பிரதமர் மோடியின் தொடர் உலகச் சுற்றுலாவின் போது நமது நாட்டின் நலனுக்கு குந்தகமான நிகழ்வுகள் பல அரங்கேறி வருகின்றன.


இதில் ஓர் அண்மை நிகழ்ச்சி


தொழில்நுட்ப நிபுணர்கள் ஆலோசனையில்லாமல், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி, டென்டரின்றி, வெளிப்படையான ஏலம் எதுவுமேயின்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து அமெரிக்காவின் ‘வெஸ்டிங்ஹவுஸ்’நிறுவனத்திடம் 4 இலட்சம் கோடி மதிப்பில் ஏபி1000வகை 6 அணு உலைகள் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் மோடி. கூடவே அணு விபத்து எதுவும் நடக்குமாயின் சர்வதேச நியதிகளின்படி, தரவேண்டிய இழப்பீடுகளில் இருந்து (convention of supplementary compensation(csc)விதிவிலக்கும் இந்நிறுவனத்திற்கு மோடியினால் உறுதியளிக்கப்பட்டது!


இது கூடுதல் இழப்பீட்டுக்குழு (csc)பிப் 2016 முடிவுக்கும் மன்மோகன் சிங்கின் (UPA 1 AND UPA 2) வரையறுத்த விதிகளுக்கும் கூட முரணானதாகும்.


இந்த ஒப்பந்தம் கடந்த ஜுன் 2016ல் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது அன்றைய அதிபர் ஒபாமாவுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் கையொப்பமானது. மோடி ஏற்கனவே ஏப்ரல் 2015ல் 4லட்சம் கோடி மதிப்புடைய ‘ரபேல்பைட்டர் ஏர்கிராப்ட்’ஆர்டரை பிரான்ஸ் சுற்றுலாவின் போது ஆர்டர் செய்ததின் பேரில் பெருங் கொண்ட பணம் விரயமானதும், நாட்டின் நலன் காற்றில் விடப்பட்டது.


இந்த அணுஉலை ஆர்டரானது, ஒபாமா இந்தியாவிக்கு என்.எஸ்.ஜி எனும் அணுசக்தி சப்ளையர் குரூப் உறுப்பினராக அங்கீகாரம் கிடைக்கச் செய்வார் என்பதற்கான கைமாறு. அதுவும் நிறைவேறாத நிலையில் வெஸ்டிங் ஹவுஸின் உலைகள் நமது தலையில் கட்டப்பட்டதே நிதர்சனம்.


நிபுணர்கள் ஆச்சரியம்


இந்த வெஸ்டிங் ஹவுஸ் ஆர்டர் உடன்பாட்டின் பின்னணியில் பல தகிடுதத்தங்கள் உள்ளன. வெஸ்டிங்ஹவுஸ் ஒரு அமெரிக்க நிறுவனமே ஆனாலும், ஜப்பானிய நிறுவனங்களான (Toshiba) மற்றும் (IHI) யும் அதில் முதலீடுகள் செய்துள்ளன.


வெஸ்டிங் ஹவுஸை வாங்கிய வகையில் டோஷிபாவின் இழப்பு 300மில்லியன் டாலர். மேலும் ஏபி1000கனரக உலைகள் தயாரிப்பால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க வழியும் இல்லை என பினான்சியல் டைம்ஸ் ஆப் லண்டன் ஏடு வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏற்கனவே போடப்பட்ட தமது ஆர்டர்களை வெஸ்டிங் ஹவுஸின் பொருளாதார ரீதியான இழப்பு காரணமாக பல பிளோரிடா வில்ட் உட்பட பல நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில் இந்தியா மட்டும் அந்த நிறுவனத்திலிருந்து வாங்க நினைப்பதை நிபுணர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
10 கோடியை விட 70 கோடி மோடிக்கு சிறியது?


அணு விஞ்ஞானிகளான எம்.வி.ரமணா மற்றும் சுவ்ரட ராஜு ஆகிய இருவரும் ஒரு தகவலை தெரிவிக்கிறார்கள். வெஸ்டிங் ஹவுஸ் ரக உலைகள் ஒரு மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான முதலீடு 70 கோடியாகும். இதையே இந்திய உலைகள் தருவதற்கு ஆகும் முதலீடு 10கோடி என்பதுதான் அது.


மோடி உடன்பாடு செய்துள்ள நிறுவனத்தின் முக்கிய முதலீடு நிறுவனமான டோஷிபா நிறுவனம் திவலாகும் நிலையில் உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பிப்ரவரி 14ல வெளியிட்டுள்ள தகவலின் படி 2லட்சம் பேர் வேலை செய்யும் இந்த ராட்சத நிறுவனம் மூடவேண்டிய நிலையில் உள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்று அதன் தலைவர் ஷிகனோரி ஷிகா பதவியில் இருந்து விலகிவிட்டார். அணு உலை வியாபாரத்தில் மட்டும் 6.3பில்லியன் டாலர் இழப்பு என்ற நிலையில் உள்ளது. ஜப்பானின் பொருளாதாரமே இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பங்குச்சந்தையில் அதன் விலை 8 சதவீதமாக விழுந்தது. வெஸ்டிங் ஹவுஸ்,டோஷிபா முதலீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன.


வெஸ்டிங் ஹவுஸ் நிர்வாகத்தில் முறையான கட்டுப்பாடுகள் (control) இல்லை என்று ஏமாற்றமான செய்திகள் வந்தவண்ணமாக இருக்கிறன. இந்த சூழ்நிலையில் மோடி எதற்கும் செவிசாய்க்காமல் ஆலோசனைகளை, தவிர்த்துப் போகும் இடங்களில் எல்லாம் நாட்டையே உலுக்கப்போகும் ஒப்பந்தங்களை சரமாரியாக கையெழுத்திடுகிறார்.


அதுவும் ஆபத்து நிறைந்த அணுஉலைகளினால் விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு தேவையில்லை என்று விதிவிலக்கு அளித்து ஒப்பந்தம் போட்டுள்ளார். இவரெல்லாம் தேச பக்தியின் பிதாமகர்களாக தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்கிறார்கள். மோடிக்கு கோடிகள் என்ன வேடிக்கையா? தோடி ராகம் பாடிக் கொண்டிராமல் தகுந்தவர்களை நாடி சிறந்த முடிவுகளைத் தேடி எடுப்பாரா?


Who's Online

We have 39 guests and one member online

  • Leonardrof