மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் என்பது சில கலக மகளிரால் உருவானது என்று சொல்லப்படுகிறது.

ஆண்களுக்கு நிகரான வேலை நேரத்தைப் பெண்களுக்கும் நிர்ணயிக்க 1910ம் ஆண்டில் 30,000 பெண்கள் அமெரிக்காவில் போராடிய நாள் மார்ச் 8. அதுவே 1975ம் ஆண்டு ஐ.நா.சபையால் உலக மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

பெண்களுக்கு 16 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க முடிந்தாலும், ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை, கழனி வேலை முதல் கார்ப்பரேட் கம்பெனி வரை அவர்களால் பெறமுடியவில்லை. (அரசு வேலை மட்டும் விதிவிலக்கு. அதிலும் ஆயிரம் குடைச்சல்கள்).

இந்தியாவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் ஊதியம் பெற 150 ஆண்டுகள் ஆகும் என்ற தலைப்பில், டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் புள்ளி விவரங்களோடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. 2168ம் ஆண்டுதான் சம ஊதியம் சாத்தியமாம். கிநீநீமீஸீtuக்ஷீமீs என்ற அமைப்பு 30 கார்ப்பரேட் நிறுவனங்களைக் கூராய்வு செய்து இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

 பாலின சமத்துவத்திற்காகவே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறோம் என்று புலம்பித்திரியும் மோடி அரசாங்கத்திற்கு இதையெல்லாம் பார்க்க கண்கள் இருக்கிறதா? இல்லை அவிந்து விட்டதா? இல்லை இன்னும் பல நாடுகளை அரசுச் செலவில் சுற்றிப்பார்க்க வேண்டுமா? தெரியவில்லை.

திருக்குர்ஆன், ஆண்களுக்கு நிகரான கூலி பெண்களுக்கும் உண்டு என்று பிரகடனம் செய்கிறது.

" நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் & ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்."

திருக்குர்ஆன் 33:35

இறைவன் நன்மை செய்தமைக்காகக் கூலியில் ஆணுக்கு அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் வழங்கவில்லை. இறைவனுடைய பிரதிநிதி களாய் பூமியில் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு இது வழிகாட்டல்.சமூக அநீதியைத் தமது வேதவாக்காகக் கொண்டவர்களுக்கு பேதம் காப்பதே பெரும் லட்சியமாகும். சாந்தி மார்க்கமே சமத்துவம் கொடுக்கும். இதை சிந்திக்கும் உள்ளங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 


Who's Online

We have 46 guests and one member online

  • Leonardrof