மாட்டுக்கறி மீதான தடை என்பது பிராமணர்களின் மோசமான கலாச்சாரமாகும் என தெலுங்கானா மாநிலத்தின் பூபால பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளி தெரிவித்திருக்கிறார்.


இது மக்களின் உடல் நிலையை மோசமாக பாதிக்கும் குறிப்பாக பட்டியிலின மக்களுக்கு அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக மாட்டிறைச்சியை சாப்பிட்டு வந்த மக்களுக்கு உடல் நிலையில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். என்றும் முரளி குறிப்பிட்டார்.


இந்த அதிரடி பேச்சு உலக காசநோய் தினதன்று நடந்த பேரணியில் அவர் பங்கேற்றபோது வெளிப்படுத்தியதாகும். கேடு கெட்ட பிராமணிய கலாச்சாரம் நம்மை மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது என்கிறது. இவை எல்லாமே சுத்த நான்சென்ஸ் (முட்டாள் தன மானது) என குமுறி தீர்த்து விட்டார். ரங்கா ரெட்டி, மஹபூப் நகர் மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் முரளியை அணுகி முன்பு போல் அவர்களால் உடல் உழைப்பை தர முடியவில்லை என்றும் இதற்கு காரணம் மாட்டுளீகறி எளிதில் கிடைப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.


மாட்டு இறைச்சி சாப்பிட்டு எங்கள் உடல் வலிமை வளர்த்தோம் தற்போது அது முன்பு போல் கிடைப்பதும் இல்லை என்று தம் வேதனையை கொட்டியதை ஆட்சித்தலைவர் முரளி அந்தப்பேரணியில் குறிப்பிட்டார். வனத்துறை வேட்டையாடும் விஷயத்தில் கெடுபிடி காட்டி வந்தாலும் பழங்குடியின மக்களுக்கு காட்டுப்பன்றிகளை வேட்டையாட அனுமதிக்கப்பட்ட விஷயத்தை முரளி சுட்டிக்காட்டினார். காட்டுப்பன்றிகள் கூட அபூர்வ விலங்கின வகையை சார்ந்ததுதான் என சுட்டிக்காட்டினார்.


மக்களின் மனம் அறியாது அவர்களின் நலத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு இதுவரை அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்தன. தற்போது அதிகாரிகளிடம் இருந்தும் குமுறல்களும் எதிர்ப்புகளும் வரத்தொடங்கி விட்டன. இது ஓர் அடையாளம் தான் ஆரம்பம் தான் இனி என்ன நடக்கும்? பார்ப்போம்.

 


Who's Online

We have 35 guests and one member online

  • Leonardrof