன் ஆகியோர், அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான்சிங் ஆகியோர் மீதான சதி குற்றங்களை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று மார்ச் 6ஆம்நாள் (2017) தெரிவித்தார்கள்.

பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட போது உ.பி.மாநில முதலமைச்சராக கல்யான் சிங் இருந்தார். இப்போது அவர் ராஜஸ்தான் மாநில ஆளுனராக இருக்கிறார். அத்வானிக்கு, குடியரசு தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

பாபர் பள்ளிவாசல் டிசம்பர்6 1992ல் இடிக்கப்பட்டது தொடர்பான குற்றவியல் வழக்கு லக்னோவிலும் ரேபரேலியிலும் நடந்து வருகின்றன. இரண்டையும் ஒன்றாக இணைத்து லக்னோவில் வழக்கை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு. அப்போது அத்வானி உள்ளிட்டவர்கள் மீது தொழில்நுட்ப காரணங் களைச் சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்திருப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதற்கு நீதி பதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரிக்கப்பட்ட இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து லக்னோ நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்கலாம் என்றும் சிபிஐ-க்கு அறிவுறுத்தினர்.

 குற்றப்பத்திரிகை

சிபிஐ சார்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. 

அப்போது அத்வானி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்

கே.கே. வேணுகோபால்  இரண்டு   வழக்கும் சேர்ந்த கூட்டு விசாரணைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். சிபிஐ தரப்பில் கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால்,  186 சாட்சிகளை  ‘ஏற்கனவே விசா ரணை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள  சாட்சிகளை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டியது வரும்’ என்று வாதிட்டார். 

 இறுதித் தீர்ப்பு எப்போது?

இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர். அப்போது அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Who's Online

We have 18 guests and 2 members online

  • dasni-Lydindom
  • Leonardrof