மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மக்பரா மினாராவோடு அமைந்துள்ள பிபிகா மஸ்ஜிதில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என முகலாய மன்னர் பகதூர்ஷா ஜாபரின் கொள்ளுப்பேரனும் பிபிகா மக்பரா பராமரிப்பாளரு மான இளவரசர் யாகூப் ஹபீபுத்தீன் துஸி, தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பிபிகா மஸ்ஜிதே மக்பரா வளாகத்தின் வெகு அருகில் உள்ளது. அங்கு தொழுகை நடத்த ஏன் அனுமதிக்கப்படவில்லை? இது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சமயம் சார்ந்த உரிமைகளுக்கு எதிரானதாகும் என்றும் துஸி கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்தில் இடம்பெற்றுள்ள பள்ளிவாசலில் மூன்று தொழுகைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் (தினம் 5 வேளை. வாரம் ஒரு முறை ஜும்மா மற்றும் ஆண்டில் இருமுறை பெருநாள் தொழுகைகள்). அதைப்போன்றே அமைக்கப்பட்டுள்ள பிபிகா மக்பராவில் அனுமதி மறுக்கப் படுவது தொல்லியல் துறையின் குற்றம் சாட்டப்படுகிறது.


பிபிகா மக்பராவின் வரலாற்று சிறப்பு


முகலாயமன்னர் அவ்ரங்க சீப் 1660 ம் ஆண்டில் அவரது முதல் மனைவி தில்ராஸ் பானு உடலை அடக்கம் செய்த இடத்தில் முகலாய கட்டிடக்கலை சிறப்புடன் எழுப்பப்பட்டதுதான் பிபிகா மக்பரா என்ற இடமாகும். அந்த வளாகத்தின் அருகே மஸ்ஜித் ஒன்று கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் நாடு விடுதலைக்குப்பின் தொல்லியல் துறை தொல்லை தரத்தொடங்கியது.


பிபிகா மக்பரா அவ்ரங்கசீப்பின் தாயாரான மும்தாஜின் சமாதி அமைந்துள்ள தாஜ்மஹால் போன்றே அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது தக்கனி தாஜ் மஹால் அல்லது தாஜ் ஆப் டெக்கான் என அழைக்கப்படுகிறது.


மன்னர் அவ்ரங்கசீப் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டிடக்கலை, அவற்றின் ஆடம்பர செலவு ஆகியவற்றின் மேல் ஆர்வம் காட்டவில்லை. மாறாக அதன்மீது கடும் விமர்சனம் வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ஆனால் டெல்லியில் உள்ள முத்து மஸ்ஜித் மாமன்னர் அவ்ரங்கசீப் நிர்மாணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது முதல் மனைவி தில்ராஸ் பானு என்ற ராபியாவுத் தவ் ராணி க்காக தாஜ்மஹால் போன்று அமைத்தார். இது மராட்டிய மாநிலம் அவரங்கா பாத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.


அங்கு வரும் பார்வையாளர்கள் தொழுகை நேரம் வரும் போது அந்த வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி வாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக எழுப்பி வந்த நிலையில் முகலாய பேரரசின் கடைசி வாரிசு துஸி தொல்லியல் துறையை நோக்கி கோரிக்கை மகஜர் சமர்ப்பித்துள்ளார். தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்.


Who's Online

We have 50 guests and no members online